Wednesday, 12 November 2014

புறநானூறு 89 Purananuru 89

அல்குல் அணியைக் காட்டும் படம்
ஔவையார் பூண்டிருந்த அணிகலன்
பாடல் காட்டும் பாவை
இடை அணி பொலிந்த ஏந்து கோட்டு அல்குல் மடவரல்
இடுப்பில் அணி சூடிய பருத்த பின்தொடை கொண்ட பெண்
அதியமான் நாட்டின் மீது படையெடுக்க எண்ணிய அரசன் வினாவுதலுக்குப் புலவர் ஔவையார் விடை தருகிறார்.
அணிகலன்களால் அழகு செய்யப்பட்டுப் பருமனாக விளங்கும் அல்குலை (பின் இடுப்பை) உடைய பெண்ணே!
மை தீட்டப்பட்ட கண்ணையும், ஒளிரும் நுதல்முகத்தையும் உடைய விறலியே!
‘உன் நாட்டில் என்னை எதிர்த்துப் போரிடத் தக்க போராளிகளும் உள்ளனரோ?’ என்று வேந்தே, நீ கேட்கிறாய்.
அடிக்கும் குச்சிக்கு அஞ்சாத பாம்பு போலச் சிறிய, பெரிய மறவர்களும் உள்ளனர்.
மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியைக் கேட்டால் அதனைப் போர் எனக் கருதி எழும் என் தலைவனும் இருக்கிறான்.

பாடல்

'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன   5
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்,
'அது போர்' என்னும் என்னையும் உளனே.

திணை தும்பை; துறை தானை மறம்.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி