Friday, 11 December 2015

மூதுரை 7 Mudurai 7

ஆம்பல்

நீரளவே யாகுமாம் நீராம்பல்தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம். (7)

நீரில் பூத்திருக்கும் ஆம்பல் பூ நீர்மட்டத்திலேயே இருக்கும். (நீர் உயர்ந்தால் உயரும். நீர் தாழ்ந்தால் தாழும்.)
  • அதுபோல ஒருவரது அறிவு அவர் கற்ற நூலினது அளவாக இருக்கும்.
  • அதுபோல முந்தைய பிறவியில் எந்த அளவு நற்பணி செய்து தவப்பயன் பெற்றிருக்கிறார்களோ அந்த அளவு இந்தப் பிறவியில் செல்வத்தின் அளவு இருக்கும்.
  • குணம் பெற்றெடுத்த தாய் தந்தையரைப் பொருத்தே இருக்கும்.
    ஆம்பல் இலை நீர்மட்டத்தில் மிதக்கும் 
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி