Sunday, 26 February 2017

பழமொழி 10 PalaMoli 10

பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
இருதலைக் கொள்ளி என்பார்.                   10.         

பெரிதும் தோழமை உடையவர் குறையைத் தீர்க்க வேண்டும். 
அல்லது பகைவர் குறையைத் தீர்க்க வேண்டும். 
நண்பர், பகைவர் ஆகிய இருவர் குறைகளையும் ஒரு செயலால் தீர்த்துவைக்க முடியுமா? 
இரண்டு பக்கமும் தீ பற்றி எரியும் சிறிய கொம்பினை ஒருவன் கையில் பிடிப்பது எப்படி?

பழமொழி வேறு வண்ண எழுத்தில்
முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


1 comment:

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி