Saturday, 31 December 2016

நற்றிணை 335 Natrinai 335

நிலா வானில் உலாவுகிறது.
கொந்தளிக்கும் கடலலையின் ஓசை கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
ஆற்றில் அலை மோதிக்கொண்டிருக்கிறது.
ஆற்றுப் புனல் பாயும் கானலில் முள் இருக்கும் தாழம்பூ குழியிலைக் குடையில் போட்ட சோறு போல் மொட்டு விரித்துப் பூத்திருக்கிறது.
அடிக்கும் காற்றில் அடங்கி நிற்காத மணம் கமழ்கிறது.
பனை மரத்தில் இருக்கும் அன்றில் என் எலும்பே உருகும்படி தன் துணையை அழைக்கும் குரல் கேட்கிறது.
நான் மன மாற்றத்துக்காக யாழை மீட்டி என் விரல்கள் ஓய்ந்தனவே அன்றி நள்ளிரவுப் பொழுது எனக்குப் போகவே இல்லை.
என் காம உணர்வு பெருகிக்கொண்டே இருக்கிறது.
என் காமத் துன்பத்தைப் போக்குவார் யாரும் இல்லை.
என்ன செய்வேன் என்று தோழியிடம் சொல்லிக்கொண்டு தலைவி கலங்குகிறாள்.
 
யாழ் மீட்டுகிறேன், பொழுது கழியவில்லை, என்கிறாள் தலைவி, தன் தோழியிடம் 
உய்யாமை = கடந்து செல்லாமை, பொழுது போகாமை
உயவல் = மன உளைச்சல்
ஏர்தா = உலவு
களைஞர் = போக்குவோர்  
குடை = உணவு உண்ணும் குடைமட்டை
புணரி = கடல்
பைதல் = துன்பம்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,            5
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று;  10
காமம் பெரிதே; களைஞரோ இலரே!

காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது.
வெள்ளிவீதியார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

Natrinai 334

Female monkey belongs to a family with face red in color and hands black in color baths in waterfalls; swing holding the top of the bamboo; mates with its male at the mountain-pond. He, my lover is the man of such mountain.
He comes to have my lust in midnight, crossing waterfalls with the help of lightning. When he does so how can my life be comfort, the lady asks her friend-maid.
 
Red face monkey joking 
Poet: Aiyur Mudavanar
This is a poem of second century B.C.


நற்றிணை 334 Natrinai 334

கருநிற விரலும், செந்நிற முகமும் கொண்ட குரங்குகளின் உறவுக் கூட்டத்தில் மந்திக் குரங்கு, பெரிய மலையடுக்கத்தில் இறங்கும் அருவியில் நீராடும். பின்னர் ஓங்கி உயர்ந்திருக்கும் மூங்கிலின் உச்சியைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடி மகிழும். பின்னர் வேங்கை மலர்ந்து கொட்டி மணக்கும் கல்லுச்சுனையில் தன் ஆணோடு கூடித் திளைக்கும். இப்படிப்பட்ட மலையகம் கொண்ட நிலப்பரப்பின் தலைவன் என் காதலன்.
மழை பொழிந்துகொண்டிருக்கும் நள்ளிரவில், அருவி கொட்டும் மலையடுக்கத்தில், தனியொரு வேலை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, மின்னல் வெளிச்சத்தில், வருகிறான் என்றால், தோழி! என் உயிரின் நிலைமை என்ன ஆகும்? எண்ணிப்பார்.
தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
கலை = ஆண்குரங்கு \ மந்தி = பெண்குரங்கு
கிளை = உறவுக்கூட்டம்
தூங்கல் = தொங்கிக்கொண்டு ஆடல்
மாரி நின்ற – நின்ற என்பது நிற்கும் என்னும் பொருள் தரும் நிகழ்காலப் பெயரெச்சம்
வசி = மழை
வீ = மலர்
 
கருவிரல் மந்தி செம்முகக் குரங்கு
சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்தன
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்   5
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ தோழி! நம் இன் உயிர் நிலையே?

தோழி இரவுக்குறி முகம் புக்கது.
ஐயூர் முடவனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

Natrinai 333

Rain stopped its duty of poring; went up to the sky. Hence, bamboo plants lost their beauty. The elephant and tiger fight to drink the little water springs among the pebbles in low river bed. Your lover passes through such a way to earn wealth for helping others. There hears an omen; a lizard speaks whenever you are in thought of him, indicating he will be with you shortly. Don’t worry in love sick, the friend-maid consoles her lady. 

Poet: Kallikkudi Pudam Pullanar
This is a poem of second century B.C.
Refer the original text in Tamil.


நற்றிணை 333 Natrinai 333

மழையானது தான் பெய்யவேண்டிய தொழிலை விட்டுவிட்டு நீல வானத்தை விரும்பிப் போய்விட்டதனால், மூங்கில்கள் பொலிவிழந்து காணப்படும் கற்கள் நிறைந்த சிறு காட்டுப் பாதையில் அவர் செல்கிறார். அங்கு ஆற்றுப் பள்ளத்தில் பரல் கற்களுக்கு இடையே ஊறும் நீரை, பூ போன்ற நெற்றியைக் கொண்ட யானையும் புலியும் போட்டி போட்டுச் சண்டையிட்டுக்கொண்டு உண்ணும். அப்படிப்பட்ட காடு அரியது என்று அவர் எண்ணாமல், நெஞ்சுரம் குன்றிய நிலையில் அவர் செல்கிறார். என்றாலும் அவர் உள்ளத்தில் பிறருக்கு வழங்குவதற்காகப் பொருளைத் தேடுகிறோம் என்ற மகிழ்ச்சி (உள்மலி நெஞ்சம்). அப்படிச் சென்ற காதலர் திருந்திய அணிகலன் பூண்ட உன் தோளை முயங்குவார் போன்ற வாக்கு கேட்கிறது. புகழ் மிக்க உன் இல்லத்து உயர்ந்த சுவரில் இருந்துகொண்டு, நள்ளிரவில் நீ அவரை நினைக்கும்போதெல்லாம், தன் நலம் பயக்கும் குரலை எழுப்பிப் பல்லி படும் ஓசை வருகிறது. அதனால் நீ உன் அவல நினைவிலிருந்து நீங்குக.
இவ்வாறு சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
 
பண்பாடு 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து,               5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி,
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து,
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்;
நீங்குக மாதோ நின் அவலம் ஓங்குமிசை,
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி       10
நயவரு குரல பல்லி,
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே.

பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.
கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.
ஆங்கிலத்தில் இதன் செய்தி

Natrinai 332

You, my friend, you shower mercy upon me for my bangles slipping in my hand from its position suffering from love sick. You insist me to tolerate my lover’s absence. How it is possible? You know the girls gathering water lilies will also suffer in thirsty, be in water. That is the way in which I am suffering in love sick.
As the male tiger search roaming prey for its female in hungry with its new born babies, he is comes for me in such a dangerous route. How can I be patiently? That is why my bangles are slipping in my hand.
The lady says to her friend-maid.
 
water lilies 
Poet: Kannattanar, son of KuntrurKilar
This is a poem of second century B.C.


நற்றிணை 332 Natrinai 332

எனக்காக இரக்கம் கொள்ளும் தோழியே!
இதனை என்ன என்று சொல்வது? குவளைப் பூக்களை நீரில் பறிப்பவர்களுக்கு நீர் உண்ண விரும்பும் வேட்கை (தாகம்) தோன்றுகிறதே! இதனை என்ன என்று சொல்வது? ஒவ்வொரு நாளும் அவர் வந்து என்னைத் தழுவுகிறார். தழுவும் ஆசை தீரவில்லை. அதனால் என் தோளிலிருக்கும் வளையல் நழுவுகிறது. இப்படி நழுவுவதைப் பார்த்து நழுவாமல் பொறுத்துக்கொள் என்று நீ கூறுகிறாய். அது எப்படி முடியும்?
குட்டி போட்டிருக்கும் பெண்புலி பசியோடு இருக்கிறதே என்று அதற்கு இரை கொண்டுவருவதற்காக ஆண்புலி அலைந்து திரியும் மலையில், சிறிய ஒற்றையடிப் பாதையில், முதல்நாள் வந்தது போலவே பல நாள் அவர் என்னைத் தேடி வருகிறார். இதனைக் காணும்போது என் கையில் வளையல் செறிவாக எப்படி இருக்கும்? உடல் இளைத்து நழுவுமல்லவா?   
தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

ஆன்றிசின் = பொறுத்துக்கொள்க
இகுளை = இரக்கம் கொள்பவளே
குறுநர் = பறிப்போர்
பரிக்கும் = பாரிக்கும், அலைந்து திரியும்
பிணவு = பெண்
 
இரை தேடும் புலி 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ
''குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும் நாள் உடன் கவவவும், தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி'' எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை,                  5
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே?             10

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது;
வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்.
(வன்புரை = வற்புறுத்தும் சொல்)
குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

Natrinai 331

Salt-farmers get the yield without plowing the field. The go loading the salt in carts tied in row to sell the salt. After some time their girls watch for their arrival climbing on sand dune. There they will guard the fish hive from birds stealing. While, they doing so they play counting the fishing boats on sea. They separate the boats ‘these are the boats of your father’ and ‘these are the boats of my father’.
You are the man of such kind of littoral land.
There is no bar to come to my village to enjoy your lover, my lady, the friend-maid says. She adds; it is a sweet village; the people of the village have no anger on anybody. The do not care even their relative, what are they doing. Such a kind of people will have no time to watch you, a new man to them. Hence, you can come there and enjoy tour lover freely.
 
salt farmers in Cambodia 

salt farmers in Tamil Nadu 

Poet: Ulochanar
This is a poem of second century B.C.


Friday, 30 December 2016

நற்றிணை 331 Natrinai 331

உழவு செய்யாமல் உப்பை விளைவிக்கும் உழவராகிய உமணர் உப்பு விற்க உப்பு-வண்டியை ஒழுகையாகப் பூட்டி ஓட்டிக்கொண்டு செல்வர். அப்படிச் சென்றவர்கள் திரும்பி வருகிறார்களா என்று சிறுமியர் எதிர்நோக்குவர். அவர்கள் கானல் மணல் மேட்டில் காயவைத்திருக்கும் மீன் குவியலை உண்ண வரும் பறவைகளை ஓட்டிக்கொண்டிருப்பர். அவர்கள் பொழுதுபோக்குவதற்கு விளையாட்டாக, கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள திமில்களில் ‘இது என் தந்தை திமில்’, அது உன் தந்தை திமில்’ என்று சொல்லி அந்தத் திமில்களை எண்ணிக்கொண்டிருப்பர். இப்படிப்பட்ட கடல் சேர்ந்த நிலத்தின் தலைவனே!
எம்முடைய இந்த ஊர் இனியது. எந்த வகையான சினமும் கொள்ளாத நல்ல ஊர். இனி ஊருக்குள் நீ வருவதில் தவறு ஒன்றும் இல்லை. இந்த ஊரில் வாழ்பவர்கள் அவரவர் உறவினர்களைக்-கூடக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுக்குப் பிறிதொருவனாகிய உன்னை யார் கண்டுகொள்ளப்-போகிறார்கள்? நீ தாராளம்மாக ஊருக்குள் வரலாம். இவளுடன் இருக்கலாம்.    
இவ்வாறு தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
 
மீன்பிடிப் படகுகள் \ திமில்கள் 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை,
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி,        5
''எந்தை திமில், இது, நுந்தை திமில்'' என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!
இனிதே தெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்;
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம்    10
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.

தோழி இரவுக்குறி நேர்ந்தது.
உலோச்சனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

Natrinai 330

You are the man of land where male-buffalo plunges into the water stagnation removing the crane birds searching food. It will take rest in the water after toiling in the field plowing. Then it changes the resting place to the shadow of Punnai-tree.
The wife says to the husband.
Even if you fetch your lust-girl to my house and enjoys with her, she will not behave truly dependable upon you. Again, she cannot give children to you as I do with helping chastity.
Please note.
 
buffalo in water
Poet: Vanganar of Alangudi village
This is a poem of second century B.C.


நற்றிணை 330 Natrinai 330

வளைந்த கொம்பும் கட்டான கழுத்தும் கொண்ட எருமைக்கடா நீர் தேங்கிய கயத்தில் மேயும் கொக்குகள் பறந்தோடும்படித் ‘துடும்’ எனப் பாயும். நாளெல்லாம் உழவனுக்காக உழைத்த வருத்தமெல்லாம் போகும்படி நீரில் கிடக்கும். பின்னர் கரையேறி வந்து புன்னைமர நிழலில் படுத்திருக்கும். இப்படிப்பட்ட வளம் மிக்க ஊரின் தலைவனே! நீ அளித்த சிறந்த அணிகலன்களை அணிந்திருக்கும் உன் காதல் கன்னியரை எம் வீட்டுக்கே அழைத்துவந்து அவர்களோடு நீ கூடி வாழ்ந்தாலும், அவர்களின் அற்பமான மனத்தில் உண்மை இருக்காது. அவர்கள் ஆண், பெண் பிள்ளைகளை உனக்காகப் பெற்று, என்னைப் போல நன்றி சான்ற கற்புடையவர்கள் ஆதல் அதைக் காட்டிலும் அரிது.
மனைவி கணவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.
 
கற்பு
katrpu 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை மருதம்

தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,
மட நடை நாரைப் பல் இனம் இரிய,
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்  5
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும்,
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,
நன்றி சான்ற கற்பொடு  10
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.

தோழி, தலைமகனை வாயில் மறுத்தது.
ஆலங்குடி வங்கனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

Natrinai 329

He, your lover is a man of great with kindness; he never let you suffer; don’t worry; the friend-maid consoles her lady with these words. He is earning for the family passing through the dangerous route. There will be crucial people living by robbery, hunting. They kill the passersby and throw away the body. It will smell badly putrefying. The kite after lay egg flies again and again to eat. While trying some of its feathers will fall. The hunters used to tie the feathers in their bow used for shooting arrows. With the bow and arrows they will be waiting for newcomers. He, our lord has gone through such a route. He will not stay there and return in rainy season as he assured to you. See there. The clouds are moving. When they start raining he will be here. Don’t worry.
 
feathers of kites
hunters used these feathers to decorate their bows 
Poet: Soguttanar, son of Madurai MarutanKilar
This is a poem of second century B.C.


நற்றிணை 329 Natrinai 329

பண்பு
நம் தலைவர் அளவில்லாத நன்மை செய்பவர். உன்னைத் தனியே தவிக்க வைக்கும் தகாத செயலை விரும்பாதவர். அவர் சென்றிருக்கும் வழியில் வன்கண் ஆடவர் இரக்கம் இல்லாமல் வழிப்போக்கர்களைக் கொன்று வழியில் போட்டுவிட்டுச் செல்வர். அந்த உடல் முடைநாற்றம் வீசும். முட்டையிட்டதும் இரை தேடி வந்திருக்கும் வயது முதிர்ந்த கழுகு அதனை உண்ணப் பறக்கும். அதன் சிறகிலிருந்து தூவி உதிரும். அந்தத் தூவியைக் குறி தவறாமல் பாயும் அம்பு தொடுக்கும் வில்லில் அந்த வன்கண் ஆடவர் கட்டியிருப்பர். அவர்கள் மேலும் வெற்றி கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்துடன் வழியைப் பார்த்துக்கொண்டு பதுங்கியிருப்பர். அந்த வழியில் அவர் சென்றுள்ளார். எனினும் நம்மை (உன்னை) விட்டுவிட்டு அங்கே தங்கமாட்டார். அங்கே பார். வானம் இடி முழக்கத்துடன் மின்னுகிறது. அது கடலில் நீரை முகந்துகொண்டு வந்துள்ள மேகம். அது பொழியும்போது, அவர் சொன்னபடி வந்துவிடுவார்.
கவலை வேண்டாம் என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

அத்தம் = வழி
அல்கலர் = தங்கமாட்டார்
ஆடு = வெற்றி
கருவி = தொகுதி (தொல்காப்பியம், உரியியல்)
நயவு = நயம், நன்மை, அன்பு
நிரையம் = துன்புற விடுதல்
பாறு = பருந்து
பிணன் (இடு) = பிணம் (உயிர்முன் ன் <> ம்)
புனிற்று நிரை கதித்த = பொறையிருந்து கருவை முட்டையாக வெளியில் தள்ளிய
வன்கண் = கொடிய கண்ணோட்டம்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

வரையா நயவினர் நிரையம் பேணார்,
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி    5
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி தோழி! உதுக் காண்:
இரு விசும்பு அதிர மின்னி,            10
கருவி மா மழை கடல் முகந்தனவே!

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது.
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

Thursday, 29 December 2016

Natrinai 328

He is the man of the mountain-country where roots yields below the ground; honey hangs up above; the dwellers of the land care nothing of them seed millet like grains for their food and guard the harvest in the field driving away the parrots from stealing.
He is not equal but above our status. So, he will not forget his duty in time. He will return home in time as he assured you, in rainy season. Let the clouds pour rain in our field, by which he will return.
Let the Vitrali dancer perform her dance getting not usual sesame oil or cloths without wealth; but getting ornament as prize for her dance performance. Let her dance singing his arrival.
The lady says to her friend-maid.
 
Vitrali dancer, modern time 
Poet: TolKapilar
This is a poem of second century B.C.


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி