Tuesday, 26 January 2016

நல்வழி 25 Nalvali 25

ஆன முதலில் - மானம் - மதி - ஏழ் பிறப்பு

தேடி முதலாக வைத்திருக்கும் பொருளை விட அதிகமாக ஒருவன் செலவு செய்தால் என்ன ஆகும்.
தன்மானம் அழிந்துபோகும்.
புத்தி கெட்டுச் செயல்படுவான்.
அவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள அனைவர்க்கும் திருடனாகத் தென்படுவான்.
ஏழு பிறப்பிலும் கொடியவனாக மாறிவிடுவான்.
எண்ணிப்பார். உண்மை விளங்கும்.

பாடல்

ஆன முதலில் அதிகஞ் செலவானான்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு (25)

ஆன முதலில் அதிகம் செலவானால், மானம் அழிந்து, மதி கெட்டு, போன திசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லான் ஆம் நாடு

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி