Monday, 14 December 2015

வருக குடநாடன் - முத்தொள்ளாயிரம் Muttollayiram 9

சேரன் | குடநாடன் | வஞ்சிக்கோமான்
பாடல் 9

வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று)
அருகலர் எல்லாம் அறிய – வருகலாம்
உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9

கலாம் என்பது கலகலப்பு.

வருக குடநாடன்
வருக வஞ்சிக் கோமான்
என்று இவள் அருகில் இல்லாதவர்கள் எல்லாம் கலகலப்பாக இருக்கின்றனர்.
ஆனால் இவள் மட்டும் அவனைக் கண்ட பின்பு கலகலப்பு ஒழிந்து காணப்படுகிறாளே! ஏங்கிக் கிடக்கிறாளே!


ஆங்கிலத்தில்

நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி