Wednesday, 31 August 2016

கார் நாற்பது KarNarpatu 23

ஒண்டொடி | ஒண் தொடி
ஒளி மிக்க வளையல் அணிந்தவள்
இந்ந ஒண்டொடி எதற்காக அவனை நினைத்து நெஞ்சை வருத்திக்கொண்டிருக்கிறாள். திரண்டு காட்டும் முத்துக்களைப் போல முல்லை நிலமெங்கும் மழைக்கட்டிகள் உருள்கின்றன. புயல் வீசுகிறது. வானம் மழை-அழகுடன் திகழ்கிறது.
அவர் வந்துவிடுவார் அன்றோ?
தோழி சொல்கிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

கண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று; எவன் கொலோ,
ஒண்டொடி! ஊடும் நிலை?           23

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 22

போர் வீரர்களாகிய இளையர் ஈரக் கண்ணோடு பார்க்கின்றனர்.
குதிரைகளும் குஞ்சம் கட்டிப் பொலிவுடன் காணப்படுகின்றன.
பெண்ணின் இளமை நலம் போலக் காடு பூத்திருக்கிறது.
வளமுடையார் செல்வம் போல காடு நிறைவுடன் காணப்படுகிறது.
தலைவன் நினைவு.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

இளையரும் ஈரங் கட்டு அயர, உளை அணிந்து,
புல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார்
இள நலம் போலக் கவினி, வளம் உடையார்
ஆக்கம்போல் பூத்தன, காடு.        22

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 21

கலைத்திறன் கொண்ட அவர் தேர் சென்ற வழியில் முல்லை படர்ந்து பூக்கிறது.
சிறந்த நெற்றியைக் கொண்டவளே!
மழை போன்ற கண்ணும், பேதைமை மொழியும் வாயும் கொண்டவளின் பல்வரிசை தெரிவது போல முல்லை பூத்துக் கிடக்கிறது.
தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து.          21

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 20

பெருமிதம் கொண்ட மன்னனின் போர்தொழில் மடிந்துவிட்டது. வழியெங்கும் மழை பொழிந்து பதமாக உள்ளது. நஞ்சு-மணி கொண்ட நாகம் நடுங்கும்படி இடி முழங்குகிறது. போருக்கெழுந்த மன்னன் படை போல மழைமேகக் கூட்டம் செல்கிறது.
நானும் திரும்பவேண்டும்.
தலைவன் இப்படி நினைக்கிறான்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன;
ஆறும் பதம் இனிய ஆயின; ஏறொடு
அரு மணி நாகம் அனுங்க, செரு மன்னர்
சேனைபோல் செல்லும், மழை.               20

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 19

மராம்பூ வெள்ளை நிறம்
சிவந்த கால்களைக் கொண்ட மரா மரமானது கலப்பை ஏந்திய பரசுராமன் நிறம் போல், வெள்ளை நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. பசுமையான வளையல்களை அணிந்துள்ள திருமகள் தோளைப் பெறவேண்டி அவர் பொருளீட்ட நீண்ட வழியில் சென்றுள்ளார். அவர் பின்னே என் நெஞ்சும் செல்கிறது.
தலைவி தோழியிடம் இப்படிச் சொல்கிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

நாஞ்சில் வலவன் நிறம் போலப் பூஞ் சினைச்
செங் கால் மராஅம் தகைந்தன; பைங் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி,
நெடு இடைச் சென்றது, என் நெஞ்சு.     19

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 18

கல் பயின்று கிடக்கும் காட்டைக் கடந்து அவர் சென்றுள்ளார். அவர் திரும்பி வரவேண்டும் என்பதற்காக இடி முழக்கத்துடன் வானம் பொழிகிறது. அதனால், வறுமையில் வாடுபவர் போல வாடிக்கிடந்த காடானது, செல்வர் மனம் போலச் செழிப்புற்று அழகுடன் திகழ்கிறது.
தோழி தலையிடம் சொல்லி மகிழ்கிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

கல் பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப,
செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற காடு.  18

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 17

பாறாங்கல் கொண்ட மலைமேல் படமெடுக்கும் பாம்பைக் கொன்று, இடிக்கும் குரலோடு ஏறிச் செல்லும் மேகம், கடலைப் பருகி, ஒன்று திரண்டு, இருண்டு, வானம் மழை பொழிய வருகிறது. அதைக் பார்த்ததும் அவர் வந்துவிடுவார் என்னும் நம்பிக்கையில் என் நெற்றியானது பிறை போன்ற பண்டைய அழகினைக் கொண்டு திகழ்கிறது. நான் ஒரு அறிவில்லாப் பேதை.
தலைவி இவ்வாறு சொல்லித் தன்னை நொந்துகொள்கிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

அறைக் கல் இறு வரைமேல் பாம்பு சவட்டி,
பறைக் குரல் ஏறொடு பெளவம் பருகி,
உறைத்து இருள் கூர்ந்தன்று, வானம்; பிறைத் தகை
கொண்டன்று, பேதை! நுதல்.     17

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 16

அசோகு
தளிர்
இந்தத் தளிர் போன்ற மேனி
பருத்த தோளினை உடையவளே!
செயலைத் தளிர் போன்ற உன் மேனி பசலைநோய் கொண்டிருப்பது கண்டு கருங்குயில் அழுகிறது. மயில் நடுங்குகிறது. வானம் உருமுகிறது.
அவருக்குத் தெரிந்துவிடும்.
வந்துவிடுவார்.
இவ்வாறு சொல்லித் தலைவயைத் தோழி தேற்றுகிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

கருங் குயில் கையற, மா மயில் ஆல,
பெருங் கலி வானம் உரறும் - பெருந்தோள்!
செயலை இளந் தளிர் அன்ன நின் மேனிப்
பயலை பழங்கண் கொள.               16

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 15

குறிஞ்சி
திருந்திய அணிலன்களைப் பூண்டவளே!
குவிந்த கொத்துகளில் பூத்திருக்கும் குருந்த மலரில் இருந்துகொண்டு தேனீக்கள் பாடுகின்றன்ன. தும்பிகள் ஊதுகின்றன. இதுதான் அறிகுறி.
காதலர் கைவிடுபவர் அல்லர்.
இவ்வாறு சொல்லித் தலைவயைத் தோழி தேற்றுகிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

திருந்திழாய்! காதலர் தீர்குவர் அல்லர்
குருந்தின் குவி இணர் உள் உறை ஆகத்
திருந்து இன் இளி வண்டு பாட, இருந் தும்பி
இன் குழல் ஊதும் பொழுது.         15

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 14

ஒளி திகழும் அணிகலன் அணிந்தவளே!
செல்வம் கொண்டுவரச் சென்ற உன் காதலர் உடனை வரவிருப்பது தெளிவாகிவிட்டது. கார் காலம் தன் முல்லைப் பூப் பற்களைக் காட்டிக்கொண்டு இனிமையாக மெல்ல சிரிப்பதைப் பார்.
அதுதானே அவர் வருவேன் என்று சொன்ன காலம்?
இவ்வாறு சொல்லித் தலைவயைத் தோழி தேற்றுகிறாள்.
வயங்கிழை | இக்காலம்

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

செல்வம் தரல் வேண்டிச் சென்ற நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம்; வயங்கிழாய்!
முல்லை இலங்கு எயிறு ஈன, நறுந் தண் கார்
மெல்ல இனிய நகும்.         14

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 13

ஏந்தலாக உயர்ந்து அழகுடன் திகழும் அல்குலை உடையவளே!
உன்னிடம் அவர் ஏமம் (நிம்மதி) அடைந்தாரே அந்தக் கூந்தல் தாழ்வது போல மழை பொழிகிறது. வேந்தன் வாள் வீசிவது போல் கண் கூசும்படி மின்னுகிறது.
அவர் சொன்ன காலம் இது.
வந்துவிடுவார்.
இவ்வாறு சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

ஏந்து எழில் அல்குலாய்! ஏமார்ந்த காதலர்
கூந்தல் வனப்பின் பெயல் தாழ, வேந்தர்
களிறு எறி வாள் அரவம் போலக் கண் வெளவி,
ஒளிறுபு மின்னும், மழை.             13

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 12

மை அழகை உண்ணும் கண் கொண்டவளே!
மயில் போன்ற சாயலை உடையவளே!
சந்தேகத்துக்கு இடமில்லை. அவர் வருதல் உறுதி.
எண்ணெய் பூசப்பட்ட யானை போல் பெருமேகங்கள் நாள்தோறும் வானத்தில் ஏறுகின்றன பார்.
இப்படிச் சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்;
நெய் அணி குஞ்சரம் போல, இரும் கொண்மூ
வைகலும் ஏரும், வலம். 12

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

கார் நாற்பது KarNarpatu 11

வணர் ஒலி ஐம்பாலாய்!
சேரும் செல்வத்தைத் தேடிக்கொண்டு வருவதற்காகச் சென்றுள்ளார்.
கோடல் பூ தலை தூக்கி ஆடும் பாம்பு போல் குலை குலையாக முல்லை நிலமெல்லாம் பூத்து அவர் வரவைத் தெரிவிக்கின்றன பார்.
தோழி தலைவியை இப்படித் தேற்றுகிறாள்.
கோடல், வெண்காந்தள்

ஐம்பால்

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்,
வணர் ஒலி ஐம்பாலாய்! வல் வருதல் கூறும்
அணர்த்து எழு பாம்பின் தலைபோல் புணர் கோடல்
பூங் குலை ஈன்ற புறவு.    11

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

கார் நாற்பது KarNarpatu 10

என் தோழி!
வானத்தில் இடி முழங்குகிறது.
ஆண்யானை அதனோடு எதிர்முழக்கம் செய்கிறது.
காட்டாற்று ஒலியும் கேட்கிறது.
குதிரை பூட்டிய அவர் தேர் வரும் ஒலியும் கேட்கிறது.
இவை உன் மேனி தளிர்ப்பதற்காக வருகின்றன.
தோழி தலைவிக்குக் கூறுகிறாள். 

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

வான் ஏறு வானத்து உரற, வய முரண்
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்பக்,
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி!
மேனி தளிர்ப்ப, வரும்.     10

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

கார் நாற்பது KarNarpatu 9

உன் கண் போலக் கருவிளைப் பூக்கள் பூத்துள்ளன. கார்காலம் வந்துவிட்டது என்பதைக் காட்ட, தோன்றி மலர் எரியும் தீயைப் போலப் பூத்திருக்கிறது. உன் தோள் வளையல் முன்கைக்கு நழுவும்படி உன்னை விட்டுவிட்டுப் பிரிந்தவர் வரப்போகிறார் என்பதை அவை சொல்லிக் காட்டுகின்றன.
இப்படிச் சொல்லித் தோழி தலைவியை தேற்றுகிறாள்.
கருவிளை

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று;
எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை
முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்,
இன் சொல் பலவும் உரைத்து.    9

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

கார் நாற்பது KarNarpatu 8

பெண்மை இயல்புகளைக் கொண்ட நல்லவளே!
உலக வாழ்வு மண்ணாகும் இயல்பினைக் கொண்டது. இதில் நிலைபெற்றிருப்பது புகழ். இந்தப் புகழைத் தேட அவர் பொருளீட்டச் சென்றுள்ளார். பிரிந்துள்ளார். அவர் வரவேண்டும் என்று நீ கண்ணில் மை தீட்டிக்கொள்கிறாய். அதனைத் தெரிவிப்பது போலக் காயா மலர் அரும்பிப் பூத்திருக்கிறது.
அவர் வந்துவிடுவார்.
தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
காயா

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

மண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி,
பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்
கண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும்
நுண் அரும்பு ஊழ்த்த புறவு.         8

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

கார் நாற்பது KarNarpatu 7

மாந்தளிர் போன்ற மேனிநலம் உடையவளே!
விரும்பி வருபவர்களுக்குக் கொடை தருவதற்கும், விரும்பாத பகைவரை அழிப்பதற்கும் உதவும் பொருளை ஈட்டிவரச் சென்றுள்ளார். பொறாமை இல்லாத புகழ் போலவும், வேள்வித் தீ போலவும் மின்னி மழை பொழிகிறது. அவர் வந்துவிடுவார்.
தோழி தலைவிக்குச் சொல்லித் தேற்றுகிறாள்.
மாந்தளிர் | மகளிர் மேனி மாந்தளிர் போன்றது 

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்,
தற் செய்வான் சென்றார்த் தரூஉம், தளரியலாய்!
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல
எச் சாரும் மின்னும், மழை.         7

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

கார் நாற்பது KarNarpatu 6

மா வடுவை இரண்டாகப் பிளந்து வைத்தது போன்ற கண்ணை உடையவளே! வருந்த வேண்டாம்.
வளையல் போட்டால் நிற்காமல் வழுவிக்கொண்டிருக்கும் உன் தோளைப் பார்த்து, இடி முழங்குகிறது; நீண்ட இடைவெளியில் சென்றிருக்கும் உன்னுடையவரை “காலத்தை நீட்டிக்காமல் திரும்பிவிடு” என்று அவருக்குச் சொல்வதாக முழங்குகிறது. தோழி தலைவியிடம் சொல்கிறாள்.
மாவடுப் பிளவு போன்ற கண்

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி,
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;
கடிது இடி வானம் உரறும், நெடு இடைச்
சென்றாரை, 'நீடல்மின்' என்று. 6

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

Tuesday, 30 August 2016

கார் நாற்பது KarNarpatu 5

பொருள் இல்லாதவன் என்று பிறர் சொல்வார்களே, என்னும் சொல்லுக்குப் பயந்து பொருளீட்டச் சென்றுள்ளார்.
பகழி போல் உண் கண்ணாய்!
அவர் சொல்லிய காலத்தில் வருவதை சொல்பவை போல மேய்கின்றன. முல்லை நிலத்தில் பவளம் சிதறிக் கிடப்பது போல மேய்கின்றன. பார்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோல் உண் கண்ணாய்! பொய் அன்மை; ஈண்டைப்
பவழம் சிதறியவை போலக் கோபம்
தவழும் தகைய புறவு.      5

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

கார் நாற்பது KarNarpatu 4

விளையாடும் மகளிர் போல மயில்கள் ஆடுகின்றன. கொன்றை (கடுக்கை) பூத்துக் குலுங்குகிறது. பாடும் வண்டுகள் பூவில் ஊதும் ஒலியுடன் தேன் உண்ணுகின்றன. 
பணைத்தோளி!
அவர் சொல்லியபடி வந்துவிடுவார். உன் பசலை நோயைத் தீர்க்கும் மருந்து இதுதான்.
பணைத்தோளி
பருத்த தோளினை உடையவள்

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,
காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும் பருவம், பணைத் தோளி!
வாடும் பசலை மருந்து.   4

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

Blog Archive

எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி