Sunday, 20 December 2015

நல்வழி 9 Nalvali 9

ஆற்றுப் பெருக்கு - ஊற்றுப் பெருக்கு - நல்கூர்ந்தார்

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந்நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார்ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து (9)

ஆற்றில் வரும் மழைவெள்ளத்தின் வரத்து அற்றுப்போயிற்று. ஆற்று மணல் நடப்பவரின் காலடியைச் சுடுகிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஊற்று வெள்ளம் வந்து உலகுக்கு நீரை ஊட்டும். நல்ல குடியில் பிறந்த மேன்மக்களும் அப்படித்தான். தம் செல்வத்தை இழந்து வறுமையில் வாடினாலும் மனம் ஒப்பி இல்லை என்று சொல்லமாட்டார்கள்.
காட்டில் தலைமறைவாக வாழ்ந்தபோதும் தன் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு சென்று தன் நாட்டை அளும் தன் தம்பி இளங்குமணனிடம் காட்டி என் தலைக்கு விலையாக அவன் தரும் பரிசிலைப் பெற்றுக்கொள்ளுமாறு குமணன் புலவர் கையில் வாளைக் கொடுத்தான் 

புலவர் பெருஞ்சித்திரனார் குமணன் தந்த வாளை இளங்குமணனிடம் காட்டிப் பரிசில் பெறுதல்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி