Friday, 5 June 2015

புறநானூறு 358




உலகை ஆளும் பேற்றினையும், தவத்தினையும் சீர்தூக்கி நிறுத்துப் பார்த்தால் தவத்திற்கு ஆட்சிப் பேறானது கடுகளவு கூட ஈடாகாது. (ஐயவி = வெண்சிறு கடுகு)
காரணம், இந்தப் பெருநிலம் ஒரு பகல்-பொழுதில் எழுவர் ஆளுகைக்கு மாறக்கூடியது.
அதனால், உலகப் பற்றை விட்டவரைத் திருமகள் கைவிடமாட்டாள்.
உலகின்மீது பற்றுடையவர்களைத் திருமகள் கைவிட்டுவிடுவாள்.
விளக்கம்
‘பருதி சூழ்ந்த நிலம்’
கதிரவன் ஒளி சூழ்ந்திருக்கும் நிலம்.
பருதியைச் சுற்றிக்கொண்டு வரும் நிலம்
செங்கைப் பொதுவன் விளக்கம்

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

பருதி சூழ்ந்த இப் பயம் கெழு மா நிலம்
ஒரு பகல் எழுவர் எய்தியற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்,
கைவிட்டனரே காதலர்; அதனால்   5
விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே.

திணை காஞ்சி; துறை மனையறம், துறவறம்.
வான்மீகியார் பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி