Sunday, 30 November 2014

கலித்தொகை Kalittogai Compilation நூல்

முல்லைக்கலியில் வரும் ஏறுதழுவல் காட்சி

சங்கநூல் பட்டியலில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள நூல் கலித்தொகை. வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் நான்கு வகையான பாக்களில் கலிப்பாவுக்கு இலக்கியமாகத் திகழும் நூல் இது ஒன்றே. இது அகப்பொருள் பாடல்களைக் கொண்டது. ஐந்து திணைக்கும் பாடல்கள் உள்ளன. பாடல்கள் அனைத்தும் ஒருவரே பாடியது போன்று ஒரே வகையான மொழிநடை உடையனவாக அமைந்திருப்பினும் ஒவ்வொரு திணைப் பாடலையும் ஒவ்வொரு புலவர் பாடினார் என்று பழம்பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

கடவுள் வாழ்த்து – 1 – பெயர் தெரியவில்லை,
பாலைக்கலி – 2-36 (35 பாடல்) – பாலை பாடிய பெருங்கடுங்கோ
குறிஞ்சிக்கலி – 37-65 (29 பாடல்) – கபிலர்
மருதக்கலி – 66-100 (35 பாடல்) – மருதன் இளநாகனார்
முல்லைக்கலி – 101-117 (17 பாடல்) – சோழன் நல்லுருத்திரன்
நெய்தற்கலி – 118-150 (33 பாடல்) – நல்லந்துவனார்

இதனைத் தொகுத்தவர் தொகுப்பித்தவர் பற்றிய செய்தி கிடைக்கவில்லை. இந்த நூலை முதன்முதலில் 1887ஆம் ஆண்டு பதிப்பித்த சி. வை. தாமோதரனார் இதனைக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடிச் சேர்த்து நல்லந்துவனார் தொகுத்தார் எனக் கருதி ‘நல்லந்துவனார் கலி’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

நச்சினார்க்கினியார் (14 ஆம் நூற்றாண்டு) எழுதிய சிறந்த உரை ஒன்று இந்த நூல் முழுமைக்கும் உண்டு.
இந்தப் பாடல்களை இசைத்தமிழ் இக்கியம் எனலாம். கலித்தல் என்பது துள்ளுதல். இதில் உள்ள பாடல்கள் துள்ளும் இசைப்பாங்கினைக் கொண்டவை. இந்த நூல் தமிழின் சுவையைக் காட்டும் பாடல்களைக் கொண்டது ஆகையில் இதனைக் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.   


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.