Saturday, 30 April 2016

நற்றிணை Natrinai 106

தலைவன் தன் தேர்ப்பாகனிடம் தன் காதலி செய்ததைச் சொல்கிறான்.
பாக! உனக்குத் தெரியுமா? கடலலை மணலில் ஏறித் திரும்புகிறது. அந்தப் பகுதி மணக்கும்படி நண்டு வரிக்கோடு போட்டுக்கொண்டு ஓடி விளையாடிவிட்டு வளையில் நுழைந்துகொள்கிறது. இதனை பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் என் ஆசை நோயை வெளிப்படுத்தினேன். அவள் மறுமொழி எதுவும் சொல்லாமல் தன் கையில் மணந்துகொண்டிருந்த ஞாழல் மலரைத் தடவி கையால் உதிர்த்துக்கொண்டிருந்தாள். அந்த மடப்பெண் அறிவு மயங்கி நின்றாள். (இதன் பொருள் என்னவாக இருக்கும்?)

ஆடு வரி அலவன் | நண்டு

ஆடு வரி
நண்டு ஆடிய வரி 

(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 106 நெய்தல்

அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல் 
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள 
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது 
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு 
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப 
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் 
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி 
முறி திமிர்ந்து உதிர்த்த கையள் 
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே

பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான் தேர்ப்பாகற்குச்சொல்லியது
தொண்டைமான் இளந்திரையன் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

Natrinai 105

On his way earning he is pondering his situation.
You my heart! You have crossed a long distance leaving her at home. Here are, you see, trees of silk-cotton covered with dry-creepers. The wind is blowing shaking the trees and bending bamboo trees. The elephant family is crossing the arid land without water and shades of trees. You didn’t think of these difficulties of route and crossed a long distance. She is there at home with fragrant hair that smells like white water-lily in the spring-pond of western hill ruled over by the king Kuttuvan. Now, what are you going to do?
White water-lily
Poet: MudatTirumaran
Poem belongs to 2nd century B.C.


நற்றிணை Natrinai 105

பொருளீட்டச் செல்லும் தலைவன் வழியில் தன் நெஞ்சைக் கேட்கிறான்.
முள் போன்ற நிழல் கொண்ட இலவ-மரத்தில் காய்ந்த கொடிகள் சுற்றிக்கொண்டுள்ளன. அது அதிரும்படியும், மூங்கில் சாயும்படியும் கொடிய காற்று வீசுகிறது. இந்த வழியில் கடுமையாக நடக்கும் யானை தன் கன்றுகளுடன் வருந்துகிறது. நெடுந்தொலைவு நீரோ, நிழலோ இல்லை. இத்தகைய கொடிய காட்டுவழி என்று எண்ணாமல் நெடுந்தொலைவு வந்துவிட்டாய்.
நெஞ்சே!
குட்டுவன் ஆளும் (கொல்லிக்)குடவரையில் இருக்கும் சுனையில் வண்டுகள் மொய்க்கும்படிப் பூத்துக்கிடக்கும் வெண்குவளை மலர் மணக்கும் கூந்தலை உடையவள் அவள். அவள் துன்புறும்படி விட்டுவிட்டு நெடுந்தூரம் வந்துவிட்டாயே!
இனி என்ன செய்யப் போகிறாய்?  

குவளை வான்போது
வெண்குவளை
(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 105 பாலை

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து 
ஒளிர் சினை அதிர வீசி விளிபட 
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில் 
கடு நடை யானை கன்றொடு வருந்த 
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் 
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண் 
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன் 
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை 
வண்டு படு வான் போது கமழும் 
அம் சில் ஓதி அரும் படர் உறவே

இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது
முடத்திருமாறன் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

Natrinai 104

“Is there any girl so greedy to hug her lover being well aware of the dangers in the route in which he is passing though” she thinks.
Striped lined tiger will fight against an elephant. The children of hill-trodden people will beat their small play-drams enjoying the fight, standing on a huge rock safely. This sound will make parrots feeding in the field of millet. He is the man of this kind of mountain slop. I am waiting for him to hug. He is coming through a small way wherein the trench lives to kill. Thundering will make the sleeping snakes awake. Knowing these kind of dangers I am forecasting to plunge into his chest. Is there anybody like me so selfish? 
Lion and elephant fighting 
 
Poet: PeriSattanar
Poem belongs to 2nd century B.C.


நற்றிணை Natrinai 104

அவன் வரும் வழியின் கொடுமையையும் பொருட்படுத்தாமல் அவன் மார்பை விரும்பும் என்னைப் போன்றோர் வேறு யாராவது இருக்கிறார்களா என்று அந்தக் காதலி நினைக்கிறாள்.
1
அழகிய வரிக்கோடுகளையும், பிளந்த வாயையும் உடைய ஆண்-வரிப்புலி யானையோடு போரிடுகிறது. அங்கே இருந்த பெரிய பாறைமீது ஏறி நின்று பார்க்கும் மகிழ்ச்சியில் குறவர்-சிறுவர்கள் தாம் விளையாடும் சிறிய தொண்டகப்-பறையை முழக்குகின்றனர். அந்தப் பறையொலி தினைப்புனத்தில் மேயும் கிளிகளை ஓட்டுகிறது. இப்படிப்பட்ட ஆரவாரம் மிக்க மலைநாட்டின் தலைவன் அவன். அவன் மார்பைத் தழுவ விரும்புகிறேன். என்னைப் போல வேறு யாராவது இருக்கிறார்களா?
2
பார்ப்பதற்கே அச்சம் தரும் மலைச்சாரலில் உள்ள சிறிய வழியில் அவன் வருகிறான். மலைப் பிளவுகளில் பாம்பு இருக்கும் வழியில் வருகிறான். இடி தாக்கும் வேளையில் வருகிறான். இவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் அவன் பார்பைத் தழுவ விரும்புகிறேனே!
 
புலி யானை போர் 
(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 104 குறிஞ்சி

1
பூம் பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றை 
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே 
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக் 
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த 
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது 
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் 
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் 
யானே அன்றியும் உளர்கொல் பானாள் 
2
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர 
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு நீர் 
போக்கு அற விலங்கிய சாரல் 
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே

தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது
பேரி சாத்தனார் பாடல்


கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

Friday, 29 April 2016

Natrinai 103

The hero is passing through an arid track to earn money for his family leaving his lover at home. On the way he happened to see male dholes pondering its female with babies lying on the ground without milk in its breast to feed. That is a dreadful forest where male-elephant the breaks neem-tree and becomes mad with love-tears in eyes. The hero inquires his heart whether he would continue in his venture or return back to home.     

dholes

Poet: Marudan IlaNaganar
Poem belongs to 2nd century B.C.

நற்றிணை Natrinai 103

பொருள் தேடச் சென்ற தலைவன் காட்டு வழியில் ஆண்-செந்நாய் ஒன்று தன் பெண்-செந்நாய் குட்டிக்கு ஊட்டப் பால் இல்லாமல் வருந்திக்கொண்டிருப்பதைப் பார்த்து, தன் நெஞ்சைக் கேட்கிறான்.

நெஞ்சே! எது நல்லது என்று நீயே தெரிந்து சொல். ஈர்க்கில் சிறிய இலைகளை உடைய பெரிய வேப்ப-மரத்தை வீழ்த்தி உண்ட ஆண்யானை மதமும், சினமும் கொண்டு, கடந்து சென்றுவிட்ட காடு இது. இங்கே பெண்-செந்நாய் நீர் அல்லாத ஈரம் அதாவது குட்டி போட்ட ஈரம் பட்டுக் கிடக்கிறது. பசியோடு கிடக்கிறது. பால் இல்லாத வெற்று முலை கொண்ட தன் வயிற்றை நிலத்தில் கிடத்திக்கொண்டு கிடக்கிறது. அதனைப் பார்த்த அதன் கணவன்-செந்நாய் மாயமாக வேட்டைக்குச் செல்கிறது. வேட்டை கிடைக்கவில்லை. தன் பிணாவை நினைத்துக்கொண்டு பொய்மை அறியாத தன் நெஞ்சில் வருத்தம் கொள்கிறது. இப்படிப்பட்ட புதுமை அனுபவம் உள்ள கொடிய காட்டு வழியில் நாம் வருந்திக்கொண்டிருக்கிறோம். மேலும் பொருளுக்காக முயலலாமா, அல்லது திரும்பலாமா, நெஞ்சே, நீதான் தெரிந்துகொண்டு சொல்லவேண்டும்.
 
ஆண் செந்நாய்

செந்நாய் வேட்டை

(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 103 பாலை

ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் 
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று 
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் 
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து 
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் 
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் 
மாயா வேட்டம் போகிய கணவன் 
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் 
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே 
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் 
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே

பொருள்வயிற் பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக் கழறியது
மருதன் இள நாகனார் பாடியது

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

Thursday, 28 April 2016

திருக்கை வழக்கம் TirukKai Valakkam

திருக்கை வழக்கம் பாடல் மூலம்
 
63 நாயன்மார்கள் சிலை 
கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி
மங்கை பிரியாமல் வாழுங்கை – திங்களணி 1

எம்பிரான் எம்பெருமான் இந்திரா திபர்க்கரிய
தம்பிரா னுக்குரைத்த சந்தனக்கை – அம்பொன் 2

வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக்கை – கிளைவாழக் 3

கச்சித் தலத்தானைக் கல்லால் எறியமறந்
தெச்சில் தயிர்ச்சோ(று) எறியுங்கை – பச்சைமிகு 4

தேமா வடுக்கமரிற் சிந்திற்றென் றேகழுத்தை
யாமா வெனவே அரியுங்கை – வாமமறை 5

ஓதுபுகழ் நாயனுடன் ஊரன் புறமென்றே
மோதுதடி கொண்டு முடுக்குங்கை – தீதகல 6

அஞ்செழுத்தே யொன்றாகி அப்பரெனத் தோன்றியரண்
செஞ்சரணத் தேபூசை செய்யுங்கை – வஞ்சியர்பால் 7

தூதரனைத் தான்விடுத்தசுந்தரனைக் காணாமல்
பேதமறத் தன்வயிறு பீறுங்கை – கோதகன்ற 8

சேர்ந்த மணவாசல் சிவனடியார்க் காமகடன்
கூந்தலரிந் தேமகிழ்ந்தே கொடுக்குங்கை – ஏந்தரிய 9

வட்டால் உறுபொருளால் வந்ததொண்டர்க் காமூர்க்கர்
தட்டா தமுதளிக்கும் தங்கக்கை – எட்டாது 10

போக்கு வரவற்ற பூரணனை நிந்திப்பார்
நாக்கை யரிந்துபுகழ் நாட்டுங்கை – ஆக்கையுறு 11

தாயிலார் தந்தையிலார் தம்மைமனத் துள்வைத்து
வாயிலார் பூசிக்கும் வாகுளகை – ஆய 12

வினையடு வாராகி விறல்கொள் பொருளை
முனையடுவார் நல்கிய முன்கை – வினையகல 13

அன்றுவரும் மாதவருக்(கு) ஆக்கியமாங் கனிகேட்க
ஒன்றவரு வித்தளித்தே ஓங்குங்கை – நின் றதுலாக் 14

கோலாலக் கோவணத்துக் கள்வர்தங் கோண்முழுதும்
ஆலாவ ளந்தறிந்த மாண்புளகை – யேலவார் 15

கூந்தலாள் தன்னைக் குலமறையோர்க் கீந்தொக்கல்
ஏந்துவா ளாலேவிண் ஏற்றுங்கை – சாந்தமுற 16

ஓதுபரனை உணர்த்துஞ் சிவாகமங்கள்
வேத புராணங்கள் விரிக்குங்கை – தீதில் 17

அருமறையைச் செந்தமிழால் அப்ப ரெனவந்து
திருமுறைக ளாச்சேர்க்குஞ் செங்கை – பெருமையுடன் 18

ஏதமில் வேதத்தை எடுத்தே சிவாலயத்துள்
ஓதுவா ராய்வந்தே ஓதுங்கை – காதலுடன் 19

வேதமொரு நான்கினையும் மிக்கதமிழ் நாலடியால்
ஓதியுரைத் தேயுலகில் ஒளிருங்கை – போதமுற 20

வேள்வியோ ரைந்தோடு வேளாளத் தோமமுமே
ஆள்வினை யாலெடுத் தாளுங்கை – நீணிலத்துள் 21

ஆன்படு நெய்விட் டளவிலா வாகுதியால்
வான்படச் சைவத்தீ வளர்க்குங்கை – மேம்படவே 22

கல்லார்கள் என்னாமற் கற்றோர்கள் என்னாமல்
எல்லாரை யுங்காத்தீ டேற்றுங்கை – வல்லமைசேர் 23

மைம்மா முகிலுலகை வாழ்விக்கு மேன்மைபோல்
கைம்மா றிலாதளிக்கும் கற்பகக்கை – சும்மையார் 24

ஊருணி நீர்போல் உலகத் தவர்க்கெல்லாம்
பேரறிவா லீயும் பிரதாபக்கை –பாரில் 25

உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
கொடுக்க விசைந்த குளிர்க்கை – யிடுக்கணினான் 26

மாமறையோர் மன்னர் வருவினைஞர் சங்கரர்க்குந்
தாமலையா மற்கொடுத்துத் தாங்குங்கை – மாகளத்து 27

ஏற்கவந்த ஆதுலர்க்(கு) இல்லையென் னாதுநெல்லை
கார்க்கையினான் முக்கையிட்ட கற்பகக்கை – தீர்க்கமுடன் 28

செம்பொன் விளைகளத்தூர் செந்நெல் விளைந்ததனை
நம்பிமறை யோர்க்களித்த நாணயக்கை – அம்பொற் 29

பார்பூட்டு மன்னர் பரிகரிபூட் டக்கதிரோன்
தேர்பூட்ட ஏர்பூட்டும் செம்பொற்கை – வீரமதன் 30

ஐங்கோல் தொடுக்க அணைகோல் எடுக்கவுழும்
பைங்கொல் பிடிக்கும் பதுமக்கை – இங்கிதமாம் 31

சீர்படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்குப்
பேர்படைத்த மேழி பிடிக்குங்கை –கார்படைத்த 32

மிஞ்சுமதி கீர்த்தியைப்போன் மேதினியெல் லாந்தழைக்கச்
செஞ்சாலி நாற்றைத் தெளிக்குங்கை – எஞ்சாமல் 33

வெள்ளைக் களைகளைந்து வீறும் பயிர்தழைக்க
கள்ளக் களைகளைந்த கற்பகக்கை – வள்ளுறையும் 34

விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர்
நெற்போர் முதற்போர் நெரித்திடுங்கை – பற்பலவாம் 35

காணி உழுதுண்டு கழிபொருளெல் லாங்கொண்டு
வாணிபங்கள் செய்தங்கு மாற்றுங்கை – மாணிவர்ந்த 36

ஐந்திணையின் பொருள்யாவும் அறத்தாலே தாம்தேடித்
தந்திணையில் வந்தணையத் தாங்குங்கை – முந்திப் 37

பிறர்பொருளுந் தம்பொருள்போற் பேணியேமூன் றாமெனவே
அறவளவை யாலளக்கும் அங்கை – திறமுடனே 38

ஊர்காக்கு மரக்சு(கு)உறுதியுழவாம் அதற்காய்
ஆள்காப்பே காப்பாக ஆளுங்கை – வான்சுவைபோல் 39

எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை
வண்மைபெற உண்டாக்கும் வாகுளகை – நுண்மையதாய் 40

மண்ணிற் கடலின் மலையிற் பெரியதென
எண்ணியெழு திக்கொண்டுத்த ஏற்றக்கை – திண்ணமதாய் 41

மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை  
தானந் தருமந் தழைக்குங்கை – ஈனமிலா 42

தொடையில் எழுஞ்சிலந்தித் தோற்றுவிக்கப் பட்டின்
புடவை கிழித்த பெருங்கை – துடவைதனில் 43

ஏரெழுப தோதியாங் கேற்றுங் களரியிலே
காரி விடநாகம் கடிக்குங்கை – பாரதனில் 44

நாவிற் புகழ்கம்ப நாடற் கடிமையென்றே
மாவைக் கரைத்துமுன்னே வைக்குங்கை – ஆவலுடன் 45

சங்கையிட்டுத் தள்ளாமல் தன்சோற்றை வந்தவற்குப்
பங்கையிட் டிரட்சித்த பங்கயக்கை – பொங்கமுடன் 46

பொன்னா லமுதும் பொறிக்கறியுந் தான்கொணர்ந்து
நன்னா வலர்க்களித்த நாணயக்கை – பன்னரிய 47

வையகமெங் குந்தேடி வந்ததமி ழோன்புகழச்
செய்யமுடி யைக்கொணுத்த செம்பொற்கை – துய்யபுகழ் 48

அன்றீந்த நாகெழுப தானவெரு மைத்திறத்தைக்
கன்றோடு நல்குங் கடகக்கை – வென்றிதரும் 49

ஓரானை நூறா யிரக்கலநெல் லோர்கவிக்குச்
சீராக நல்குந் தியாகக்கை – நேரா 50

எறும்புக்கும் ஆஸ்ப்பதந்தான் இல்லையென்ற மட்டில்
திறம்புக்க யானைதருஞ் செங்கை – யரும்புதனில் 51

எண்ணா யிரமுனிவர்க்(கு) ஏற்றபடி அப்படியே
பண்ணா கக்கொடுக்கும் பராக்கிரமக்கை –விண்ணாடர் 52

மூக்கிற் புகைபுரிந்த மூதாவின் வாயிடத்து
நீக்கியபை நாக்கதனில் நீட்டுங்கை – ஊக்கமுடன் 53

பாவல னெச்சில் படுமாங் கனியெடுத்து
ஆவலுடன் நன்றாய் அருந்துங்கை – தாவரிய 54

வண்டமிழோன் தானுதைத்த வாகுளகா லுக்குப்பொன்
வெண்டாயமிட் டேவணங்கும் வெற்றிக்கை – புண்டரிகக் 55

கையாற் புலவன் கனகமுடி மேற்குட்டச்
செய்யாழி பண்ணியிட்ட தீரக்கை – பையவே 56

மிக்கபுல வனுக்காக வேசிமனை மட்டாகத்
தக்கசிவி கைக்கணை தாங்குங்கை – ஒக்குமென 57

ஏதமற்ற கீர்த்தியைக்கொண்  டேட்டகத்தி லேயடிமைச்
சாதனமிட் டேகொடுத்த தங்கக்கை  - மேதினியிற் 58

சூலி முதுகிற் சுடச்சுடவப் போதுசமை
பாலடிசில் தன்னைப் படைக்குங்கை – சாலவே 59

நாணந் தராமல் நடுங்காமல் கூசாமல்
பாணன் பிணத்தைப் பரிக்குங்கை – காணவே 60

தண்டமிழோன் தன்மனத்திற் சந்தேகந் தீரக்கூழ்
உண்டவயிற் றைப்பீறி யூற்றுங்கை – கண்டளவில் 61

வன்னி யிடைமூழ்கி வானோர் பழிகழுவிக்
கன்னிதனை யேமணந்த காட்சிக்கை – துன்னுமொரு 62

பேருலகை யெல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின்
கூரிலொரு வன்கழுத்தைக் குத்துங்கை – பாரறிய 63

திருப்பருத்திக் குன்றிற் சிவனால யங்கள்பல
விருப்புடனே கட்டி வீறுங்கை – பருப்பதம்போல் 64

அட்டதிக்கும் எண்கீர்த்தி ஆயிரத்தெட் டானைதனை
வெட்டிப் பரணிகொண்ட வீரக்கை – திட்டமுடன் 65

கூர்த்த புகழண்ட கோளமட் டும்படர
நாற்றிக்கு மேருவினி நாட்டுங்கை – ஆர்த்தபுகழ் 66

மேழிக் கொடிசிங்க வெற்றிக் கொடிகுயிலின்
வாழிக் கொடியே மருவுங்கை – நீளுலகில் 67

சாற்றுமொட்டக் கூத்தன் சரசகவி சொல்லப்பால்
ஆற்றுநீர் கொணர்ந்த ஆண்மைக்கை – நேர்த்திபெற 68

விளைபயி ரைப்பார்த்து விரைக்கால் புலத்தை
வளைய மதிலிட்டு வருங்கை – தளையவரும் 69

நீலி தனக்கஞ்சி நின்றவணி கேசனுக்காக்
கோலி யபயங் கொடுக்குங்கை – மேலச்சம் 70

வீறுபெரும் பறையன் வீயாம லோர்கலத்தில்
சோறு பிசைந்துண்ட சுடர்மணிக்கை – பேறுறும் 71

பேர்காக்க இந்திரற்காப் பேசுபிணை என்றிறைமுன்
கார்காக்கும் ஒப்பில் கமலக்கை – தீர்வில் 72

மனக்கவலை யுற்றவணி கன்முன் னேனின்று
தனைக்கா வெனக்கேட்ட தற்கை – வனக்குன்றின் 73

மங்கையொரு பாகற்கும் மன்னவர்க்கும் மாதவர்க்கும்
துங்கமணி முடியைச் சூட்டுங்கை – அங்கன் 74

தலாபாரந் தாங்கும் தனியரசும் பொன்னும்
துலாபாரந் தட்டினில் தூக்குங்கை – இலாபமுறும் 75

பண்டுமுடி நாவிதனால் பற்றற்பாற் றன்றென்றே
கொண்டைகட்டிக் கொண்டாளுங் கோமளக்கை – பண்டையதாம் 76

எட்டாருந் தொண்டைநாட்(டு) எழுபத்தொன் பானாகும்
நாட்டாரென் றேபுகழை நாட்டுங்கை – வாட்டமிலா 77

ஆர்த்த குடிமக்கள் அறுமூவர்க் காம்வழக்கைத்
தீர்த்தெழுதி ஒட்டகத்திற் சேர்க்குங்கை – சீர்த்த 78

தொகாநாட் டார்கூடித் துரைக்கெழுது மேட்டில்
மகாநாட்டா ரென்றுவைக்கும் வண்கை – சுகமயமாய் 79

உள்ளங் குழைந்தாய் உழவாற் பெருக்கவிதை
பிள்ளையெனக் கேயுதவப் பேணுங்கை – வள்ளல் 80

கதமிறொண்டக் காவலன் காமுறு மக்கட்குள்
முதலியெனப் பேர்படைத்த முன்கை – சிதமாய் 81

உசாவு கடல்கடைய வோடதி யீந்து
தசாங்க மிறைநல்கத் தாங்குங்கை – நிசாங்கமதாய் 82

சங்கருகு தீவட்டிச் சாமரைப தாகைகுடை
பொங்குதொண்டன் நல்கப் புரக்குங்கை – கங்குல்பகல் 83

நடக்க யிருக்கை நகைக்கை மிடிதீர்க்கை
கொடுக்கை செழுங்கை குளிர்க்கை – தொடுத்ததெல்லாஞ் 84

சீராக வுண்டாக்குஞ் செங்கைப் பெருங்கருணைக்
காராளர் கறிபகப்பூங் கை 85

திருக்கை வழக்கம் முற்றும்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி