Tuesday, 26 January 2016

நல்வழி 24 Nalvali 24

நீறு - நெற்றி - பாழ்

திருநீறு இல்லாத நெற்றி பாழ்.
நெய் இல்லாத உணவு பாழ்.
பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ்.
கருத்து மாறுபாடு இல்லாத உடன்பாறப்பாளர் இல்லாத உடம்பு பாழ். (துணை வேண்டுமே)
மனைவி இல்லாத மனை பாழ்.
பாழ் = 0
பாழ் = ஒன்றுமில்லாத வெற்றிடம்
பாடல்

நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி யில்லா மனை. (24)

நீறு இல்லா நெற்றி பாழ், நெய் இல்லா உண்டி பாழ், ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ், பாழே மடக்கொடி இல்லா[த] மனை.


12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி
நெற்றியில் திருநீறு 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி