Wednesday, 30 September 2015

துழாஅய் Tulay குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu

துழாஅய்
துழாய்
துளசி
Tulay flower
Tulasi
Sacred basil,  Ocimum sanctum

This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress.
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy.
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C.

துளசி

இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.
திருமாலுக்கு உகந்த மலர்.

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு
அகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்

தும்பை Tumbai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu

தும்பைப் பூ
Tumbai flower
T. tumma, K. tumbe.] 1Bitter toombay, a common weed, Leucas aspera;
This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress.
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy.
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C.

தும்பை மலர்
  • இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.
  • நாட்டை விரிவாக்க விரும்பும் அரசன் இந்தத் தும்பைப் பூவை அடையாளப் பூவாகச் சூடிக்கொண்டு போரிடுவது சங்ககால வழக்கம்.

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு
அகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்

தில்லை Tillai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu

தில்லை மலர்
Tillai flower
Blinding tree, s. tr., Excoecaria agallocha; 
This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress.
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy.
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C.

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு
அகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்

Tuesday, 29 September 2015

திலகம் Tilagam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu

திலகம் என்னும் மஞ்சாடி மலர்
Tilagam flower
mañcāṭi- Red-wood, Adenanthera paronina
This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress.
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy.
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C.

திலகம் மலர்
மஞ்சாடி மலர்

இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு
அகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்

தாழை Talai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu

தாழை என்றும் கூறப்படும் தென்னம்பாளை
Talai flower
Coconut flower

This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress.
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy.
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C.

தாழை
தென்னம்பாளை
தாழை என்னும் சொல் தாழைமரத்தைக் குறிக்கும்
தென்னையையும் குறிக்கும்

இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு
அகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்

Natrinai 54

Fly-mating of Crane birds
Video She (heroine) suffering from love-sick in the evening send a crane-bird as a mediator her lover (hero). She advises the bird her grievances. You, white bird with black-legs! I know you are my friend. Don’t take me as a neighbor. Having enough prey in lagoons you like to mat with your love-mate in the evening. Meantime you are perking with your kith and kin. Now I pray you. I am suffering from love-sick without my lover’s company. Please tell him my position. He is a Man of the littoral land. It is a beautiful site where the water sweeps touching the branches of the trees Kandal and Njalal. The play-girls gather punch of leaves and flowers of the trees to make their leaves-dress.     

Poet: SentanKannanar      
This is a poem of second century B.C.

நற்றிணை 54

குருகு வாப்பறை உறவு
இந்த உறவின் நிகழ்வோட்டம் Video 
காம உணர்வைத் தாங்கமாட்டாத தலைவி வெண்குருகுப் பறவையைத் தலைவனிடம் தூது அனுப்பி மாலை வேளையில் தான் வருந்துவதை எடுத்துரைக்குமாறு வேண்டுகிறாள்.
கருங்கால் வெண்குருகே!
நீ என் தோழன் ஆயிற்றே.
நான் சொல்வதைக் கேள்.
வளைந்திருக்கும் கழிநீரிலே மேய்ந்தபின் நீ உன் உறவுமுதலிடம் சென்று உறவு கொண்டு பறக்க விரும்புகிறாய். ஆயினும்,
புலால் அருந்தும் உன் உறவுகளோடு சிறிது நேரம் இருக்கிறாய்.
மாலைக்காலம் சிறிதாயினும் அப்போது தனிமை என்னை வாட்டுகிறது.
அதனை நீ அறிவாய் அல்லவா.
உனக்கு அன்பு இருக்கிறது.
என்னை வேறு யாரோ என்று எண்ணாதே.
என் குறை இன்னது என்று நீ வாழும் துறைக்கு உரியவனிடம் எடுத்துச்சொல்.

துறை
குமரித்தன்மை உடைய ஞாழலில் குழைத்திருக்கும் தழைகளைத் தழையாடைக்காகப் பறித்துச் செல்வர். அங்கே கண்டல் மரம் வேலியாக இருக்கும். அங்குக் கழியில் உள்ள தெளிந்த நீலநிற மணிநீர் ஞாழலையும் கண்டலையும் தடவிக்கொடுக்கும். இப்படிப்பட்டது அவன் துறை. கிழவன் அந்தத் துறைக்கு உரியவன்.

கிளைமுதல் = முதல்கிளை, ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமாக உள்ள காதல் உறவாளி
வாப்பறை = அவாவிப் பறத்தல், உடலுறவு கொள்ளும்போது பறத்தல், வா < (அ)வா – முதற்குறை
நொதுமல் = உறவும் பகையும் அல்லாத ஒருவர்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
54. நெய்தல்

வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
வாப் பறை விரும்பினை ஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கருங் கால் வெண் குருகு! எனவ கேண்மதி:
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை;             5
அது நீ அறியின், அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும் 10
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!

காமம் மிக்க கழிபடர்கிளவி.
சேந்தங் கண்ணனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

தாமரை Tamarai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu

தாமரை
Tamarai
Lotus

This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress.

பொகுட்டு தெரியும் தாமரை
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy.
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C.
தாமரை,
முள் தாள் தாமரை,
தாமரைத் தண்டில் சுனை-முள் இருக்கும்

இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு
அகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்

தளவம் Talavam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu

வெண்முல்லை & செம்முல்லை
செம்முல்லை = தளவம்
Talavam flower
Red Jasmine 
This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress.
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy.
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C.
செம்முல்லை
ஜாதி மல்லி
பிச்சிப்பூ

இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு
அகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்

தணக்கம் Tanakkam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu

தணக்கம் பூ
நுணாப் பூ
Tanakkam flower

This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress.
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy.
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C.

பல் பூந் தணக்கம்,

இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு
அகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்

Natrinai 53

There was heavy rain in previous night. The fresh water is flowing with dry and green leaves. To drink and bath in the fresh water will cure all kinds of sickness in body and mind. The mother thought and sent her daughter with her girl-friend to enjoy.
She (the heroine) is in love-sick. To bath in falls of rained flood will cure her (the heroine) sick. Her mother says and sends her to enjoy. The friend-maid of lady doubts about her (heroine) mother’s deed whether she would have learned her lady’s clandestine love. She converses this matter of freedom to bath in falls with her lady so as to hear the conversation to her lover (the hero) waiting at a distance to get her alone to enjoy.
     
Poet: NalVettanar    
This is a poem of second century B.C.

Monday, 28 September 2015

நற்றிணை 53

அருவி
புது வெள்ளம் மருந்தாகும்
இலைதழைகளை அடித்துக்கொண்டு வரும் புதுவெள்ளத்தில் நீராடி, அதன் நீரைப் பருகினால் மருந்து போல் பயன் தரும்.

வானளாவ உயர்ந்த மலைப்பிளவுகள்.
இடிமின்னலுடன் இரவில் பெருமழை.
காட்டாற்றில் வெள்ளம்.
காய்ந்த சருகுகளையும் புதிய இலைகளையும் அடித்துக்கொண்டு புதுவெள்ளம் பாய்கிறது.
அதனை கண் குளிரப் பார்க்கவேண்டும்.
அந்த நீரைப் பருகவேண்டும்.
அந்த வெள்ளத்தில் மகிழ்வோடு நீராடவேண்டும்.
இவள் இப்படிச் செய்தால் இவள் ஏக்கம் தீரும்.
இவள் துன்பத்துக்கு மருந்தாகவும் அமையும்.

இவ்வாறு எண்ணி, ‘செல்க’ என்று சொல்லித் தாய் அனுப்பிவைக்கிறாளே, அவரைப் பற்றிய செய்தியை அவனோடு நான் நீராடியதை நான் மறைத்ததை அறிந்துகொண்டாளோ? அவள் கருதியது வேறு என்னவாக இருக்கும்?

தோழி தலைவியிடம் சொல்கிறாள். அவளுக்காக அங்கொரு பக்கம் காத்திருக்கும் அவன் இதனைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

அருளினள் = அவனோடு நீராட அருள் புரிந்தாள்
கண்ணியது = கருதியது
கவான் = மலைப்பிளவு
ஆர்கலி = பேரிரைச்சல்
கனைபெயல் = பெருமழை
முளி இலை = காய்ந்த சருகு
விருந்து = புதிது
முனியாது = மகிழ்வாக
பனி = உள்ளம் துடிக்கும் ஏக்கம்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
53. குறிஞ்சி

யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது
அறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?
''வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள்        5
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,
முனியாது ஆடப் பெறின், இவள்    10
பனியும் தீர்குவள், செல்க!'' என்றோளே!

வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.
நல்வேட்டனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

Blog Archive

எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி