Monday, 31 October 2016

அகநானூறு Agananuru 376

அரசன் கரிகாலன் முன்னிலையில் 
ஆட்டன்-அத்தி நீச்சல் நடனம் ஆடிய வரலாறு

காதல் பரத்தை மனைவி போன்ற நடத்தை கொண்டவள். சிலப்பதிகார மாதவி கோவலின் காதல் பரத்தை. 

மனைவியிடம் செல்லும் காதலனை, (தலைவனை) காதல் பரத்தை வேண்டுகிறாள்.

மகிழ்ந! செல்லாதே. உனக்கு நான் செய்யவேண்டிய கடமை உள்ளது.

அத்தி காவிரியாற்றுக் கழார் நீர்துறையில் நீச்சல்-நடனம் ஆடிக் காட்டினான். 
நீந்தத் தெரியாத யானை பெருவெள்ளத்தில் உருண்டு புரண்டு நீந்துவது போல இவன் வேண்டுமென்றே திறமையுடன் உருண்டு புரண்டு நீரில் ஆடினான். 

அது ஓடும் புனல் மிகுந்து மருத மரம் ஓங்கி நிற்கும் கழார் என்னும் ஊரிலிருந்த துறை. 

கழார் நெற்கதிர் வளம் மிக்க ஊர். அந்தக் கழார் ஊருக்கு முன் இருந்த துறை ‘கழார் முன்துறை’.

அரசன் கரிகால் வளவன் தன் சுற்றத்தாருடன் அதனைக் கண்டு களித்தான். 

அத்தியின் சிவந்த கால்கள் நீருக்கு மேலே வந்து புரண்டன. 
இசைக்கேற்ப அவன் ஆடினான். 
என்றலும் ஈரம் (தண்பதம்) பட்டிருந்த அவன் கால்களில் பண்ணிசை எழவில்லை. 
வயிற்றில் கருநிறக் கச்சு (belt) அணிந்திருந்தான். 
வயிற்றில் அணிந்திருந்த பொன்னால் செய்த பாண்டில் அணிகலனும், அதில் இருந்த மணிகளும் நீருக்கு மேல் புரளும்போது ஒலித்தன.

இப்படி ஓடும் புனலில் விளையாடும் அத்தியின் அழகில் மயங்கி அவனுடன் ஆடிய ‘காவிரி’ என்னும் பெண் அவனை நீரோடும் போக்கில் அழைத்துச் சென்று ஒளித்துக்கொண்டாள். 

காவிரி அத்தியை ஒளித்து வைத்துக்கொண்டது போல் நான் உன்னை வைத்துக்கொண்டிருக்கிறேன். 

நீ உன் மனைவியிடம் சென்றால் நான் உன்னிடம் பிணக்கிக்கொள்ள முடியுமா? 
பிணக்குப் போட்டுக்கொள்ள மாட்டேன். 
என்றாலும் நீ செல்வதை நினைத்து என் நெற்றி பசந்து கிடப்பதைப் பார். 

நீ செல்வதாயின் குட்டுவன் ஆளும் மரந்தை நகரம் போன்ற என் அழகை என்னிடமே இருக்கும்படித் தந்துவிட்டுச் செல். 

இதுதான் என் வேண்டுகோள்.
 • மரந்தை – குட்டுவன் தலைநகரம். அசும்பிலுள்ள இறா மீன் வள்ளைக் கொடியை மயக்கிவிட்டு வயலில் தெறித்து விழும் நீர்வளம் மிக்க ஊர்.
 • அசும்பு – வயலுக்கு நீரூட்டும் கால்வாய்
 • வள்ளை – உள்ளே துளை உள்ள கொடி. அழல் போன்று செந்நிறம் கொண்ட கொடி
 • பீள் – வலிமையான தோகையில் கதிர் வந்துகொண்டிருக்கும் நெல்லம்பயிர்
 • இறா – தூய்மையாள தலையுடன் வளைந்த உடலைக் கொண்டது
 • குட்டுவன் – குரங்கு போல் பிடரி மயிர் கொண்ட குதிரையை உடையவன்
 

பாடலில் அத்தி என்னும் ஆண்மகனும் 
காவிரி என்னும் பெண்மகளும் 
இப்படி ஆடினர்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  மருதம்

செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன்
கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,             5
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,        10
காவிரி கொண்டு ஒளித்தாங்கு அன்னோ!
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,     15
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக்
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!

காதற்பரத்தை புலந்து சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

A historical event of synchronized swimming in the presence of King KariKalan is depicted in this poem.

A wife-like concubine prevents her lover not to leave from her saying these words.

You my lust-monger do not leave me. 
I have something to offer you more.

Atti, a synchronized player performed revealing his talent in Cauvery river pool at Kalar village in the presence of King KariKalan and his family. 

He swims rolling in his talent as an elephant swims rolling in flood. 

It is the river-pool where tree Marutam grows in its bank. 
The village KALAR is surrounded by paddy field.

While Atti depicts his show his legs appear upside down in water. 
He dances with rhythm of music without sound in one time. 
In another time his bells in his golden ornament tied in waist rings while his belly rolls upside.

Cauvery, a girl who plays along with him fell in love with him; and pulled him down the stream of water. 

As the girl Cauvery hides the swimmer, I am having you in my house. 

If you go to your house to join with your wife, how can I prevent sulking? 

However please see my forehead with love-sick Pasalai. 

If you want to leave me please return my old beauty which you have taken with you. This is my humble request.


அகநானூறு Agananuru 375

தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

இகுளை! “உன்னை விட்டுச் சென்றவர் திரும்பி வருவேன் என்று சொன்ன காலத்தை நீட்டிக்க மாட்டார். 
வருந்தாதே” என்று கூறுகிறாய். 
அதற்காக நான் வருந்தவில்லை. 
அவர் சென்ற இடத்து நிகழக்கூடியனவற்றை எண்ணி வருந்துகிறேன். 

அந்த வழியில் உள்ள கல்லா இளையர் தான் கற்றதில் தனக்குள்ள வில் திறமையைச் சோதித்துப் பார்க்கக்கூடியவர்கள். 

புதியவர்களிடம் பெறக்கூடிய பொருள் இல்லை என்றாலும் தம்மைச் சோதித்துப் பார்த்துக்கொள்வதற்காக, வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்று பறவைகளுக்கு ஊட்டிக் கும்மாளம் போடுவர் (கலிப்பர்)

நரிக்கூட்டம் உடல் கறியைத் தின்னும். 
வழியில் மேயும் ஆண் கழுகுகளின் விரல்களில் நெய்த்தோர் (இரத்தம்) கறை படிந்திருக்கும். 
அங்குள்ள நிழலில் இவை மட்டுமே இருக்கும்.

போர்த் திறமையும், கணைய மரம் போன்ற தோள் வலிமையும் கொண்டவர் சோழர். 
அந்தச் சோழர்களின் பெருமகன் ‘இளம்பெருஞ்சென்னி’. 

அவன் தன் புகழை நிலைநாட்டுவதற்காகவும், தன் குடிமக்களைக் காப்பாற்றும் கடமைக்காகவும், விட்டகுறை தொட்டகுறையை முடிப்பதற்காகவும் பாழி நகரில் இருந்த செங்கோட்டையை (செம்பு உறழ் புரிசை) அழித்தான். 

அந்தக் கோட்டையில் தன்னை எதிர்த்த ‘வம்ப வடுகர்’ குடிமக்களின் தலைகளை யானைக் காலால் மிதிக்கச் செய்து சவட்டினான் (துவட்டினான்)

அப்படிப் பகைவரைக் கொன்ற யானையின் கொம்பு போல் காடே அச்சம் தருமாறு தோற்றமளிக்கும். 

அந்தக் காட்டு வழியில் அவர் சென்றிருக்கிறார். 

அவர் துன்பம் ஏதும் இல்லாமல் திரும்புகிறார் என்று தெரிந்தால் என் கண் அழாது அல்லவா?

இகுளை = தலைவி தோழியை விளிக்கும் சொல்.
இகுதல் = மனம் இடிந்து போதல். தலைவிக்காகத் தோழி வருந்துபவள்.
இகு < இகுளைபாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

''சென்று நீடுநர்அல்லர்; அவர் வயின்
இனைதல் ஆனாய்'' என்றிசின் இகுளை!
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலை,                        5
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்  10
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்,       15
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்,
ஆழல மன்னோ, தோழி! என் கண்ணே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
இடையன் சேந்தங் கொற்றனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The lady says to her friend-maid.

My friend! you console me saying “the man, your lover who left you here and gone away for earning will not stay at his earning place more than the prescribed time he assured you; and he will return in time; don’t be worry shedding tears”. 

I hope as you say. 
But I am worrying for another purpose. 

The youngsters in that area where he is passing will test their talent shooting arrows on the newcomers passing by the way even if they have nothing in their hands to robe; and enjoy throwing their body to eat eagles with their blood stained nails. 

The foxes also eat the body. 
He has to rest such a kind of dreadful area.

King IlamPerunSenni, the Man of Chola family having enormous strength destroyed the fort at Pali city; and drove his elephant to thrush the heads of his opponent force of Vadugar race. 

The area he passes appears like that of his elephant’s blood stained tusk. 

If I hear the news of his safety my eyes will not drop tears.


அகநானூறு Agananuru 374

மழை பொழிகிறது. 

கடலில் நீரை முகந்து சென்று, திசைகள் இருளும்படி, நிலம் தெரியாதபடி நீர் ஓடுமாறு, சுழன்று துன்புற்று, மேகம் பிளப்பது போல் பலவாறு மின்னி, தாழ்ந்து பணிவது போல நிலத்தருகில் வந்து, சோர்ந்துவிட்டது போல இடி முழக்கம் இல்லாமல் மழை பொழிகிறது. 

பாணர் யாழிசை போன்ற ஒலியுடன் மழை பொழிகிறது. 

மழை பொழிந்து நின்ற மறுநாள் விடியற் காலத்தில் களர்-மணல் மேடுகளில் மூதாய்ப் பூச்சிகள் குறு குறுவென ஓடுகின்றன. 

நீல மணியும் பவள மணியும் கொட்டிக் கிடப்பது போலக் கொட்டிக் கிடக்கும் காயாம் பூக்களுக்கு இடையில் மூதாய்ப் பூச்சிகள் ஓடுகின்றன. 

இப்படிக் கார்காலம் செம்மாந்த பொலிவுடன் தோன்றுகிறது. 

இப்போது அந்தக் கார்காலத்தின் மாலைக் காலம். 

தேரோட்டுவதில் தேர்ச்சி பெற்ற வலவ, நம் தேர் செல்லட்டும். 

பருத்த தோளும், சிறுத்த இடையும், திருந்திய அணிகலனும் கொண்ட காதல் மனைவி நம் விருந்தைப் பெறட்டும். 

இப்படித் தலைவன் தன் தேரோட்டியிடம் கூறுகிறான்.

 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  முல்லை

மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி,
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு,
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
போழ்ந்த போலப் பல உடன் மின்னி,
தாழ்ந்த போல நனி அணி வந்து,              5
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
இடியும் முழக்கும் இன்றி, பாணர்
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை,        10
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
மணி மண்டு பவளம் போல, காயா
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய,
கார் கவின் கொண்ட காமர் காலை,                       15
செல்க, தேரே நல் வலம் பெறுந!
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே!

பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
இடைக்காடனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The next day of heavy rain velvet mites are moving on the clay-sand soil where Kaya flowers shed spreading on. 

It appears like shaped coral among blue diamond. 

It is now evening in rainy season. 
You my driver drive the horses in chariot fast with your talent. 
I will reach my house to give my wife enjoyment as she is longing for. 

She is a girl of beauty with vast breast and narrow hip to be enjoyable. 

The hero says to his chariot driver.


Sunday, 30 October 2016

அகநானூறு Agananuru 373

நான் இங்கே படும் பாடு தெரியாமல் அங்கே என் காதலி கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பாள். 
நான் என்ன செய்வேன் என்று பொருள் தேடச் சென்ற இடத்தில் தலைவன் கலங்குகிறான்.

1

வேற்றரசன் வென்று பாழ் பட்டுக் கிடக்கும் போர்முனை. 
பீர்க்கங்கொடி படர்ந்திருக்கும் வீடு. 
மான்கள் விளையாடும் மன்றம். 
பருத்த கால்களை உடைய யானை உரசித் தூண் சாய்ந்த பொதியில். 
காட்டில் நடந்த களைப்புத் தீரச் செய்வதறியாமல் இங்குத் தங்கியிருக்கிறேன். 

மாலை நேரத் தனிமை என்னை வாட்டுகிறது. 
வீறாப்பு கொண்ட உள்ளம் என்னை மேலும் செல்லத் தூண்டுகிறது. 

தொங்கும் கையில் விரல்களைக் கோத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். 

இப்படி இருக்கும் என் நிலைமையை வீட்டில் இருக்கும் என் காதலி உணரமாட்டாள்.
 • செதுக் காழ் = செதுக்கிய வயிரம் பாய்ந்த மரத்தூண்
 • புலம்பு = தனிமை
 • பணை = பருமை
 • மன்றம் = மேற்கூரை இல்லாத பொது இடம்
 • பொதியில் = மேற்கூரை உள்ள பொதுவிடம்
 • மீளி = வீரன்
2

என் காதலி இருண்ட கூந்தலை உடையவள். 
செம்பொன்னால் செய்த அணிகலன்களை உடையவள். 
மடந்தைப் பருவத்தினள். 
நள்ளிரவு இருட்டில் பஞ்சணையை அணைத்து வெப்ப மூச்சை மெல்லிதாக விட்டுக்கொண்டு, என் நெஞ்சத்தோடு பிணக்குப் போட்டுக்கொண்டு, கண்ணீர் மார்பகத்தை நனைக்க, அதனை விரல் நகத்தால் வழித்துத் தெறித்து எறிந்தவண்ணம் வருந்திக்கொண்டிருப்பாள்.
 • தோள் = மார்பகம், கண்ணீர் விழும் என்பதால் இதனை உணரலாம்.
 • உகிர் = நகம்

3

யானைப் படையுடன் வேந்தர் முற்றுகையிட்டுத் தாக்கும்போது ஒற்றை மதிலின் உச்சி ஞாயிலில் இருக்கும் மன்னன் போலத் தூங்காமல் இருப்பாள். 
அவள் இரங்கத் தக்கவள். 
நான் என்ன செய்வேன்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து,
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து,
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி,
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில்,
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று,            5
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப,
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு,
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்;
2
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை,          10
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி,
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா,
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து,
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல்   15
3
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல,
துயில் துறந்தனள் கொல்? அளியள் தானே!

பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

Without knowing my difficulties here, my lover will be suffering with tears; what I shall do, the man on his way on earning in a distance place says to his mind.

I am staying in a destroyed village by war where creeper ridge-gourd is growing; deer are playing; and the wooden pillar has fallen when elephant scratches its body on the pillar. 

I am taking rest alone in the evening here. 
My prestige moves me to proceed further. 

I am sitting clubbing my hands on thigh and pondering my lover. 
My lover could not realize my position.

She is a girl with dark hair and with ornaments of gold, in her just crossed teenage. 

He will be sighing and picking her tears fallen on breast with her nail and throwing. 

She will be in tension as a king aiming in fort-top gallery when a monarch seizing. 

It is pity on her part. 
What shall I do?


அகநானூறு Agananuru 372

நெஞ்சே!

பாழி நகரில் முதுவேளிர் குடியினர் பாதுகாக்கும் செல்வம் போல உன் காதலி பெற முடியாத பண்பை உடையவள் என்று நினைந்து வருந்துகிறாய்.

என்றாலும் நீ அவளிடம் சென்று பெறாமல் திரும்புகிறாய். 
பனை மரத்தில் கட்டிய பலரும் ஆடும் ஊஞ்சல் முன்னும் பின்னும் செல்வது போலச் சென்று திரும்பி வருந்துகிறாய்.

குதிரைமலை அரசன் அஞ்சியை அலைக்கழித்த வெற்றியாளரின் துடியில் கட்டியிருக்கும் வார்க்கயிறு துடியின் இரண்டு பக்கத்தையும் அடிப்பது போலச் சென்று திரும்புகிறாய்.

நஞ்சு மணியை இழந்த பாம்பு போல் வருந்துகிறாய்.
மலை மேல் இருக்கும் கோட்டை போல் அவள் பெற முடியாதவள் என்பது உனக்குத் தெரியவில்லையா?

பாழி 

தண்டிக்கும் கடவுள் காக்கும் ஊர். 
தேன் கூடுகள் தொங்கும் பாறைகளைக் கொண்டது. 
பெண்தெய்வம் அணங்கு வாழுமிடம். 
முதுவேளிர் மக்கள் தங்களின் அரிய செல்வங்களைப் பாதுகாப்பாக வைக்கும் அகன்ற நகரம்.

குதிரை 

நீண்ட பாதை கொண்டது குதிரை மலை. 
அதியமான் நெடுமான் அஞ்சி அதன் அரசன். 
அஞ்சி கூர்மையான வேலைக் கொண்டவன். 
இவனை, கொடிய வில்லினை உடைய ஆண்கள் சிலர் போர் முனையில் தாக்கினர். அலைக்கழித்தனர். 
அஞ்சியை வென்று துடி முழக்கத்திடன் ஆடினர். 
துடியில் வார் கட்டப்பட்டிருக்கும் 
அந்த வாரின் நுனியில் இருக்கும் அரக்கு துடியின் இருமுகத் தோலிலும் அடிக்கும். 
அந்த வார் போல நெஞ்சே, நீ என் காதலியிடம் போவதும் வருவதுமாக இருக்கிறாய்.

பாம்பு 

மணியை உமிழ்ந்து அதன் வெளிச்சத்தில் இரை தேடி மேயும் என்பது ஒரு நம்பிக்கை. 
அந்த மணியை இழந்த பாம்பு போல் நீ உன் காதலியைப் பெற முடியாமல் வாடுகிறாய்.

அணங்கியோள் 

அழகால் வருத்திய காதலி. 
பெறுதற்கு அரியவள். 
காப்புடன் மலைமேல் இருக்கும் வேந்தனின் கோட்டை போல் பெறுவதற்கு அரியவள். பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி

அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப,
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண்,
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, 5
வருந்தினம் மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்,
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி,
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் 10
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்,
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா,
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர்
கோடணி எயிலின் காப்புச் சிறந்து,        15
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே.

அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The man who could not meet his lover in love-rendovaz speaks to his mind.

You, my mind! 

You are suffering from love pain returning home without meeting your lover in rendovaz. 

She is as un-reachable as the wealth saved in locker in the town ‘Pali’ by Kosar-race.     

You are moving here and there as the swing goes front and back.

You are slashing me as the lather end beats the both the faces of the ‘Tudi’ drum when it was beaten after the victory against King Anji by some warriors.

You are suffering as a snake missing its pernicious stone.

You must know that she is not reachable as fort on the top of a hill.

Pali is the town, where wealth of Velir-race is saved in lockers. 
There were honey-hives in rock caves. 
The God gourds the town; and Angeles are roaming.

Anji is the king of the region ‘Kuthirai’-hills – an expert in his spear fight


Saturday, 29 October 2016

அகநானூறு Agananuru 371

அழகிய விளிம்பு விசிந்து பாயும் மூங்கிலால் செய்யப்பட்ட வில்லும், கூரிய முனையுள்ள அம்பும் வைத்திருக்கும் ஆண்கள் செவ்விய (செயிர்) பார்வையுடன் எய்ய, தன் பெண்மான் விழுந்தது என்று, முறுக்கிய கொம்பு கொம்பு கொண்ட ஆண்மான் வருத்தத்துடன் நெடுந்தொலைவு சென்றது. 

துள்ளி விளையாடும் தன் குட்டிகளுடன் துன்பத்துடன் சென்றது. 
மேயாமல் வருத்தத்துடன் சென்றது. 
துன்பத்தால் களர்நிலப் பள்ளத்தில் (நெய்தல்) தேங்கியுள்ள நீரையும் உண்ணவில்லை. 
வேல் பாய்ந்த புண்ணுடன் கிடக்கும் வீரன் போலத் துன்பத்துடன் படுத்துக் கிடந்தது. 

இப்படிப் படுத்துக் கிடக்கும் பாதையில், பசுமை இல்லாமல் வெம்பிக் கிடக்கும் பாழ்நிலப் பாதையில் நான் செல்கிறேன்.

நெஞ்சே!

நம் காதலி நம்மைக் காட்டிலும் துன்புற்று கண் பனி பொழிய அழுதுகொண்டிருப்பாள். 
அவள் நிலைமை என்ன ஆகுமோ?
 • காதலி – நாம் இருந்தபோது போது முடித்த கூந்தலை உடையவள்
 • போது – மலரும் பூ. அவள் சூடிய பூ. “தெளிந்த நீரை உடைய சுனையில் பூத்திருப்பது போல் தோன்றுகிறதே” என்று தேன் தேடும் பறவைகள் விரும்பும் பூ

 


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை     5
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்,
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து,         10
என்னஆம் கொல் தாமே ''தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்'' என நசைஇ
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
எயினந்தை மகன் இளங்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

A hunter of arid track shoots down a female deer using his bow and arrow. 

The male deer runs away for a distance. 
The calves play with the male without knowing any pain in mind. 
But the male worries on the loss. 

It does not grass; and drink water standing aside. 
It lies on ground as a wounded warrior with feeling pain in mind. 
I am passing through such a painful route.

You, my mind! 
Have you seen the future of my lover? 
She will be dropping tears. 
Once, her eyes were as beautiful as the petals of water lily in pond; she appeared wearing flowers on her braided hair. 

What shall I do? 
The man on his way on earning wealth is thinking in this way.


Agananuru 370

Boys and girls will play Vandal game. At the sun-set they return home. Hero, heroine, friend-maid and other play-mates played Vandal game. The friend-maid says something to her lady, the heroine which will apply to the man of the lady’s lover. She says:
We played all the day Vandal. It becomes dark. We are to return to our thatched hut. There you will lay on bed without sleep in love sick. Knowing this your father stops you going out. It is not possible to you without coming and mingling others. Now she diverts her words her lady only. “I shall not live without playing out”, you say. Then it is alright. You alone stand here Sea-God. I shall return home as a mad girl leaving my ornaments here as a gymnastic girl appears without ornaments. It is also not possible for me because, you are my friend. (With these word hopes that he will get her lady marring.)
 • Making dolls in clay and playing is called ‘Vandal’.  

clay dolls \ clay doll making is a game of pastime called 'Vandal'
வண்டல் பாவை \ வண்டல் மண்ணில் பாவை செய்தல் "வண்டல் பாவை" விளையாட்டு. இது கூட்டு விளையாட்டு. போட்டி விளையாட்டு அன்று 
A poem by: AmMuvanar
The text is belongs to second century B.C. or earlier.


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி