மலைபடுகடாம் Malipadukadam

மலைபடுகடாம் என்னும் நூல் சங்கநூல் தொகுப்பில் பத்துப்பாட்டு என்னும் பகுப்பில் இடம்பெற்றுள்ள 10 நூல்களில் ஒன்று.

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன்சேய் நன்னனைப்
பாடியது.

இந்த நூலிலுள்ள செய்திகள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கம் தரப்படுகின்றன. 

அவற்றைக் காண உதவும் தொடுப்புகள் இங்குத் தரப்பட்டுள்ளன. 
நூலின் பகுதி விரிவு - இணைப்பைச் சொடுக்கிப் பெறலாம்
 1. பையில்முழவு முதலான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு செல்பவர்களே! 1
 2. நீங்கள்செல்லும் வழியில் வழிப்பறி செய்ய அம்பு தொடுத்துக்கொண்டு காத்திருக்கும் கானவர் உங்களுக்குத்துன்பம் செய்யமாட்டார்கள். 2
 3. உங்களோடுபேரியாழ்ப் பாணரும் வருகின்றார். 3
 4. அவர்களின்இசையைக் கேட்டுக்கொண்டே துன்பம் இல்லாமல் மலைமீது ஏறுகிறீர்கள். 4
 5. நாயின்நாக்குப் போன்று ஈரமான காலடி கொண்ட விறலியருடன் ஏறுகிறீர்கள். 5
 6. உங்கள்தலைவன் யாழிசைச் கலைஞர்களின் தலைவன். 6
 7. நான் நீங்கள்செல்லுமிடத்திலிருந்து வருகிறேன். 7
 8. அங்கிருக்கும்வள்ளல் மங்கையர் கண்கள் மொய்க்கும் மலர்த்தார் அணிந்த மார்பினை உடையவன். 8
 9. அவன் நன்னன் சேய் நன்னன். அவனிடம் செல்வீர் ஆயின், 9
 10. வழியில்அவன் நாடு சுரக்கும் வளங்களையும் பெறலாம். 10
 11. அவனோ,தன் அரசாட்சி முழுவதையும் உங்களுக்குக் கொடுத்தாலும் நிறைவடையாமல் மேலும் மழை போல வழங்குவதற்காகநாள்மகிழ் இருக்கையில் காத்திருப்பான். 11
 12. சென்றவர்வல்லவர் அல்லர் ஆயினும் வல்லவர் போல அவையில் சொல்லிக்காட்டுவான். 12
 13. அவன் நாட்டுநவிரமலை முதலானவற்றின் பெருமையினைச் சொல்கிறேன், கேளுங்கள். 13
 14. விதைத்ததெல்லாம்விரும்பிய அளவு விளையும் நாடு அது. 14
 15. முசுண்டை,எள், தினை, அவரை, வரகு – செழிப்புற்றிருக்கும். 15
 16. ஐவன-நெல்,கரும்பு, தோரை – செழித்திருக்கும். 16
 17. ஐயவி,இஞ்சி, வாழை – செழித்திருக்கும். 17
 18. இறுகு,உழுந்து, நாவல், கூவை, ஆசினிப்பலா – செழித்திருக்கும். 18
 19. வானம்முழங்கி மழைவளம் சுரந்துகொண்டே இருக்கும். 19
 20. பூத்துக்கிடக்கும் காந்தள் வெறியாடிய களம் போலத் தோன்றும். 20
 21. கானவர்சிறுகுடியில் தேனும் கிழங்கும் பெறலாம். 21
 22. ஆரிப்படுகர் வாழ்விடங்களுக்குச் சென்று, வேள் வள்ளலிடம் யாழ் மீட்டச் செல்கிறோம் என்று சொல்லுங்கள்.22 
 23. கறியுடன்சமைத்த வரகரிசிப் பொங்கல் பெறலாம். 23
 24. மூங்கில்குழாயில் ஊறிய தேறல், மான், முள்ளம்பன்றிக் கறி, மோர் கலந்த மூங்கிலரிசிச் சோறு ஆகியவற்றைக்குறமகள் வயிறார உண்ணத் தருவாள். 24
 25. வள்ளலிடம்செல்லும் நினைப்பை மறந்துவிட்டு அங்கேயே நீங்கள் தங்கிவிடவும் கூடும். 25
 26. பல நாள்தங்காமல் மலைநாட்டை விட்டுவிட்டு நிலநாட்டுக்குச் செல்லுங்கள். 26
 27. விளைநிலங்களைஅழிக்கும் பன்றியை வீழ்த்த ‘கல்-அடார்’ என்னும் பொறி வைத்திருப்பர். எனவே இருளில் செல்லாமல்பகலில் செல்லுங்கள். 27
 28. பாம்புஇருக்கும் குழிகள் இருக்கும். கண்டால் கைகூப்பித் தொழுதுவிட்டுச் செல்லுங்கள். 28
 29. பகல் வேளையிலும்குறவர் பரண்மீது இருந்து யானையை ஓட்டக் கவண்கல் வீசுவர். எனவே மரம் மறைவில் செல்லுங்கள்.29
 30. ஆற்றில்வழுக்கும் இடங்கள் இருக்கும். கொடிக் கொம்புகளை ஊன்றிக்கொண்டு ஒருவர் ஒருவராகச் செல்லுங்கள்.30
 31. விழுந்தவர்மாளும் பாசி படர்ந்த அருப்பங்கள் இருக்கும். மூங்கிலில் கட்டிய எருவைக்கோல் கொண்டுசெல்லுங்கள்.31
 32. வழியில்காணப்படும் கடவுளை வழிபடுங்கள். அங்கெல்லாம் இசைமுழக்கம் செய்துவிட்டுச் செல்லுங்கள். 32
 33. ஆடும்மயில், தாவும் குரங்கு, தொங்கும் தேன்கூடு ஆகியவற்றை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நடக்காதீர்கள்.கால் தடுமாறி விழுக்கூடும். 33
 34. வழியில்உள்ள கல்லுக் குகைகளில் தங்கலாம். 34
 35. இரவில்தங்கிவிட்டுப் பகலில் செல்லுங்கள். 35
 36. மலைப்பாம்புகள்இருக்கும். பதனமாகச் செல்லுங்கள். 36
 37. பழுத்தஆலமரத்தில் பறவையொலி கேட்பது போல ஆரவாரம் மிக்க நாட்டின் வழியாகச் செல்லுங்கள். 37
 38. திசை தெரியாவேளையில் உங்களிடமுள்ள இசைக்கருவிகளை முழக்குங்கள். வேட்டையாடும் குறவரும், கானவரும்வந்து உங்களை அழைத்துச் சொல்வர். 38
 39. உண்ணப்பழமும், சூடப் பூவும் தந்து உங்களைத் தங்கள் சுற்றம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்வர். 39
 40. புதியவர்பார்வை நடுங்கவைக்கும். அப்போது நிழலில் அமர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் வழிகாட்டுவர்.40
 41. வான் அரமகளிர்நீராடுவதைக் காணலாம். 41
 42. யானை ஓட்டும்கானவர் பூசல், காலில் முள் தைத்துக் கானவர் அழும் ஒலி, புலி குத்திய மார்புப் புண்ணைஊசியால் குத்தித் தைக்கும்போது வலி தெரியாமல் இருக்கக் கொடிச்சியர் பாடும் பாடல் –கேட்கலாம். 42
 43. வேங்கைபூத்ததும் அணிந்துகொள்ளும் மகிழ்ச்சிப் பாட்டு, புலி தாக்கிய பெண்யானையை ஆண்யானை பாதுகாக்கும்ஒலி, பிடி தவறி விழுந்த குட்டிக்காகக் குரல் கொடுக்கும் குரங்குக்கூட்டத்தின் பூசல்– கேட்கலாம். 43
 44. தேன் எடுக்கும்கொள்ளை-ஓசை, குறவர் தம் பெண்டிரோடு ஆடும் குரவைப்பாட்டு, ஆற்றுநீர் கற்பிளவில் பாயும்இசை – கேட்கலாம். 44
 45. யானையைப் பழக்கப் பாகர் எழுப்பும் ஓசை, மூங்கிலில் செய்த தட்டைக்கருவியை முழக்கிக்கொண்டு கிளியோட்டும் மகளிர் பாடும் பாட்டு, காட்டில் மேயும் மரையான்காளைகளை கோவலரும் குறவரும் இணைந்து பிடித்து அடக்கும் கம்பலை ஒலி – கேட்கலாம். 45
 46. உண்டதுபோக மிஞ்சிக் கிடக்கும் பலாப்பழங்களின்மீது கொட்டைக்காகக் கன்றுக்குட்டிகளை மிதிக்கச்செய்யும்சிறுவர் ஓசை, கரும்பு எந்திர ஓசை, தினை குற்றும் மகளிரின் வள்ளைப்பாட்டு, சேம்பு, மஞ்சள்வயல்களில்  பன்றி ஓட்டும் பன்றிப்பறை – கேட்கலாம்.46
 47. இந்த ஓசைகள்தாம்மலைபடுகடாம். இவை திசையெங்கும் முழங்கும். ஊர்த் திருவிழாமுழக்கம் போல எதிரொலிக்கும். 47
 48. எங்கும்கண், காது, நா – இன்பம். 48
 49. விறலியர்குறிஞ்சிப்பண் பாட, கைகூப்பித் தொழுதவண்ணம் செல்லுங்கள். 49
 50. மழைத்தூறினால் குகையில் புகுந்துகொள்ளுங்கள். 50
 51. உயர்ந்தமரங்களை அண்ணாந்து பார்த்தால் தலை சுற்றும். அங்கெல்லாம் தடித்த கோலை ஊன்றிக்கொண்டுவிழுந்துவிடாமல் செல்லுங்கள். 51
 52. காய்ச்சியஇரும்பு போல் பாறை சுடும் வெயிலில் செல்லாமல் வெயிலின் சினம் தணிந்திருக்கும்போது செல்லுங்கள்.52
 53. இசைக்கருவிகளைநழுவவிடாமல் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள். 53
 54. பகைவரைத்தொலைத்த மறவர் பெயர் எழுதப்பட்ட நடுகல் கொண்ட பாதைகள் பல இருக்கும். 54
 55. அங்கெல்லாம்யாழ் மீட்டியும், கொம்பு ஊதியும் வழிபடுங்கள். புதிய வழி உண்டாக்கிக்கொண்டு சென்றால்பின்னர் வருபவர்கள் அடையாளம் கண்டு வருவதற்காக, புல்லை முடிந்து அதன் மேல் கல் வைத்துவிட்டுச்செல்லுங்கள். 55
 56. செல்லுமிடத்தைக்காட்டுமாறு கல்லால் கொட்டி எழுதப்பட்டிருக்கும் கல்லேசு கவலை (கைகாட்டி மரங்கள்) இருக்கும்.படித்து அறிந்துகொண்டு செல்லுங்கள். 56
 57. இளைப்பாறிக்கொண்டுசெல்லுங்கள். 57
 58. கோவலர்தரும் பசுப்பால் அருந்தி இளைப்பாறிக்கொண்டு செல்லுங்கள். 58
 59. குரும்பை-ஆடு,வெள்ளாடு ஆகியவற்றின் பாலும் சோறும் பெறலாம். 59
 60. அங்கேதோல் விரிப்பில் உறங்கலாம். 60
 61. நன்னனிடம்செல்கிறோம் என்று சொன்னால் போதும். ஊன்-கறியும், கிழங்கும் பிறரிடம் வாங்கிக்கொண்டுவந்து (தண்டிக் கொண்டுவந்து) தருவார்கள். துன்புறுத்துவோர் எங்குமே இல்லை. 61
 62. மரா-மரத்தளிரில் மாலை கட்டி அணிந்துகொள்ளுங்கள். தோண்டிய கிணற்றில் நீருண்டும், நீராடியும்செல்லுங்கள். 62
 63. ஊரிலுள்ளகூரைக் குடிசைகளிலெல்லாம் நெல்லஞ்சோறும் அவரைக்காய்ப் புளிக்குழம்பும் பெறலாம். 63
 64. பொன்னிறஅரிசியில் வெண்ணெய் கலந்த பொங்கல்-சோறும் பெறலாம். 64 
 65. தினையரிசிஇடியாப்பம் பெறலாம். ஞெகிழியை மாட்டி வைத்துக்கொண்டு உறங்கி விடிந்தபின் செல்லுங்கள்.65
 66. ஆங்காங்கேபலநாள் தங்கியும் செல்லலாம். 66
 67. வலையோர்தரும் வாளைமீன்-குழம்பு, பழையர்-மகளிர் தரும் நண்டுக்குழம்பு ஆகியவை பெறலாம். 67
 68. எருதுஓட்டும் களமர் ஓசையோடு சேர்ந்து மருதப்பண் இசைத்துக்கொண்டு செல்லுங்கள். 68
 69. நெல் அறுப்போர்தண்ணுமை முழக்குவர். அப்போது மிரண்டு எருமை பாயவரும். பாதுகாப்பாகச் செல்லுங்கள், சேயாற்றின்கரையிலேயே செல்லுங்கள். 69
 70. அங்கிருந்துஅவன் ஊர் தொலைவில் இல்லை. 70
 71. வேல் சாத்தியிருக்கும்அவன் ஊர் வாயிலுக்குள் செல்லுங்கள். 71
 72. வள்ளலைக்காண வந்துள்ளனர் என்று ஊரிலுள்ளவரெல்லாம் விருந்தளிப்பர். 72
 73. ஆமான்,யானை, கரடி, மரையான் – குட்டி 73
 74. உடும்பு,மயில், கானக்கோழி – ஆண் 74
 75. நறுமணமரவகை - 75
 76. மிளகு,தேன் - 76
 77. அவன் முற்றத்தில்குவிந்துகிடக்கும் 77
 78. அந்த முற்றத்தில்விறலியர் பாட்டுடன் சீறியாழ் இசைத்து, கடவுளை வாழ்த்திவிட்டு மருதப்பண் பாடுங்கள்.78
 79. கொடைக்கடன்தீர்க்கும் செம்மலோய் – என்று பாடும்போது, 79
 80. வந்ததேபோதும் – என்று சொல்லி அழைத்துச் சென்று தன் சுற்றத்தாரோடு அமர்த்திக்கொள்வான். 80
 81. தம் பெயரைத்தம்மோடு கொண்டுசென்ற மக்கள் சேயாற்று மணலைக்காட்டிலும் பலர். 81
 82. அவனைக்காணும் உங்கள் ஆர்வத்தைக் காட்டிலும் உங்களைக் காணும் ஆர்வம் மிகுதியாக உடையவன் அவன்.82
 83. உடுக்கஆடை, உண்ணக் கறிச்சோறு பலநாள் தங்கினும் தருவான். 83
 84. தலைவனுக்குத்தாமரை-விருதணி, விறலியர்க்கு அணிகலன், தேர், தேர்க்-குதிரை, உழவு-எருது, ஊர்திக்-குதிரை,நிதி – அனைத்தும் வழங்குவான். 84
 85. மூங்கிலடர்ந்தநவிரமலையில் பொழியும் மழை போல வழங்குவான். 85
 86. இறுதியில் தனியே சேர்க்கப்பட்டுள்ள வெண்பா

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி