குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு
பன்முகப் பார்வை
 1. தோழி, தாயிடம் சொல்கிறாள். தன் தோழி தலைவியின்நோய்க்குக் காரணம் என்னவென்று ஊரெல்லாம் கேட்டறிந்தும், முருகு-விழா நடத்தியும் தீரவில்லையேஎன்று வருந்திக்கொண்டிருக்கிறாய். 1
 2. யாருக்கும் சொல்லக்கூடாது என்று மறைத்துவைத்திருந்தசெய்தியை என்னிடம் மட்டும் என் தோழியாகிய தலைவி சொன்னாள் 2
 3. அணிமணிகள் போனால் திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம்.சால்பு குன்றினால் மூற்றும் துறந்த திரும்பப் பெற இயலாது என அறிஞர் கூறுவர் 3
 4. தலைவிக்கு மன்றல் நடந்துவிட்டது. இது நானும்அவளும் ஆராய்ந்து மேற்கொண்ட முடிபு. இது தாயாகிய உனக்கும் தெரிந்தால் பழி ஒன்றும் இல்லை. 4
 5. இந்த மன்றல்-மணம் முறைப்படி நடக்கவில்லையேஎன்று இவள் தேம்பிக்கொண்டிருக்கிறாள் 5
 6. இருபெரு வேந்தர்க்கிடையே போர் நிகழும்போதுஇடைநிற்கும் சான்றோர் போல நானும் கலங்கிக்கொண்டிருக்கிறேன் 6
 7. குடி, குலம் போன்றவற்றைப் பார்க்காமல் நிகழ்தஇந்த மன்றல்-மணம் பற்றிச் சொல்கிறேன். சினம் கொள்ளாமல் கேட்பாயாக 7
 8. தினைப்புனம் காத்து மாலையில் திரும்புக எனஅனுப்பிவைத்தாய் 8
 9. நீ சொன்னபடி, தழல், தட்டை, குளிர் கருவிகளில்இசை எழுப்பிக்கொண்டு தினைப்புனம் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், 9
 10. பெருமழை பொழிந்தது 10
 11. அருவியில் தண்ணீர் கொட்டியது. நாங்கள் நீராடினோம்11
 12. கூந்தலை உலர்த்தினோம்12
 13. அங்கே பூக்கள் (99) பூத்துக்கிடந்தன 13
 14. அவற்றைப் பறித்துப் பாறையில் குவித்துவிட்டு,கிளி ஓட்டும் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தோம் 14
 15. குவித்த பூக்களால் தழையாடை செய்து உடுத்திக்கொண்டு அசோக மரத்தடியில் இருந்தோம். 15
 16. அகன்ற மார்பில் பூமாலை சூடிக்கொண்டு கையில்வில்லேந்திய ஒருவன் அங்கு வந்தான் 16
 17. வேட்டை-நாய்கள் அவனைச் சூழ்ந்து வந்தன17
 18. நாங்கள் பயந்து வேறிடம் சென்றோம். பசுவைக்கண்ட காளை போல அவன் பின்தொடர்ந்தான் 18
 19. ‘ஏன் நடுங்குகிறீர்கள். ஏதாவது துன்பம் நேர்ந்ததா’– என மெல்ல வினாவினான். நாங்கள் எதுவும் பேசவில்லை 19
 20. ‘ஏதாவது பேசக்கூடாதா’ – எனக் கெஞ்சினான்20
 21. பூத்த கொம்புகளை ஒடித்துத் தட்டிக் குரைக்கும்நாய்களின் வாயை அடக்கிளான் 21
 22. அப்போது, மதம் கொண்ட ஆண்யானை ஒன்று சிங்கம்போல அங்கு வந்தது 22
 23. செய்வது அறியாமல் நாணத்தை விட்டுவிட்டு என்தோழி அவனைத் தழுவிக்கொண்டு நடுங்கினாள் (முருகள்-வள்ளி கதை - முளைத்த வரலாறு) 23
 24. யானையின் முகத்தில் அம்பைப் பாய்ச்சினான்.புண் பட்ட யானை திரும்பிப் போய்விட்டது. 24
 25. ஆற்று வெள்ளத்தில் பாய்ந்தோம். அப்போது இவள் பெருவெள்ளம் பாயும்போது கரையிலிருக்கும்வாழைமரம் போல அவள் நடுங்கினாள் 25
 26. ‘அஞ்சாதே, உன் நலத்தை உண்கிறேன்’ – என்றுசொல்லிக்கொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்தான் 26
 27. நாணமும், அச்சமும் கொண்டு நான் பிரிந்துவிட்டேன்.அது மயிலாடும் பாறை 27
 28. அவன் குன்றத்துத் தலைவன். பெருமை மிக்கவன்28
 29. உன் திருமணத்தில் ஊரார் விருந்து உண்ணும்போதுநானும் உன்னுடன் சேர்ந்து உணவு உண்பது மேலானது’ – என்று அறநெறியும் கூறித் தேற்றினான்29
 30. கடவுள் பெயரால் வஞ்சின-வாய்மை (சத்தியம்)கூறிக்கொண்டு முத்தமிட்டான் 30
 31. பொழுது மறைந்த மாலைநேரம் 31
 32. வானம் இருண்டது 32
 33. ‘நாடறியத் திருமணம் செய்துகொள்வேன்’ – என்றுமுன்னங்கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னான். பசுவுடன் வரும் காளை போல அவன் வந்தான்33
 34. அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று34
 35. ஊர்க்காவலர் உலாவல், நாய் குரைத்தல், தாயாகியநீ விழித்துக்கொள்ளல், நிலா-வெளிச்சம் போன்ற இடையூறுகளால் இவளை அடையமுடியாமல் போனாலும்,சலித்துக்கொள்ளாமல் வருகிறான் 35
 36. அவனுக்காக இவள் தூங்காமல் கிடக்கிறாள்36
 37. புலி, உளியம், ஆளி, ஆமான், பாம்பு, முதலைஇடையூறுகளுக்கு இடையே வருகிறானே என்று இவள் அழுகிறாள் 37
 38. இடுக்கு, வழுக்கு, மலைப்பாம்பு உள்ள பாதையில்வருகிறானே என்று இவள் அழுகிறாள் 38


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.