Monday, 14 December 2015

இவன்என் நலங்கவர்ந்த கள்வன் - முத்தொள்ளாயிரம் Muttollayiram 10

சேரன் | சேரலர் கோக்கோதை
பாடல் 10

இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய்
செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்கச்
சொல்லும் பழியோ பெரிது. – 10

இவன் என் அழகைக் கவர்ந்துகொண்ட கள்வன்,
இவன் என் நிறை நெஞ்சைக் குறை நெஞ்சு ஆக்கிய கள்வன்
என்று சேரலர் கோக்கோதை செல்லுமிடமெல்லாம் அவனைப் பழி தூற்றுகிறால்களே!

“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” – கலித்தொகை 133 காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தேன். என் காதலைப் பிறர் அறியும்படிக் காட்டச் செய்த கள்வன் இவன் – என்கிறாள்
சித்தன்னவாசல் ஓவிய வரைவு
பெண் நலம் 
ஆங்கிலத்தில்

நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி