Monday, 24 February 2020

கம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10 80

மழைச்சாரல் படுத்திய பாடு


சூடு பட்டு எரியும் புண் மேல் வேல் பாய்வது போலவும்,
அரம்பையர் அல்குல்-ஆடை அசையும்படி வாடை வீசுவது போலவும்
இராமன் ஆசை துன்புற்றது 71

கன்னல் காலம் காட்டிற்று. கதிரவன் தெரியவில்லை 72

நெல்வளத்தால் பொன்வளம் மிகுந்தது 73
அறம் கருதும் சிந்தை கொண்டவர் அந்தணர் 
அவரின் மனம் போல மழைத்துளிகள் விழுந்தன. 
யானைகள் நனைந்துகொண்டே நின்றன 74
மகளிர் அந்தியில் அகிம் புகை ஊட்டுவர். 
அன்னங்கள் அதனை விரும்பின 
மந்தி நனையாமல் இருக்கக் குகையை நாடிற்று 
கடுவன் பொறியுணர்வு அற்று நடுங்கிற்று 75
மகளிர் ஆடும் ஊசல் போல் மழைச்சாரலில் அருவி நீர் ஆடிற்று 76
குருகு துணை பிரிந்தவர் போல் குருகிக்கொண்டிருந்தது 77
மயில் மதங்கியர் போல் ஆடிற்று 
மான் கூட்டம் மரத்தடியில் ஒதுங்கிக்கொண்டன 78
மகளிரும் கைந்தரும் தவிசில் துயின்றனர் 79
அன்னம் தாமரையில் இல்லை. மரத்தில் ஏறிக்கொண்டது. 
அத்துனை வெள்ளப் பெருக்கு 80

பாடல்

பாசிழை அரம்பையர், பழிப்பு இல் அகல் அல்குல்
தூசு, தொடர் ஊசல், நனி வெம்மை தொடர்வுற்றே
வீசியது, வாடை - எரி வெந்த விரி புண் வீழ்
ஆசு இல் அயில் வாளி என, ஆசைபுரிவார் மேல். 71

வேலை நிறைவுற்றன; வெயில் கதிர் வெதுப்பும்
சீலம் அழிவுற்ற; புனல் உற்று உருவு செப்பின்
காலம் அறிவுற்று உணர்தல், கன்னல் அளவு அல்லால்,
மாலை பகல் உற்றது என, ஓர்வு அரிது மாதோ! 72

நெல் கிழிய நெற் பொதி நிரம்பின, நிரம்பாச்
சொற்கு இழிய நல் கிளிகள்; தோகையவர், தூ மென்
பற்கு இழி மணிப் படர் திரைப் பரதர் முன்றில்,
பொற் கிழி விரித்தன, சினைப் பொதுளு புன்னை. 73

நிறம் கருகு கங்குல், பகல், நின்ற நிலை நீவா -
அறம் கருது சிந்தை முனி அந்தணரின், ஆலிப்
பிறங்கு அரு நெடுந் துளி படப் பெயர்வு இல் குன்றில்,
உறங்கல, பிறங்கல் அயல் நின்ற, உயர் வேழம். 74

சந்தின் அடையின் படலை வேதிகை தடம்தோறு,
அந்தி இடு அகில் புகை நுழைந்த, குளிர் அன்னம்;
மந்தி துயில் உற்ற, முழை; வன் கடுவன், அங்கத்து
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த. 75

ஆசு இல் சுனை வால் அருவி, ஆய் இழையர் ஐம்பால்
வாச மணம் நாறல் இல ஆன; மணி வன் கால்
ஊசல் வறிது ஆன; இதண் ஒண் மணிகள் விண்மேல்
வீசல் இல வான;- நெடு மாரி துளி வீச. 76

கருந் தகைய, தண் சினைய, கைதை மடல், காதல்
தரும் தகைய போது கிளையில் புடை தயங்க,
பெருந் தகைய பொற் சிறை ஒடுக்கி, உடல் பேராது,
இருந்த, குருகின் பெடை- பிரிந்தவர்கள் என்ன. 77

பதங்கள் முகில் ஒத்த, இசை பல் ஞிமிறு பன்ன,
விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும்
மதங்கியரை ஒத்த, மயில்; வைகு மர மூலத்து
ஒதுங்கின, உழைக் குலம்; - மழைக் குலம் முழக்க. 78

விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி, மென் கொம்பு
இளைக்கும் இடை மங்கையரும், மைந்தர்களும், ஏற;
தளத் தகு மலர்த் தவிசு இகந்து, நகு சந்தின்
துளைத் துயில் உவந்து, துயில்வுற்ற, குளிர் தும்பி. 79

தாமரை மலர்த் தவிசு இகந்து, தகை அன்னம்,
மாமரம் நிரைத் தொகு பொதும்பருழை வைக;
தே மரம் அடுக்கு இதனிடைச் செறி குரம்பை,
தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார். 80

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
10. கார்காலப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

3 comments:

 1. இந்திரியம் - வடசொல்
  இந்தியம் - கம்பன் தமிழாக்கம்

  ReplyDelete
 2. கம்பனின் கருத்துக் கனவு

  ReplyDelete
 3. நனையும் விலங்குகள்

  ReplyDelete

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி