Wednesday, 22 February 2017

இன்னிலை 17 Innilai 17

கால்கலத்தால் சேர்பொருளும் கண்ணற்றார் தேர்பொருளும்
நாலிரண்டால் கூடும் நலப்பொருளும் - கோல்தாங்கிக்
கோடும் அரசிற்(கு) உரியாமே தொல்புவிக்கீழ்
ஆடும் பொருளோடு அணைந்து.   17

  • நிலத்தில் வண்டியிலும், நீரில் கப்பலிலும் வரும் பொருள்களுக்கான உல்கு என்னும் சுங்க வரி
  • கண்ணோட்டம் இல்லாதவர் அழிவழக்கால் சேர்த்த பொருள்
  • வருவாயில் ஆறில் ஒரு பங்க என வந்த நல்ல பொருள்.

ஆகியவற்றைச் செங்கோல் செலுத்தி வாங்கிக்கொள்ளுதல் அரசனுக்கு உரிமை.
  • நிலத்துக்கு அடியில் புதையலாகக் கிடைக்கும் பொருளும் அரசனுக்கு உரியது.


பொருட்பால்
பொய்கையார் பாடிய இன்னிலை
கடவுள் வாழ்த்து + 45 பாடல் | வெண்பா
காலம்சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி