Friday, 31 July 2015

மதுரைக்காஞ்சி பகுதி 23

இரு மலைகளுக்கு
இடையில் உள்ள பிளவு கவலை
கவலையில் அருவி
இவன் நாட்டில் நல்லமழை பொழிந்தது

 • புகழோடு பெருவாழ்வு வாழ்ந்த அரசர்கள் பலர் மாண்டொழிந்தனர்.
 • அதனால் நீ உன்னை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
 • மேகங்கள் கிழக்கிலுள்ள கடலில் நீரை முகந்துகொண்டு சென்று மேற்கிலுள்ள கடலை முற்றுகையிட்டன.
 • அதனால் குளிர்ந்து கொட்டும் இடம் தெரியாததால் தாழ்ந்த நிலப் பரப்பிலும், உயர்ந்த மலைப் பரப்பிலும் மழையைக் கொட்டின.
 • அதனால் கவலை என்னும் மலைப்பிளவுப் பகுதிகளில் அருவி ஓடி ஒலித்தது.
 • மழை மிகுதியால் மூங்கில் காடுகளில் மேய்ந்த யானைக்கூட்டம் நடுங்கிற்று.
வானத்தில் முழங்கும் இடி மலைமுகடுகளில் மோதி எதிரொலித்தது.

பாட்டு சொற்பிரிப்புப் பதிவேற்றம்

அதனால், குண கடல் கொண்டு குட கடல் முற்றி,
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது,           
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி, 240
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப,        
கழை வளர் சாரல், களிற்றினம் நடுங்க,          
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின், தாங்காது,          


மதுரைக்காஞ்சி பகுதி 22

பகைநாடு வெடிபடக் கடத்தல்
பணிந்தவர் நாடு மகிழ்வாகவும்,
பணியாதவர் நாடு திறை தந்தும்
வாழ்ந்தன

 • விழுமிய பெரியோர் உன் சுற்றம்.
 • அவர்கள் நீ சூட்டிய விருதுப் பூவை அணிந்தவர்கள்.
 • அவர்களின் மார்பில் உள்ள சந்தனம் பெருமையால் புலர்ந்துள்ளது.
 • அவர்களும் நீயும் பையில் கொண்டுவந்த கள்ளைக் கலத்தில் வாங்கி உண்டு மகிழ்கிறீர்கள்.
 • உன்னைப் பணிந்த அரசர்கள் இப்படிச் சுற்றமாக வாழ்கிறார்கள்.
 • உன்னைப் பணியாதவர்களின் பாசறைகளைக் கடந்து நீ வென்றாய்.
 • பருந்துகளும் பறக்க முடியாத பாசறைகளில் காலை வேளையில் முரசு முழக்கி வென்றாய்.
இப்படி உன்னைப் பணிந்தும் பணியாமலும் உலகை ஆண்டு கழிந்த மன்னர் கடற்கரை மணலினும் பலர்.
அதனால் …

பாட்டு சொற்பிரிப்புப் பதிவேற்றம்

சூடுற்ற சுடர்ப் பூவின்,        225
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்,     
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக,          
கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு,        
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப,     
பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார்,         230
பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறைப்          
படு கண் முரசம் காலை இயம்ப,            
வெடி படக் கடந்து, வேண்டு புலத்து இறுத்த,             
பணை கெழு பெருந் திறல், பல் வேல் மன்னர்,         
கரை பொருது இரங்கும், கனை இரு முந்நீர்த்              235
திரை இடு மணலினும் பலரே,உரை செல     
மலர் தலை உலகம் ஆண்டு, கழிந்தோரே!   மதுரைக்காஞ்சி பகுதி 21

இடப்புறம் யாழிசைக்கும் பாணன்
வலப்புறம் யாழிசைக்கும் பாடினி
விறலியர்க்கும் பாணர்க்கும் வழங்குவான்.

வெறுக்கை என்பது ‘போதும் போதும்’ என்று வெறுக்கத் தக்க அளவில் பெருகியுள்ள செல்வம்.

ஆனா = அமையாத
யாணர் =புதுப்புது வருவாய்

குறையவே குறையாத செல்வம். புதுப்புது வருவாய்.

 • தின்றழிக்க முடியாத புலால் உணவு.
 • அள்ள அள்ளக் குறையாத பெருஞ்சோறு.
 • உண்டு மாளாத கள்.
 • இவற்றைத் தின்று மாளாத காலைப்பொழுது.
 • பயன்படுத்த முடியாமல் நிலத்திலேயே கொட்டிக் கிடக்கும் வெறுக்கத் தக்க செல்வம்.
 • எதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் செல்வ வளம் செழித்துக் கிடக்கும் அரண்மனை.
யாழ் மீட்டும் விறலியர் கைகளுக்கு வளையல்.
பாணர்களுக்கு யானைகள்.
 • அதிகாலையில் அவைக்கு வந்து அரசனை வாழ்த்தும் அகவர்களுக்கு குதிரை பூட்டிய தேர். அகவர் = ’ஜே’ போடுவோர் 
 • என்றெல்லாம் பரிசுகளை நெடுஞ்செழியன் வழங்கினான்.
 • நண்பர்கள் மகிழும்படி வென்று கொண்டுவந்தனவற்றை வழங்கினான்.
பாட்டு சொற்பிரிப்புப் பதிவேற்றம்

தவாப் பெருக்கத்து அறா யாணர்,            210
அழித்து ஆனாக் கொழுந் திற்றி               
இழித்து, ஆனாப் பல சொன்றி,  
உண்டு, ஆனாக் கூர் நறவின்      
தின்று, ஆனா இன வைகல்         
நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கைப்    215
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர்   
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி  
விறலியர் வறுங் கைக் குறுந் தொடி செறிப்ப             
பாணர் உவப்பக் களிறு பல தரீஇ,          
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ,               220
மறம் கலங்கத் தலைச் சென்று,             
வாள் உழந்து, அதன் தாள் வாழ்த்தி,    
நாள் ஈண்டிய நல் அகவர்க்குத் 
தேரோடு மா சிதறி,             


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி