Saturday, 25 February 2017

கைந்நிலை 11 KaiNilai 11

எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூமி
பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையும்
முறிகிளர் நன்மலை நாடன் வருமே
அரிதுரைத்திவ் இல்லில் நமக்கு.        11

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்

நம் கண்ணைக் கிண்டும் அழகிய பன்றி பூமியைகத் தன் முகத்தால் கிண்டும்.
புள்ளிகளால் நம் கண்ணைக் கிண்டும் மயில் அந்தப் புழுதியைத் தன் காலால் கிண்டும்.
அந்த மலை இளமையான தளிர்களைக் கொண்டது.
அந்த மலையின் தலைவன் அவன்.
அவன் தன் அரிய செயல்களைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டு நம் இல்லத்துக்கு வருகிறான்.

குறிஞ்சி
மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
60 பாடல் | வெண்பா யாப்பு
காலம் – சங்கம் மருவிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டு,


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி