Saturday, 28 February 2015

அகநானூறு காதல்பாடல் 3

தன் இளங் குஞ்சுகளுடன் எருவை 
காதலியைப் பிரிந்து பொருளீட்டத் தூண்டும் நினைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான் தலைவன்.
[அ]
ஓமை மரத்தின் புறப்பகுதி முதலையின் மேல்தோல் போல் செதும்பு செதும்பாக இருக்கும். அந்த ஓமை மரத்தில் கழுகு (எருவை) கூடு கட்டிக்கொண்டு இருந்தது. அது அதற்குப் பாதுகாப்பான இடம். (கடியுடை நனந்தலை) அங்குப் பொறித்திருக்கும் வளைந்த வாயை உடைய இளங் குஞ்சுகள் வாழ்வதற்கு (அல்குவதற்கு) இரை கொண்டுவர எழுச்சி மிகு (மான்று) விருப்பம் கொண்ட கழுகு மலைப்பாறை உச்சியிலிருந்து பறந்து சென்றது.
[ஆ]
தளர்வாக நடக்கும் மரையா என்னும் காட்டாடு ஒன்றை வலப்பக்கமாக விழும்படிச் சாய்த்து அதன் சிவந்த குருதியை ஒழுகாமல் (உவற்றி) குடித்த புலவு-நாற்றம் அடிக்கும் புலி உண்ணமுடியாமல் விட்டுச்சென்ற மிகமிக முடைநாற்றம் வீசும் இறைச்சியை, கொள்ளையடிக்கும் மாந்தரைப் போலக் கவர்ந்து சென்றது. – இது அன்று தலைவன் கண்ட காட்சி.
[இ]
நெஞ்சே! சிறுசிறு இலைகளுடன் மரா மரங்கள் இருக்கும் அந்தக் காட்டின் வழியே சென்று பொருள்-செல்வம் (கலம்) கொண்டுவரும்படி என்னை மிகுதியாக (கழிய)த் தூண்டுகிறாய்.
[ஈ]
செல்லத் தூண்டும் உன் வாய்மொழி உண்மை போலத் தோன்றினாலும் அது பொய்யான மொழியே ஆகும். இனிக்கும் இவளது சிவந்த வாய் பேசும் இனிய சொற்களை எப்படி விட்டுவிட்டு உன்னுடன் வரமுடியும்? அணிகலன் பூண்டிருக்கும் என் மடந்தையின் கண்ணின் பார்வையிலிருந்து எப்படி விடுபட முடியும். காதணிகளைத் தொடும் கடைக்கண் பார்வை அல்லவா அது?

பாடல் சொல்-பிரிப்புப் பதிவு
3. பாலை
[அ]
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை          5
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
 [ஆ]
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்     10
[இ]
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
 [ஈ]
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,  15
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?

முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப் போய்ப், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.

எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடல்Natrinai 7

It is raining season that he who went earning assuring her will return, he did not return. Her friend-maid consoled her with these words.
Thundering rain poured to fill water in rock-pits, fall water in seasoning waterfalls, submerging the big stones in brooks and the instrument of bamboo paddle used to row on river water anchoring on river bed, become height-less.  
You, my lady, listen. He didn’t return as he assured. The elephant feeds in paddy-field and sleeps leisurely under the Sandal tree.  (He is sleeping as the elephant)

Poet: NalVelliyar
This is a poem of second century B.C.


நற்றிணை 7

கழை என்னும் மூங்கில் கோலால்
ஆற்று மண்ணில் குத்தி
மிதவையை ஓட்டிச்செல்வர்.
இந்தக் கழைக்கோல் முழுகும்படி
ஆற்றில் வெள்ளம் வந்தது
என்கிறாள் தோழி. 
7. பாலை
 • கார்காலம் வந்தது. அவர் திரும்பவில்லை. தோழி இதனைச் சொல்லித் தலைவியைத் தேற்றுகிறாள்.
 • அச்சம் தரும் சுனையில் நீர் நிறையும்படியும்,
 • பெரிய மலையடுக்கத்தில் அருவி கொட்டும்படியும்,
 • கல் முழுகும்படி காட்டாற்று வெள்ளம் பாயும்படியும்,
 • சமவெளியில் ஓடும் ஆற்றில் பரிசில் தள்ளும் மூங்கில் முழுகும்படி வெள்ளம் வரும்படியும்.
 • மின்னி இடித்து மழை இப்பொழுது பெய்துகொண்டிருக்கிறது.
தோழி!
 • விளைந்த நெல்வயலில் மேய்ந்த யானை சந்தன மரம் வாடும் காட்டில் தூங்கிக்கொண்டிருக்கிறது. 
 • (அவர் வராமல் தூங்குகிறார் என்பது உள்ளுறைப் பொருள்)
பாடல்

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்   5
இன்னே பெய்ய மின்னுமால் தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.

பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய, ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது.
நல்வெள்ளியார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

ஆங்கிலத்தில் இதன் விளக்கம்

Friday, 27 February 2015

Purananuru 206

Female poet Auvvaiyar went to the palace of king Atiaman. The gate-keeper stopped her in the gate suppose on the advice of the king. The poet advises.
You, the gate-keeper of palace, you must know about us. We are living by seeding language of poem in the field of patron’s ear and getting gifts from him. Your king is the descended of the ancestors who saved the poets like us without shutting their gate for us. Your king also never shut the gate for me and the men like me. If he has ordered you, what would happen, whether he would not realize his position or wouldn’t have realized my credit?
Suppose, someone with wisdom and fame lost his life, will the world become nil like him? If he is not willing to foster by offering prizes, I am ready to put my musical instrument ‘Yazh’ in my safety bag. As the man who is living by wood-cutting to fuel, having axe in hand and strength in body can get food anywhere in the world, I can also survive anywhere with other patrons. (Let me leave).       
     
Poem by: Avvaiyar
Poem on: King Atiyaman Neduman Anji
Context: To the Gate-keeper of the king when the king dodging to give prizes


புறநானூறு 206


ஔவையார் அதியமானிடம் பரிசில் வேண்டி அவனது அரண்மனைக்குச் சென்றார். வாயில்-காவலன் தடுத்தான். எனக்கு உள்ளே நுழையும் உரிமை உண்டு. தடுக்காதே எனக் கூறும் பாடல் இது.
[அ]
வாயிலோயே, வாயிலோயே,
பரிசிலர் நாங்கள். வள்ளல்களின் காதில் தெளிவான மொழியை விதைத்து எண்ணிவந்த செயலை முடித்துக்கொள்ளும் உறுதி கொண்ட நெஞ்சம் உடையவர்கள். சீர்வரிசை பெறுவதற்காக வருந்தும் வாழ்க்கை இது. அரசன் நெடுமான் அஞ்சி பரிசிலர்க்கு அடைக்காத வாயிலை உடையவன். (நீ தடுக்காதே)
[ஆ)
அதியமான் நெடுமான் அஞ்சி காக்கும்-மன்னர்களின் (கடுமான், கடி – உரிச்சொல், பொருள் காப்பு) வழித்தோன்றல்.
இப்படிப்பட்ட தன்னை அவன் அறியவில்லையா? அல்லது என் புலமையை அறியவில்லையா? (விளங்கவில்லை).
[இ]
அறிவும் புகழும் உடையவர்கள் மாண்டுபோயினர் என்று இந்த உலகம் பாழ்பட்டுப் போகவில்லை. (அறிவும் புகழும் கொண்ட வேறுபலர் இருக்கிறார்கள்). அதனால் என் யாழைக் காப்பாற்றிக்கொள்கிறேன். அதனை என் பையில் (கலம் என்னும் யாழ் வைக்கும் பை கலப்பை) வைத்துக்கொள்கிறேன்.
[ஈ]
விறகு வெட்டிப் பிழைக்கும் கை வலிமை கொண்ட சிறுவர்கள் கையில் கோடாரியும் இருக்கிறது. காடும் இருக்கிறது. அதைப்போல பரிசிலராகிய நாங்களும் எந்தப் பக்கம் சென்றாலும் சோறு பெறுவோம்.

பாடல் [அகரப் பகுப்பு செருகல்]
[அ]
வாயிலோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!                 5
[ஆ]
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்?
 [இ]
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந் தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;                                 10
[ஈ]
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


Thursday, 26 February 2015

Agananuru love poem 2

He approaches his lover to enjoy in daytime. Her friend-maid guide him politely enjoy her by getting married.
You, the Head of your area! Even the beasts are enjoying a kind of bliss in your area. The plantain fruits and broken jack fruit fell into pond in rock. The water of the pond becomes wine by fermentation. A male monkey drank the water and enjoys the sensitiveness of drunkenness. It is trembling after to climb on Sandal tree in which the pepper plant creeping. So the other beasts also enjoy. This is a kind of unconscious bliss. Having such a kind of country, it is easy to get enjoyment of intend.
Again, she with her complexion and bamboo like shoulders to hug is in her at most willingness to have enjoyment with you.   
This is daytime. You can get her enjoyment in night-time instead while the guards of her father sleeping. But there is also some difficulty because of brightness of moon-light. So watch the tree Vengai blossoms. It is the right time to marry her and enjoy.   ஏர் உழவு plowing

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை. – திருக்குறள் 1036

உழுபவரின் உழவு-ஒழுக்கப் பணி மடங்கி நின்றுவிடுமேயானால் நம்மால் தவிர்க்க முடியாத பசியாசைக்கு உணவும், எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் என்று சொல்லும் துறவிகளுக்கு உணவும் கிடைக்காமல் மக்களின் வாழ்வு நிலைப்பாடு இல்லாமல் போய்விடும். (புலால் உணவை மறுத்தலால் இவ்வாறு கூறினார்.)

உலகில் எங்கெங்கே எத்தகைய ஏர் (கலப்பை) கொண்டு உழுதனர் என்பதைக் காட்டும் சில படங்கள்.
ஒட்டகம் கட்டி உழுதல்

எகிப்து நாட்டில் எருது கட்டி உழுதல்
எகிப்து நாட்டில் குதிரை கட்டி உழுதல்
உரோமானியர் எருது கட்டி உழுதல்
ஏர் (கலப்பை) வகைகள்
எருது கட்டி உழுதல்
இருகை மேழி
மேலே சக்கரக் கலப்பையால் இருவர் உழுதல்
கீழை விதைத்த பின் பரம்பு அடித்தல் 
இந்தியக் கலப்பை 
சக்கரக் கலப்பையில் ஒற்றைக் குதிரை கட்டி உழுதல்
ஒருவர் எருதினை ஓட்ட ஒருவர் உழுதல்
நான்கு எருது இழுக்கும் சக்கரக் கலப்பை உழவு
மேழியில் குறுக்குக் கைப்பிடி
கட்டுப்போட்ட கலப்பைத்தடி
எருதோட்டும் நீண்ட கோல்
இரட்டைக் குதிரை இழுக்கும் ஏர் உழவு
நன்செய் உழவு
ஒற்றை எருமை உழுகலப்பை


தேறல் wine fermented from verity of fruits

தேறல் என்பது பழம் கலந்து ஊறியதும், இன்ப-மயக்கம் தருவதுமான ஒருவகை இனிப்புச்சாறு என்பதை இந்தப்  பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன.

வாழைப்பழமும் பலாப்பழமும் பாறையில் உள்ள சுனைநீரில் ஊறித் தேறலாக விளைந்திருந்தது பற்றிக் கூறும் எந்தப் பகுதி இதனைத் தேறல் என உணராமல் நீர் என்று எண்ணிப் பருகி, மயக்கமுற்று மிளகுக்கொடி படர்ந்திருந்த சந்தனமரத்தில் ஏறுகையில் தடுமாறிய செய்தியை இந்தப் பாடல் கூறுகிறது.

இது தானே விளைந்ந தேறல்.

விளைவிக்கும் தேறல் இத்தகைய பழச்சாற்றை ஊறவைப்பது.

கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் (அகநானூறு பாடல் 2, கபிலர், கி.மு. ஆண்டுகள்)


Wednesday, 25 February 2015

அகநானூறு காதல்பாடல் 2

கடுவன் நீர்ப் பருகுதல்
2. குறிஞ்சி
தலைவியை நாடிப் பகலில் வந்த தலைவனிடம் தோழி சொல்கிறாள்.

நாட! உன் நாட்டில் விலங்குகளும் அவை நினைத்துப் பார்க்காத இன்பத்தை அடையும். அப்படி இருக்கும்போது நீ அடைய எண்ணிக்கொண்டு வந்த இன்பத்தை நீ அடைதல் உனக்குக் கடினமாகுமா? எளிதுதானே! இவளது தந்தையின் காவலர் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து வந்தால் இவள் இன்பத்தை நீ இரவிலும் பொறலாம். என்றாலும் ஒன்றை எண்ணிப்பார். வேங்கையும் பூத்துவிட்டது. நிலாவும் வளர்பிறையில் இருக்கிறது. திருமணம் செய்துகொண்டு இவள் இன்பத்தைப் பெறலாமே.
[1]
குறியா இன்பம், குறித்த இன்பம்
 • கொழுத்த இலையை உடைய வாழைமரப் பெருங்குலையில் நன்றாக முதிர்ந்த வாழைப்பழம் தானே உதிரும்.
 • தெவிட்டி உண்ணமுடியாமல் போன பலாச்சுளையும் கிடக்கும்.
 • இரண்டும் பாறையில் இருக்கும் ஆழமான சுனைநீரில் ஊறும். ‘தேறல்’ என்னும் கள்ளாக விளையும். அங்கு மேயும் கடுவன் என்னும் ஆண்குரங்கு அறியாமல் அதனை உண்ணும். மயக்கம் ஏறும். மிளகுக்கொடி படர்ந்திருக்கும் சந்தன மரத்தில் ஏற முடியாமல் தள்ளாடும். இது எண்ணிக்கூடப் பார்க்காத நிலையில் அதற்குக் கிடைத்த குறியா இன்பம். இத்தகைய இன்பத்தைப் பிற விலங்கினங்களும் பெறும் நாட்டை உடையவன் தலைவன்.
 • குறியா இன்பத்தை விலங்கினங்களும் பெறும் நாட்டை உடைய தலைவன் குறித்த இன்பத்தை (நாடிவரும் இன்பத்தை)ப் பெறுவது கடினமா? இல்லையே.   
[2]
இவளுக்கும் ஆசை
 • விரும்பத்தக்க அழகும், மூங்கில் போன்ற தோளும் உடைய இவளும் உன்னைப்போலவே உன்னிடத்தில் பாயும் நெஞ்சத்தைக் கட்டுப்படுத்த முடியாதவளாக இருக்கிறாள்.
[3]
இரவில்
 • இவளது தந்தை இரவிலும் காவல்காரர்களை வைத்துக் காவல் புரிகிறான். அந்தக் காவல்காரர்கள் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து இரவிலும் நீ வரலாம்.
[4]
ஆனாலும் ஒன்று.
 • வேங்கைப்பூ பூத்திருக்கிறது. (திருமணம் செய்யும் பருவகால அறிவிப்பு இது.) வெண்ணிலா காய்கிறது. (ஊர் பார்த்துவிடும்)
இதனையும் எண்ணிப்பார்.

பாடல் சொல்-பிரிப்புப் பதிவு
  
[1]
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது   5
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?               10
[2]
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள் ஆயின், தந்தை
[3]
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்   15
[4]
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.

பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது.
கபிலர் பாடல்கல்வெட்டில் புள்ளி வைத்த மெய்யெழுத்து 2

தமிழில் மெய்யெழுத்து அகர-ஒலி எழுத்தின்மேல் புள்ளி வைத்து எழுதப்படும். இந்த முறைமை தொல்காப்பியர் காலம் தொட்டே புழக்கத்தில் இருந்துவந்துள்ளது. இந்த வழக்கத்தைக் காட்டும் கல்வெட்டு ஒன்று முன்பே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வெட்டில் புள்ளி வைத்த மெய்யெழுத்து 1

இப்போது புள்ளி வைத்துத் தமிழ் மெய்யெழுத்தினை எழுதிக்காட்டிய மற்றொரு கல்வெட்டு இங்குக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

இந்தக் கல்வெட்டு ஆணைமலையில் உள்ளது.

இது ஆனைமலைக் கல்வெட்டு

[த்], [ட்] ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்கள் புள்ளி வைத்து எழுதப்பட்டிருப்பதை இதில் காணலாம். 


அரசன் முருகன்

இது ஆண்டி முருகன் சிலை
அரசன் முருகன் வேறு
முருகன் என்னும் பெயர் கொண்ட  அரசன் ஒருவன் பொதினி என்னும் ஊரில் இருந்துகொண்டு நாடாண்டுவந்தான்.

இந்தப் பொதினி ஆறு முகடுகளைக் கொண்ட ஆனைமலை (அறுகோட்டு யானை) முகடுகளில் ஒன்று. 

உருவத்தில்குதிரை போலத் தோற்றமளிக்கும் மலை குதிரைமலை. குதிரைமலை நாட்டு மக்கள் மழவர். இந்த மழவர்கள் முருகனைத் தாக்கினர். முருகன் மழவரை ஓட ஓட விரட்டினான். இவனை நெடுவேள் என்றும் வழங்கிவந்தனர். இவன் ஆவியர் குடிமகன். வண்டு மொய்க்கும் மாலையைத் தலையில் அணிந்தவன். வீரக் கழலைக் காலில் அணிந்தவன்.

தேவர் சூடும் பூக்களில் வண்டு மொய்ப்பதில்லை.

முருகன் ஆண்ட பொதினி இக்காலத்தில் பழனி என்னும் பெயராக மருவிவழங்கிவருகிறது.

பொதினியில் அக்காலத்தில் நகையில் வைக்கும் மணிக்கற்களுக்குப் பட்டை தீட்டும் பணி சிறப்பாக நடைபெற்றுவந்தது.


இந்த வரலாற்று நிகழ்வுக்கான சான்று

''வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய      5
கல் போல் பிரியலம்'' (அகநானூறு பாடல் 1)

ஆவியர் குடி

 1. அரசன் முருகன்
 2. சேரலாதன் மனைவி ‘வேள் ஆவிக்கோமான் பதுமன் தேவி’. இவர்களுக்குப் பிறந்த மகன் ‘களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்’. (பதிற்றுப்பத்து, நான்காம் பத்து, பதிகம்)
 3. செல்வக்கடுங்கோ வாழியாதன் மனைவி ‘வேள் ஆவிக்கோமான் பதுமன் தேவி’. இவர்களுக்குப் பிறந்த மகன் பெருஞ்சேரல் இரும்பொறை. (பதிற்றுப்பத்து, எட்டாம் பத்து, பதிகம்)
 4. பேகன் என்னும் அரசன் கடவுள் முருகன் காக்கும் உயர்ந்த குன்றினை உடைய பெருங்கல் என்னும் பழனிமலை அரசன். (ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை \ அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமை \ பெருங்கல் நாடன் பேகன் - புறநானூறு 158)
ஆவினன்குடி
பழனிமலைக்கு ஆவினன்குடி என்னும் பொயர் உண்டு. இப்பெயர் ஆவி < ஆவியர் என்னும் குடிப்பெயரோடு தொடர்புடையது.


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி