Monday, 2 March 2015

திருமுருகாற்றுப்படை தொகுப்பு விளக்கம்


முருகன் சேயோன். (தொல்காப்பியம்)
சேயோன் = செம்மையானவன் = குழந்தை
செம்மை = செந்நிறம் = செவ்விய தன்மை
செவ்விய தன்மை என்பது செங்கோல், செங்கோணம் போல வளையா, சாயாத் தன்மை.
சேயோன் மைவரை உலகத் தெய்வம் (தொல்காப்பியம்)
முருகன் மலைகிழவோன் (திருமுருகாற்றுப்படை)

திருமுருகாற்றுப்படை பாட்டின் விளக்கம் 15 பகுதிகளில் தரப்பட்டுள்ளது.
அவை:

  1. திருமுருகாற்றுப்படை, தொகுப்பு விளக்கம்
  2. திருமுருகாற்றுப்படை, பாட்டின் கருத்தோட்டம்
  3. திருமுருகாற்றுப்படை, முருகன் தோற்றம்(1-66)
  4. திருமுருகாற்றுப்படை, பரங்குன்றத்து முருகன்(67-77)
  5. திருமுருகாற்றுப்படை, அலைவாய் முருகன்(78-125)
  6. திருமுருகாற்றுப்படை, ஆவினன்குடி முருகன்(126-176)
  7. திருமுருகாற்றுப்படை, ஏரகத்து முருகன்(177-189)
  8. திருமுருகாற்றுப்படை, குன்றுதோறும் ஆடும்முருகன் (190-217)
  9. திருமுருகாற்றுப்படை, முருகாற்றுபடுத்தல்(218-249)
  10. திருமுருகாற்றுப்படை, முருகனை ஏத்தல்(250-286)
  11. திருமுருகாற்றுப்படை, பழமுதிர் சோலைமலை முருகன்(287-317) 
  12. திருமுருகாற்றுப்படை, வெண்பா 
  13. திருமுருகாற்றுப்படை, பொதுவன் அடிகள் இயற்றிய ஆற்றுப்படை
  14. திருமுருகாற்றுப்படை, முருகன் பெயர்கள், தமிழ் விளக்கம்.
  15. திருமுருகாற்றுப்படை, சங்க இலக்கியங்களில் முருகன்
என்பன.

இந்த அடுக்கு முறையை
முன்தொடர்ச்சி
பின்தொடர்ச்சி
என்னும் தொடுப்புக் குறிகளைச் சொடுக்கிப் பாடல் முழுதையும் வரிசைப்படுத்தி அறிந்துகொள்ளலாம்.

சங்கநூல் தொகுப்பில் 10 பாட்டுநூல்களும், 8 தொகைநூல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த 18 நூல்களையும் மேல்கணக்கு என வழங்குவர். மற்றும் 18 நூல்கள் கீழ்க்கணக்கு என வழங்கப்படுகின்றன.

திருமுருகாற்றுப்படை பாட்டுநூல்கள் பத்தில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பாடிய புலவர் நக்கீரர். பாட்டுநூல்களில் மற்றொன்றான நெடுநல்வாடை நூலைப் பாடிய புலவரும் நக்கீரர். இந்த இரண்டு நூல்களை ஒப்பிட்டு அறிந்துகொள்வது பயன்தரும்.
முருகு | வாடை
வழிபாடு, புறப்பொருள் | அகப்பொருள்
சமயக் கருத்துக்கள் புகுந்துள்ளன | தமிழ் ஐந்திணை நெறியில் அமைந்துள்ளது.
முருகாற்றுப்படுக்கும் அகத்திணை ஒழுக்கம் புறத்திணை ஒழுக்கமாக வருகிறது | பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்மீது பாடப்பட்டதாகப் புறப்பொருளாக்கிக் காட்டுகின்றனர்.

திருமுருகாற்றுப்படை நூலுக்கு 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய பண்டைய உரைகள் உண்டு. உரையாசிரியர் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், கவிப்பெருமாள், ஆகியோர் உரையும், பரிதி என்பவர் குறிப்புரையும் உண்டு. இவை சமய நோக்கில் எழுதப்பட்டவை.

முருகன் சமயம் சார்ந்தவன் என்றும், சமயம் கடந்தவன் என்றும் கொள்ளலாம். இந்த நோக்குடன் இந்தப் பாட்டுக்கான விளக்கம் தரப்படுகிறது. இது தமிழ்நோக்கு விளக்கம்.



1 comment:

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி