Sunday, 30 November 2014

கலித்தொகை Kalittogai Prayer கடவுள் வாழ்த்து

சிவன் கூத்து
இந்தப் பாடல் சிவபெருமானை விளித்து அவனது கூத்தைப் போற்றிப் பாடுகிறது.

சிவபெருமான் நெறிமுறைகளை அந்தணர்க்கு அவர்களின் மறையாகிய வேதத்தைச் சொன்னவன். 
சடையில் (கங்கை)நீரை அடக்கியவன். 
முப்புரம் எரித்தவன். 
கூளியாகவும் விளங்கி போர் புரிபவன். 
நஞ்சுமணியைத் தொண்டைக்குள் அடக்கிக்கொண்டவன். 
எட்டுக் கைகளைக் கொண்டவன். – 
எண் கையாய், இதனைக் கேள்!

பறை முழக்கத்துடன் பல உருவம் காட்டிக்கொண்டு நீ ‘கொடுகொட்டி’ ஆடும்போது உன்னோடு இருக்கும் உமை சீர் பாடுவாளோ?

திரிபுரம் எரித்து அதன் சாம்பல் நீற்றை அணிந்துகொண்டு ‘பாண்டரங்கம்’ ஆடும்போது அவன் ‘தூக்கு’-இசை பாடுவாளோ?

புலித்தோல் அணிந்துகொண்டு, கொன்றைமாலை தோளில் புரளும்படி, நீ வென்றவரின் மண்டையைக் கையில் வைத்துக்கொண்டு ‘கபாலம்’ ஆடும்போது அவள் பாணி பாடுவாளோ?

இப்படி அவள், பாணி, சீர், தூக்கு தந்து உன் ஆட்டத்துக்குத் துணை புரிய நீ எங்களைக் காப்பாற்றுவதற்காக ஆடிக்கொண்டே இருப்பாயாக.

பாடல்

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:
தரவு

படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?

மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?

கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
இவை மூன்றும் தாழிசை

என ஆங்கு
இது தனச்சொல்
பாணியும், தூக்கும், சீரும், என்று இவை
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி
இது சுரிதகம்
என்பது,
வாழ்த்தியல் வகையே நாற் பாக்கும் உரித்தே
என்றதின்கண்,
வகை என்றதனால்
கொண்ட அறுமுறை வாழ்த்து அன்றி,
தனக்குப் பயன்படும்படி முன்னிலையாகக் கடவுளை வாழ்த்துதலின்,
கடவுள் வாழ்த்து எனப் பெயர் பெற்றதுகலித்தொகை Kalittogai Compilation நூல்

முல்லைக்கலியில் வரும் ஏறுதழுவல் காட்சி

சங்கநூல் பட்டியலில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள நூல் கலித்தொகை. 

வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் நான்கு வகையான பாக்களில் கலிப்பாவுக்கு இலக்கியமாகத் திகழும் நூல் இது ஒன்றே. 

இது அகப்பொருள் பாடல்களைக் கொண்டது. 
ஐந்து திணைக்கும் பாடல்கள் உள்ளன. 

பாடல்கள் அனைத்தும் ஒருவரே பாடியது போன்று ஒரே வகையான மொழிநடை உடையனவாக அமைந்திருப்பினும் ஒவ்வொரு திணைப் பாடலையும் ஒவ்வொரு புலவர் பாடினார் என்று பழம்பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

கடவுள் வாழ்த்து – 1 – பெயர் தெரியவில்லை,
பாலைக்கலி – 2-36 (35 பாடல்) – பாலை பாடிய பெருங்கடுங்கோ
குறிஞ்சிக்கலி – 37-65 (29 பாடல்) – கபிலர்
மருதக்கலி – 66-100 (35 பாடல்) – மருதன் இளநாகனார்
முல்லைக்கலி – 101-117 (17 பாடல்) – சோழன் நல்லுருத்திரன்
நெய்தற்கலி – 118-150 (33 பாடல்) – நல்லந்துவனார்

இதனைத் தொகுத்தவர் தொகுப்பித்தவர் பற்றிய செய்தி கிடைக்கவில்லை. 

இந்த நூலை முதன்முதலில் 1887ஆம் ஆண்டு பதிப்பித்த சி. வை. தாமோதரனார் இதனைக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடிச் சேர்த்து நல்லந்துவனார் தொகுத்தார் எனக் கருதி ‘நல்லந்துவனார் கலி’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

நச்சினார்க்கினியார் (14 ஆம் நூற்றாண்டு) எழுதிய சிறந்த உரை ஒன்று இந்த நூல் முழுமைக்கும் உண்டு.

இந்தப் பாடல்களை இசைத்தமிழ் இக்கியம் எனலாம். கலித்தல் என்பது துள்ளுதல். இதில் உள்ள பாடல்கள் துள்ளும் இசைப்பாங்கினைக் கொண்டவை. இந்த நூல் தமிழின் சுவையைக் காட்டும் பாடல்களைக் கொண்டது ஆகையில் இதனைக் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.   


Agananuru , the love-poems

Elephants Queue 
Agananuru means 400 poems of love-life. It is one of the eight anthologies of ‘sangam’ literature in Tamil. It has been added with one prayer song while compiling. 13 to 31 feet is the limit of the poems compiled in this work.
It has been divided into three parts.
1 to 120 are named ‘elephants’ queue’.
121 to 300 are named ‘strand of gem and coral’.
301 to 400 are names ‘a heap of pearls’.
A kind of clover rule has been adopted in compilation. The serial numbers number has been considered to allot the matter based strand of love-life.
Odd number poems – parting-love of arid-track
Number ending in 2 and 8 as 2, 8, 12, 18 … - union love of hill-track
Number ending 4 as 4, 14, 24 … - waiting-love of forest-track
Number ending 6 as 6, 16, 26 … - sulking-love of wet-land-track
Number ending 0 as 10, 20, 30 … - longing-love of littoral-track
The compiler is UruttiraSanmar, son of UppurikudiKizar. The patron of this compilation is King Pandian UkkirapPeruVazuti. Poems of 145 poets including three unknown have been compiled in this work. A good old commentary is available only for first 90 poems of this work.
It depicts the culture and history of the Tamils of ancient times.அகநானூறு நூல்-விளக்கம்

களிற்றியானை நிரை
சங்ககாலத்தில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்களின் தொகுப்பு இந்த நூல். இந்த நூலைத் தொகுத்த காலத்தில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றையும் இதில் சேர்த்துள்ளார். இதனை நெடுந்தொகை நானூறு என இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. அகப்பாட்டு என்னும் பெயராலும் உரையாசிரியர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள பாடல்கள் 13 முதல் 31 அடிகள் கொண்டவை.

இந்த நூல் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
களிற்றியானை நிரை (பெருமித யானைகளின் அணிவகுப்பு போல் பாடல்கள் அமைந்துள்ள பகுதி) 1 முதல் 120 பாடல்கள்
மணிமிடைப் பவளம் (மணி, பவளம் இரண்டும் கோத்தாற்போல் பாடல்கள் அமைந்துள்ள பகுதி) 121 முதல் 300 பாடல்கள்
நித்திலக் குவியல் (முத்துக்குவியல் போல் பாடல்கள் அமைந்துள்ள பகுதி) 301 முதல் 400 பாடல்கள்.

மேலும் இதன் தொகுப்பில் ஒருவகையான ஒழுங்குமுறை அமைந்துள்ளது.
1, 3, 5, 7, 9, 11 என்பது போல் ஒற்றை-எண் கொண்ட 200 பாடல்கள் பாலைத்திணை.
2, 8, 12, 18 என்பது போல் எண் கொண்ட 80 பாடல்கள் குறிஞ்சித்திணை
4, 14, 24 என்பது போல் எண் கொண்ட 40 பாடல்கள் முல்லைத்திணை.
6, 16, 26 என்பது போல் எண் கொண்ட 40 பாடல்கள் மருதத்திணை.
10, 20, 30 என்பது போல் எண் கொண்ட 40 பாடல்கள் நெய்தல்-திணை.

இந்த நூலைத் தொகுத்தவர் - மதுரை உப்பூரிகுடி கிழார் உருத்திர-சன்மர்.
தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்.
இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் 145 பேர்.
114, 117, 165 பாடல்களைப் பாடியவர் இன்னார் எனத் தெரியவில்லை. எனவே ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்கள் 142 பேர்.

இதன் முதல் 90 பாடல்களுக்கு மிகச் சிறந்த பழைய உரை ஒன்று உள்ளது. பண்டைக்கால தமிழர்களின் பண்பாட்டையும், அக்கால மன்னர்கள் சிலரின் வரலாறுகளையும் இந்த நூல் தெரிவிக்கிறது. 


Saturday, 29 November 2014

Agananuru – prayer song

God SIVA in a view 
Agananuru – prayer song
The author of this poem is Peruntevanar who is known of his epic literature ‘Baratam’ a story of war between five-brothers and hundred-brothers. He attributes his devotion on God Shiva.
The pose of the God is depicted here.

He wears ‘kontrai’ flower made of various hinds of garlands on his head and neck. He wears a sacred thread on his chest. He has an additional wink-less eye in his eyebrow. He has in his hands ‘kanichi’ (axe), ‘mazu’ (a kind of sward) and ‘muVayVel’ (three-pint spear). He will ride on bull. His wife ‘Umai’ be always joined with him. He shines as red sky. Crescent like teeth, he has. His hair is as flaming fire. There he is adorning with young moon. Heaven-men, sages or anybody do not know his birth. He wears tiger skin on his body.  His voice is as sweet as ‘yaz’ musical instrument. He is ‘Anthanan’ in his behavior being benevolent.அகநானூறு - கடவுள் வாழ்த்து

சிவன்
அக்காலக் கற்பனையின் ஒரு பகுதி இக்காலச் சிலையில் உள்ளது
அகநானூறு
கடவுள் வாழ்த்து

இந்தப் பாடல் அகநானூறு தொகுக்கப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்டது.இந்தப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
இந்தப் பாடலில் கடவுள் சிவபெருமான் வாழ்த்தப்படுகிறார்.

கார் காலத்தில் பூக்கும் கொன்றைப் பூவைத் தார், மாலை, கண்ணி என்னும் தொடைகளாக்கி அணிந்துகொண்டுள்ளவன் இவன். இவனது மார்பில் பூணூல் உள்ளது. இமைக்காத கண் ஒன்று இவன் நெற்றியில் உள்ளது. தோல்வி காணாத இவனுக்குக் கையில் கணிச்சி, மழு, மூவாய் வேல் (சூலம்) ஆகிய படைக்கருவிகள் உள்ளன. இவன் ஏறிச் செல்வது காளைமாடு. இவனோடு சேர்ந்து ஒன்றாய் இருப்பவள் உமை. இவனுக்குச் செவ்வானம் போன்ற மேனி. அந்த வானில் விளங்கும் பிறை போல் வளைந்த வெண்ணிறப் பற்கள் இவனுக்கு உண்டு. பற்றி எரியும் தீ போன்று விரிந்துகிடக்கும் சடைமுடியை உடையவன். அதில் இளநிலாவைச் சூடிக்கொண்டுள்ளான். மூப்பில்லாத தேவர், முனிவர், மற்றும் பிறர் யாவராலும் அறியப்படாத பழமையான மரபினனாக விளங்குபவன். வரிப்புலியின் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டிருப்பவன். யாழ் ஒலி போன்று இசைக்கும் குரலை உடையவன், இவன் அறநெறி பேணும் அந்தணன். குற்றமற்ற இவன் திருவடி நிழலில் உலகம் இயங்குகிறது.

பாடல்

கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் 5
வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,          10
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்     15
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.
                         
-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
காலம் – அகநானூறு தொகுக்கப்பட்ட காலம் (கி. பி. மூன்றாம் நூற்றாண்டு)

Friday, 28 November 2014

Purananuru # 106

flower Calotropis (erukku)
There is no deviation to God good or evil. He accepts all kinds of flowers even the mean nasty fragrant flower Calotropis (erukku) if offered.
So the King Pari offers gifts to all level of people whether they are fools or mean fellows.   

Poem by: Kapilar
Poem on: Patron Pari  
Context: nature of the hero


புறநானூறு # 106

புல் இலை எருக்கம் பூ
வெள்ளெருக்கம பூ
நல்லது, தீயது என்று கடவுளுக்கு இல்லை. அற்பமான எருக்கம் பூவையும் கடவுள் சூடிக்கொள்வார். அதுபோல ஏதுமறியாத மடையன், பெண் யாராயிருந்தாலும் பாரி வழங்குவான்.

பாடல்

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே.                                5
               
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
வேள் பாரியைக் கபிலர் பாடியது.
               
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


Purananuru # 105

KOLLU grain 

You VITRALI dancer! Approach patron PARIVEL, sing on him and get valuable ornaments as gift. He is as sweet as the flowing water of his falls in the in petty channels plowed in field for kollu grain planting.

Poem by: Kapilar
Poem on: Patron Pari  
Context: guiding a dancer to patron
Refer the original poem in Tamil with annotation

புறநானூறு # 105

கொள்ளு
ஒளிரும் முகம் கொண்ட விறலியே! பாரிவேள் அரசனிடம் பாடிக்கொண்டு சென்றால் சிறந்த அணிகலன்களைப் பரிசாகப் பெறலாம். வண்டு ஊதும் குவளை மலரில் சிதறி மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும், கொள் விதைக்க உழுத வயலின் படைச்சால் வாய்க்கால் வழியே ஓடும்படி பாயும் அருவி நீரைக் காட்டிலும் அவன் இனிய பாங்கினை உடையவன்.  

பாடல்

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக,                              5
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.
               
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
வேள் பாரியைக் கபிலர் பாடியது.
               
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


Purananuru # 104

place is one of the factors to win 
You warriors! Please note. The crocodile will destroy the elephant even in low level of water where the children play.
My king is a man like crocodile. Don’t face him in war.
   
Poem by: Avvaiyar
Poem on:  King Atiyaman Neduman Anji
Context: ability of victory


புறநானூறு # 104

நெடும்புனலில் வெல்லும் முதலை - திருக்குறள் - 495
சிறுவர் விளையாடிக் கலக்கும் முழங்கால் அளவு நீரிலும் முதலை யானையை வீழ்த்தி இழுத்து அழித்துவிடும். என் தலைவன் அந்த முதலை போன்றவன்.
மறவர்களே! இளையவன் என்று அவனோடு போரிட்டு விளையாடாதீர்கள்.

பாடல்

போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை:
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை
நுண் பல் கருமம் நினையாது,    5
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே.
               
திணை வாகை; துறை அரச வாகை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது.
               
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி