Thursday, 28 January 2016

மூதுரை 11 Mudurai 11

அரிசி - உமி

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம்-கொண்டபேர்
ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி

ஏற்ற கருமஞ் செயல். (11)

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும், 
விண்டு உமி போனால் முளையாதாம், 
கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது  அளவு இன்றி ஏற்ற கருமம் செயல்.

நெல்லில் முளைப்பது அரிசியில் இருக்கும் பண்டுதான் (பரவிக்கிடக்கும் பழமை-மரபுக் கூறுதான்). என்றாலும் அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் உமி நீங்கிய அரிசி முளைக்காது. அதுபோல ஏற்றுக்கொண்ட ஒரு செயலைச் செய்வதற்கு எவ்வளவுதான் பேராற்றல் உடையவராக இருந்தாலும், செயலுக்கு உதவும் கருவி முதலானவற்றைச் செய்தளிப்போர் இல்லாமல் செயலை நிறைவேற்ற முடியாது.



12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை
முளை கட்டிய பாசிப்பயறு
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி