Thursday, 18 February 2016

விவேக சிந்தாமணி VivegaSindamani 1


கணபதி கருணைக் கோபுரத்தில் இருக்கிறார். 
அவரைக் கைகூப்பித் தொழுத காலந்தொட்டு நமக்கு வரும் துன்பங்கள் விலகிப் போய்விடும். 
பிறவியிலேயை நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கும் வலிமை மிக்க வினைகள் (தலைவிதித் துன்பங்கள்) விலகிப் போய்விடும். 
அன்னை வயிற்றில் பிறந்திருக்கிறோமே அந்தப் பிறவித்துன்பம் விலகிப் போய்விடும் (பிறவி இல்லா வீடு பேறு பெறலாம்)
நம்மோடு ஒட்டிக்கொண்டு போகாமல் இருக்கின்ற கவலைகள் விலகிப் போய்விடும். 
நம்மிடம் இருக்கும் நல்ல பண்புகள் மேலும் அதிகமாகும்.

பாடல் (வெண்பா)

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
குணமதிக மாம்கருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால் (கடவுள் வணக்கம்)

அல்லல் போம் | வல்வினை போம் | அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் | போகா துயரம் போம் | நல்ல குணம் அதிகமாம் | கருணை கோபுரத்தில் மேவும் கணபதியை கைதொழுதக்கால்


யாப்பு - விருத்தம்

அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி (பகுத்தறிவு மனச்சுடர்)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி