Saturday, 18 February 2017

திரிகடுகம் 16 TiriKadugam 16

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும்,-  உண்ணுநீர்க்
கூவல் குறையின்றித் தொட்டானும், - இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.              16

  1. நிலவுலகில் உயர்ந்த புகழினைப் பெற்றவன்
  2. கற்புள்ள மனைவியை  உடையவன்
  3. நீருண்ணும் கிணறு வெட்டியவன்

இந்த மூவரும் உலகில் சாவா உடம்பு பெற்றவர் ஆவர்.  

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி