Friday, 26 September 2014

புறநானூறு 1 Purananuru 1

அருந்தவத்தோன்


தலையில் கொன்றைப் பூ சூடியவன்.
மார்பில் கொன்றை-மாலை அணிந்தவன்.
அவனுக்கு ஊர்தி வெண்ணிறக் காளைமாடு.
கொடியும் காளைமாடு என்று கூறுகின்றனர்.
தொண்டையில் நஞ்சுக் கறை.
அந்தக் கறை அந்தணர் மறையில் போற்றப்படுகிறது.
ஒருபாதி (இடப்புறம்) பெண்-உருவம்.
அதனை அவன் தனக்குள் மறைத்துக்கொள்வதும் உண்டு.
நெற்றியில் பிறை.
அந்தப் பிறையை 18 வகையான தேவ கணங்களாலும் போற்றி வணங்கப்படும்.
அவன் எல்லா உயிரிங்களுக்கும் பாதுகாவலாக விளங்குபவன்.
நீர் வற்றாத கரகத்தைக் கையில் வைத்திருப்பவன்.
தாழ்ந்த சடைமுடியிலும் நீர் வற்றுவதில்லை.
இந்தக் கோலத்தில் அவன் தவம் செய்துகொண்டிருக்கிறான்.

பாடல்

கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை:
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப:
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே:
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்:
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத்து,
தாழ் சடைப் பொலிந்த, அருந் தவத்தோற்கே.

கடவுள் வாழ்த்து.
பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது.

காலம்      : கி.பி. 3 ஆம் நூற்றாண்டு
ஆங்கிலத்தில்இதன் செய்தி

அருந்தவத்தோன்


நீர் அறவு அறியாக் கரகம்

கொன்றை




No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி