Wednesday, 3 December 2014

புறநானூறு # 110

பறம்பு மலை (இக்காலத் தோற்றம்)
போர்களில் வெற்றி கண்ட படையுடன் மூவேந்தர்களும் கூடிப் பாரியை எதிர்த்து நிற்கிறீர்கள். அவனது பறம்பு நாட்டை உங்களால் கைப்பற்ற இயலாது. காரணம் பறம்பு நாட்டிலுள்ள 300 ஊர்களையும் அவனை நாடிவந்து இரந்தவர்கள் தானமாகப் பெற்றுச்சென்றுவிட்டனர். இப்போது அவன் நாட்டில் இருப்பது பாரியும் நானும் மட்டுமே. மற்றும் அவன் இருக்கும் குன்றும் உள்ளது. அவனைப் பாடிக்கொண்டு இரவலராகச் சென்றால் அவற்றையும் நீங்கள் கெற்றுக்கொள்ளலாம்.

பாடல்

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமே;                               5
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே.
               
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல். [இந்தக் குறிப்பு பொருந்தவில்லை]
மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை ஔவையார் பாடியது.
           
காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி