Tuesday, 18 February 2020

கம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4-3 40

வாலியின் சிறப்பு


மரங்களின் ஒசை, சூரர மகளிர் ஊசலாடும் ஒலியுடன் சேர்ந்து கேட்டது 31
வெயில் மதியம் போல் இருந்தது 32
பூ இருக்கையில் சுக்கிரீவனும் இராமனும் இருந்துகொண்டு உரையாடினர் 33
கனி, காய் விருந்து இருவரும் உண்டனர் 34
'நீயும் மனைவியைப் பிரிந்துள்ளாயோ?' என இராமன் சுக்கிரீவனை வினவினான் 35
அனுமன் விளக்கலானான் 36

வாலியின் சிறப்பு


வரம்பு இல்லாத ஆற்றல் பெற்ற வாலி என்பவன் உள்ளான் 37
தேவருக்கு எதிர் நின்று தனி ஒருவனாகவே மந்திர மலையை இழுத்துக் கடலைக் கடையும் தோள் வலிமை பெற்றவன். 38
நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றின் வலிமையெல்லாம் கொண்டவன் 39
அவன் போரிடும்போது எதிரில் நிற்பவர் யாராயினும் அவரது வலிமையில் பாதி-வலிமை வாலிக்கு வந்து சேர்ந்துவிடும். 40


பாடல்

ஆரமும் அகிலும் துன்றி, அவிர் பளிக்கு அறை அளாவி,
நாரம் நின்றன போல் தோன்றி, நவ மணித் தடங்கள் நீடும்
பாரமும், மருங்கும், தெய்வத் தருவும், நீர்ப் பண்ணை ஆடும்
சூர் அரமகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே. 31

அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் - வேலை முன்,
பயில்வு இல் கல்வியார் பொலிவு இல் பான்மை போல்,
குயிலும் மா மணிக் குழுவு சோதியால்,
வெயிலும், வெள்ளி வெண் மதியும், மேம்படா. 32

ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய்,
மேய மைந்தரும், கவியின் வேந்தனும்,
தூய பூ அணைப் பொலிந்து தோன்றினார்,
ஆய அன்பினோடு அளவளாவுவார். 33

கனியும், கந்தமும், காயும், தூயன
இனிய யாவையும் கொணர, யாரினும்
புனிதன் மஞ்சனத் தொழில் புரிந்து, பின்
இனிது இருந்து, நல் விருந்தும் ஆயினான். 34

விருந்தும் ஆகி, அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து, நோக்கி, நொந்து, இறைவன், சிந்தியா,
'பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய்கொலோ நீயும் பின்?' என்றான். 35

என்ற வேலையில் எழுந்து, மாருதி,
குன்று போல நின்று, இரு கை கூப்பினான்-
'நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்!
ஒன்று, யான் உனக்கு உரைப்பது உண்டு' எனா: 36

'நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன், மலையின் மேல் உளான்,
சூலிதன் அருள் துறையின் முற்றினான்,
வாலி என்று உளான், வரம்பு இல் ஆற்றலான்; 37

'கழறு தேவரோடு, அவுணர் கண்ணின் நின்று,
உழலும் மந்தரத்து உருவு தேய, முன்,
அழலும் கோள் அரா அகடு தீ விட,
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்; 38

'நிலனும், நீரும், மாய் நெருப்பும், காற்றும், என்று
உலைவுஇல் பூதம் நான்கு உடைய ஆற்றலான்;
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
மலையின் நின்றும் இம் மலையின் வாவுவான்; 39

'கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்; 40

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
3. நட்புக் கோட் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி