Sunday, 31 August 2014

Love poem Kurunthogai # 322

Is there any comfortable life than living in his house? No. then let us go there. He is living in a small village where the young men foster the young forest-sheep AmAn that entered bewildering while its family was driven to catch away and the young learns itself to live along among the people.   

Words by    - heroine
To whom    - her friend
Context       - hero is outside out-side at a hearing distance               
          
Author of the poem is AIYUUR MUDAVN
2nd century B.C

காதல் பாடல் குறுந்தொகை # 322

322. குறிஞ்சி

அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து,
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,
மருவின் இனியவும் உளவோ?
செல்வாம் தோழி! ஒல்வாங்கு நடந்தே.

தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது.

ஐயூர் முடவன்


ஆமான்

கானவர் ஆமான் காட்டாடுகளைப் பிடிக்கத் துரத்தியபோது அச்சம் கொண்டு அவற்றின் குட்டிகளில் ஒன்று தன் இனத்தை விட்டுப் பிரிந்து அங்கிருந்த சிற்றூருக்குள் நுழைய, அவ்வூர் இளையர் அதனைப் பேணிப் பாதுகாக்க, அந்தக் குட்டி வீட்டில் வாழ வல்லமை உடையதாக மாறிவிட்டது போல, நானும் மாறி வாழ விரும்புகிறேன். அவரோடு இணைந்து வாழ்வதைக் காட்டிலும் இன்பம் வேறு உண்டோ? தோழி! முடிந்தவரை நடந்தே அவர் வாழும் அந்த ஊருக்குச் சென்றுவிடலாம்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

Saturday, 30 August 2014

Love poem Kurunthogai # 321

He is at our door trying it to open. He has applied sandal in his chest and wearing flower water lily on his head. You are an innocent girl. He is suitable you can sleep on his chest. Furthermore, you consider that he has come all the way where tiger roars after killing MARAIYAA deer [image] to eat.  
          
Author of the poem is not known.
2nd century B.C.

காதல் பாடல் குறுந்தொகை # 321

321. குறிஞ்சி

மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு,
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால்,
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல் வாழி வேண்டு, அன்னை! நம் கதவே.

தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது.


அவன் மார்பில் சந்தனம். தலையில் குவளைப்பூ. நள்ளிரவில் வந்து நம் கதவைத் திறக்க முயல்கிறான். நீ அறியாப் பெண். உன் மார்புக்கு அவன் துணையாவான். மரையா இன மான்கள் ஓடும்படி ஆண்மானைக் கொன்ற புலி (படம்) உறுமும் வழியில் வந்துள்ளான். இப்போது கதவைத் திற. அன்னையை நான் பார்த்துக்கொள்கிறேன்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

Love poem Kurunthogai # 320

I did not smile with him even one day. Being so, the village-people living in the street where birds are chattering on the showered flowers PUNNAI, is murmuring over our relation, on seeing him on the sand nearby my home where the fish gathered at sea and IRAAL fish gathered at lagoon are laid on sunbath that smells everywhere.

Some in-between meanings are there among these words. Peoples murmur as the birds are chattering and the secret news of clandestine love spreads as the smell of the drying fishes.  
          
Author of the poem is Tumbi-ser-kiiran
2nd century B.C.

காதல் பாடல் குறுந்தொகை # 320

320. நெய்தல்

பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின்
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு,
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன்,
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்
புன்னைஅம் சேரி இவ் ஊர்
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே.


அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.

தும்பிசேர் கீரன் பாடல்

துறைவனைப் பார்த்து ஒரு நாள் கூடச் சிரிக்கவில்லை. அப்படி இருந்தும் இந்த ஊர் என்னைப் பழி தூற்றுகிறதே.
இந்த ஊரின் நெருக்கள் புன்னை மரங்களை உடையன. பொன் போன்று கொட்டிக் கிடக்கும் அதன் பூக்களில் இருந்துகொண்டு பறவைகள் ஒலிக்கும். (அதுபோல் அல்லவா இந்த ஊர் அலர் தூற்றுகிறது)
பரதவர் கடலிலிருந்து கொண்டுவந்த மீனும், உப்பங்கழியில் பிடித்த இறால் மீனும் வெண்மணலில் காய்ந்து எங்கும் நாறும் துறைவன் அவன். (அதுபோல் அல்லவா இருவர் உறவும் ஊரெல்லாம் நாறுகிறது)

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

Love poem Kurunthogai # 319


Male deer embracing its female is leading a bush in its love passion. Male elephant [image] grasping its female is leading to mountain for the safe-side. Creating such a pleasant situation the rainy season is in progress. The evening time is also combined. You my friend, if He did not return to us even at his assured time what happen to life; and your life?
The lady says to her friend.
          
Author of the poem is Thaayankannan
2nd century B.C.

காதல் பாடல் குறுந்தொகை # 319


319. முல்லை

மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி, (படம்)
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர் நிலையே

பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிரழிந்து சொற்றது.

தாயங் கண்ணன்  

ஆண்மான் பெண்மானைத் தழுவிக்கொண்டு காதல் மயக்கத்தோடு காட்டின் புதர் மறைவுக்குள் செல்லும்படியாகவும், ஆண்யானை பெண்யானையைக் கையால் தழுவிக்கொண்டு மலைப்பகுதிக்குள் செல்லும்படியாகவும் மாரி காலத்து மழை பொழியும் காலமும், மாலைக்காலமும் வந்துவிட்டன. பொன் போன்ற என் மேனி நலம் குன்றிச் சிதைகிறது. தோழி! இன்னும் அவர் வரவில்லை என்றால் என் உயிரும் உன் உயிரும் என்னவாகும்?

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

Friday, 29 August 2014

Love poem Kurunthogai # 318

He is the Man of littoral land wherein the water SURA fish roaming is filled with flowers of PUNNAI and NJAZAL float seems to be as festive field after the VERI function performed. He assured me to marry for hug my shoulder. He stole me. He is to foster me. He will make me float. (He is all in all for me.)     
Author of the poem is Ammuvan
2nd century B.C.

காதல் பாடல் குறுந்தொகை # 318


318. நெய்தல்

எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்,
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப்
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா வஞ்சினம் செய்த
களவனும், கடவனும், புணைவனும், தானே.

கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

அம்மூவன் பாடல்

துறைவனின் நீர்ப்பரப்பில் எறிந்து தாக்கும் சுறாமீன் செழித்திருக்கும். அந்த நீர்ப்பரப்பில் புன்னை, ஞாழல் பூக்கள் கொட்டி வெறியாட்டு விழா நடைபெற்ற களம் போலக் காணப்படும். அந்தத் துறைவனுக்கும் எனக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு நாள் குறிக்கப்படவில்லை. குறிப்பினும் எங்களின் உறவு பற்றி அறியாதவர்களுக்கு நான் சொல்ல வேண்டுமா? மூங்கில் போன்ற என் தோளை அணைப்பதற்கு முன்பே அவன் சத்தியம் (வஞ்சினம்) செய்து தந்திருக்கிறான். என்னைக் களவாடியவனும் அவனே. கடமைப்பட்டவனும் அவனே. என்னைப் புணையாகத் தாங்குபவனும் அவனே. (இப்படி எனக்கு எல்லாம் அவனே).

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

Love poem Kurunthogai # 317

He is a Man of the mountain where male deer [image] drink water in spring-pond with a sigh that makes the mango flower drop, after eating NELLI (Indian goose berry) fruit.
He should be away letting us alone in winter season when the north wind blows after raining season.
     
Author of the poem is Kandara Tathan of Madurai village
2nd century B.C.
Refer the original poem in Tamil with annotation 

காதல் பாடல் குறுந்தொகை # 317


317. குறிஞ்சி

புரி மட மரையான் கரு நரை நல் ஏறு (jபடம்)
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?

பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

மதுரைக் கண்டரதத்தன்

திருகிய கொம்புகளையும், கருநரை நிறத்தையும் உடைய ஆண் மரையான் புளிப்புச் சுவை கொண்ட நெல்லிக் காய்களைத் தின்றுவிட்டு அருகிலுள்ள மாம்பூக்கள் உதிரும் வண்ணம் பெருமூச்சு விட்டபடி மலைச்சுனையில் உள்ள நீரைப் பருகும் நாட்டை உடையவன் அவன். வடபுல வாடை மழை அழிந்த காலத்தில் தென்புலம் நோக்கி வரும் பனிக்காலத்தில் அவன் நம்மை விட்டுவிட்டு இருப்பானோ? (வந்துவிடுவான்)

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

Love poem Kurunthogai # 316

While the girls play ORAI game in the seashore will insult the crab [image] run here and there. The insulted crab will get its relief by a huge wave-approach.  
He is a Man of such littoral land.
He did not keep his words.
Hence, my bangles in fit now got loose. Physically I am fatigued. I feel unhappiness. If this comes to the knowledge of mother what happen? In such a position I am surviving.
The lady inquires with her friend.
     
Author of the poem is Thumbi ser kiran
2nd century B.C.

காதல் பாடல் குறுந்தொகை # 316


316. நெய்தல்

ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி தோழி! விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட,
ஆய்ந்த அலவன் (படம்) துன்புறு துனைபரி
ஓங்கு வரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?

வரைவிடை ''வேறு படுகின்றாய்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

தும்பி சேர் கீரன்

கடலலை மோதும் மணல் அணைந்த கரையில் ஓரை ஆடும் மகளிர் ஒன்று கூடி நண்டை அங்குமிங்கும் ஓடச்செய்து துன்புறுத்தியபோது பெரிய அலை வந்து மகளிரை ஓட்டி நண்டின் துன்பத்தைப் போக்கும் துறைவன் அவன்.
அவன் என்னிடம் சொன்ன சொல் இப்போது அவனோடு சென்று பிறசொல் ஆகிவிட்டது.
பருமனுக்கேற்ப ஆய்ந்து போட்ட என் வளையல் கழல்கிறது. என் உடலிலே சோர்வு. நெஞ்சிலே வருத்தம். இவற்றையெல்லாம் அன்னை அறிந்தால் நான் வாழமுடியுமா?
தோழி! இன்னும் சாகாமல் வாழ்கிறேன்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

ஆங்கிலத்தில்இதன் செய்தி  

Love poem Kurunthogai # 315

He is a Man like Sun. But as per his behavior, I became a dry-seed-fruit NERUNJI (tribullus terrestris).
He is the Man of a land where waterfalls downs white in color in the mountain as the Moon spreads its light at sea.
     
Author of the poem is VE:LA: THATTAN of Madurai village
2nd century B.C.

காதல் பாடல் குறுந்தொகை # 315


315. குறிஞ்சி

எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அனையன் தோழி!
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே.

வரைவிடை, ''வேறுபடுகின்றாய்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மதுரை வேளாதத்தன் பாடல்

எழும் நிலவின் ஒளி கடலில் தோன்றுவது போல வெள்ளை அருவி மலையில் தோன்றும் நாடன் அவன். அவனோ ஞாயிறு போன்றவன். நானோ அவனுக்கு நெருஞ்சி முள் போன்றவள் ஆகிவிட்டேன்.
   
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

Love poem Kurunthogai # 314

He likes my breast to enjoy. For that purpose to earn wealth he went through troublesome arid forest way. (He assured me return back before rainy season). The cloud carrying water roaming in high air is raining [image] with lighting and thunder in the evening. But he didn’t return. What shall I  do?
The lady confesses to her friend.   
 
Author of the poem is PE:RI SA:TTHAN
2nd century B.C.

காதல் பாடல் குறுந்தொகை # 314


314. முல்லை

சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல் (படம்)
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப,
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,
வாரார் வாழி! தோழி! வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவம் காட்டி, அழிந்து கூறியது.

பேரிசாத்தன்

தோழி கேள். இன்பம் தரும் என் இளமுலையைத் தழுவ விரும்பித் துன்பம் தரும் நிலத்தின் வழியே அவர் சென்றுள்ளார்.  நீரைச் சுமந்துகொண்டு உயர்ந்த வானத்தில் செல்லும் மழைமேகம் மின்னி இடித்து இருண்டு மழை பொழியும் மாலைக் காலத்திலும் (வருவதாக வாக்குரைத்த காலத்திலும்) அவர் வரவில்லையே.
   
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

Thursday, 28 August 2014

Love poem Kurunthogai # 313

He is a Man of littoral land where small white gull eats its prey swimming in shallow water and rest in a bush on the bank of the lagoon.
I tied him physically. But the friendship is not tied. Even though, it is not detachable. It is very strong.
She says about her love.
 
Author of the poem is unknown  
2nd century B.C.

காதல் பாடல் குறுந்தொகை # 313

சிறுவெண் காக்கை

313. நெய்தல்

பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங்கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு
யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே.

இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, ''பண்பிலர்'' என்று இயற்பழித்த தோழிக்கு, ''அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!'' என்று,சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட மொழிந்தது

பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளைக் காக்கை நீந்தக்கூடிய உப்பங்கழியில் நீந்தி இரையைத் தேடி உண்ட பின்னர் கரையில் இருக்கும் புதரில் இருக்கை கொள்ளும் துறைவன் துறைவன் அவன். அவனை கட்டிப் பிடித்தேன். ஆனால் அவன் நட்பைக் கட்டிப்போட முடியவில்லை. என்றாலும் அதனை அவிழ்க்க முடியாது. அது முடிந்துபோன வரலாறு.
  
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

Love poem Kurunthogai # 312

She is a clever steeling girl. She pleased me at midnight treading with smell those fragrant flows all over the forest of victorious king MALAIYAN of MULLUR territory. Then after early morning she appears before her relatives having dressed her hair removing all the flowers I decorated and redressing her hair with oil and making up with sandal smoke to be smelled. As she appears redressing she seemed as she is not happy with the new ones.
“He” says about “her”.      
 
Author of the poem is KAPILAR
2nd century B.C.

காதல் பாடல் குறுந்தொகை # 312


312. குறிஞ்சி

இரண்டு அறி கள்வி நம் காதலோளே:
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து,
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து,
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி,
அமரா முகத்தள் ஆகித்
தமர் ஓரன்னள், வைகறையானே.

இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது.

கபிலர் பாடல்

என காதலி இரண்டும் தெரிந்த ஒரு திருடி. பகை வெல்லும் வேலினை உடைய முள்ளூர் மன்னன் காடெல்லாம் மணக்கும்படி வந்து நள்ளிரவில் என்னோடு இருப்பாள். பின்னர் நான் சூட்டிவிட்ட மலர்கள் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டுத் தலையில் எண்ணெய் வைத்துச் சீவி முடித்துக்கொண்டு அதிகாலையில் தன்னைச் சார்ந்தவர்களோடு இருந்துகொள்வாள்.  
  
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

ஆங்கிலத்தில்இதன் செய்தி  

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி