Tuesday, 18 February 2020

கம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 plus

மிகைப் பாடல்கள்

இரானும் இலக்குவணனும் சவரி மலைக்கு வந்த பின்னர் மாருதி (அனுமன்) அவர்களிடம் சொல்லலானான் 2-1
மாருதி மார்பில் மாலை அணிந்திருந்தான் 2-2
வாலி ஏவலால் வருகின்றனர் என்று எண்ணிய சுக்கிரீவனிடம் மாருதி சில சொன்னான் 2-3
வருபவர் இங்கிதம் உடையவர்களாகத் தோன்றுகின்றனர் 8-1
மூன்று தேவரும் தொழும் உருவம் மண்ணுலகில் வருகிறது 8-2
முனிவர் முதலானோர் ஆற்றலுக்கும் பேம்பட்டவர்கள் இவர்கள் 19-1
வாலி நெருக்கத் தப்பித்து,சுக்கிரீவன் இந்த மலைக்கு வந்துள்ளான் 21-1

மிகைப் பாடல்கள்

அன்ன ஆம் என வெருவி, அங்கண் நில்லாது, அருகு
துன்னு வானரர்களொடு தோம் இலா மேரு நிகர்
என்னும் மாமலை முழையில் எய்தினார்; எய்தியபின்,
நல் நலம் தெரி மனதின் நாடி மாருதி மொழியும். 2-1

தாரன், நீலனை, மருவு தாம மாருதியை, முதல்
வீரரோடு, இரவிசுதன், மேரு மால் வரையை நிகர்
பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய,
ஆர மார்பரும், அதனின் ஆகுமாறு உறல் கருதி, 2-2

மானை நாடுதல் புரிஞர் - 'வாலி ஏவலின் வருதல்
ஆனவாறு' என மறுகி, ஆவி சோர் நிலையர், தொடர்
ஏனை வானரர் சிலரும் ஏக, மா முழையில், முழு
ஞான நாதரை, அறிவின் நாடி, மாருதி மொழியும்: 2-3

உலகு தங்கிய பல தொல் உயிர்கள் உயர்ந்திடு பரிசில்
இலகும் இங்கிதம் உடையர்; இசையின் இன்புறு சுருதி
அலகு இல் விஞ்சைகள் உடையர்; அகிலமும் தொழு கழலர்;
விலகு திண் கொடு வினைகள் வெகுளிகொண்டு அடு விறலர். 8-1

சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல் என. 8-2

மற்றும், இவ் உலகத்து உள்ள முனிவர், வானவர்கள், ஆர், இச்
சொல் திறம் உடையார்? மற்று எச் சுருதியின் தொகுதி யாவும்
முற்று அறிதரும் இம் மாணி மொழிக்கு எதிர், முதல்வர் ஆய
பெற்றியர் மூவர்க்கேயும், பேர் ஆற்றல் அரிது மன்னோ'. 19-1

இருக்கன் மா மைந்தரான வாலியும், இளவல்தானும்,
செருக்குனோடு இருக்கும்காலை, செறுநரின் சீறி வாலி
நெருக்குற, வெருவி, இந்த நெடுங் குவட்டு இருத்தான் தண்பால் -
மருக் குலாம் தாரீர்! வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ? 21-1


கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
2. அனுமப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி