Monday, 24 February 2020

கம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10 100

சூழ்ச்சித்துணை கொண்டு வெல்வோம்


இராமன் தம்பியிடன் பிதற்றுகிறான் 
அவளை உன் கையடை என்று சொல்லி என்னிடம் சனகன் கொடுத்தானே 91
என் துயருக்கு வரம்பு உண்டோ 92
அரக்கரை அழிப்பதற்கு முன் என் மயிலைக் காணமுடியுமா 93
தருமத்துக்கு மட்டும் அஞ்சும் வில்லாளியே! என்ன செய்வேன் - என்றான் 94

இலக்குவன் மேற்றுகிறான்.
கூதிர் காலம் முடியப்போகிறது. அயர வேண்டாம். 95

வாலி அமிழ்தம் கடைந்தவன் 96
அவனை வென்றது போல் வெல்வோம் 97
சிவன் முப்புரம் சுடவில்லையா 98
வல்லாளரைத் துணையாக்கிப் கொள்வோம் 
மிட்டுவோம் 
இறுதியில் வாகை சூடுவோம் 99
அரக்கர் அறம் திம்பினார் 
நம் வெற்றிக்கு அது போதாதா 100

பாடல்

'நெய் அடை, தீ எதிர் நிறுவி, "நிற்கு இவள்
கையடை" என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு,
மெய் அடையாது; இனி, விளிதல் நன்று அரோ. 91

'தேற்றுவாய், நீ உளையாக, தேறி நின்று
ஆற்றுவேன், நான் உளனாக, ஆய்வளை
தோற்றுவாள் அல்லள்; இத் துன்பம் ஆர் இனி
மாற்றுவார்? துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ? 92

'விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும்
சுட்டபோது, இமையவர் முதல் தொல்லையோர்
பட்டபோது, உலகமும் உயிரும் பற்று அறக்
கட்டபோது, அல்லது, மயிலைக் காண்டுமோ? 93

'தருமம் என்ற ஒரு பொருள்தன்னை அஞ்சி, யான்
தெருமருகின்றது; செறுநர் தேவரோடு
ஒருமையின் வந்தனரேனும் உய்கலார்; -
உரும் என ஒலிபடும் உர விலோய்!' என்றான். 94

இளவலும் உரைசெய்வான், 'எண்ணும் நாள் இனும்
உள அல; கூதிரும், இறுதி உற்றதால்;
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து
அளவியது; அயர்வது என்? - ஆணை ஆழியாய்! 95

'திரைசெய் அத் திண் கடல், அமிழ்தம் செங் கணான்
உரைசெயத் தரினும், அத் தொழில் உவந்திலன்;
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி, தன்
குரை மலர்த் தடக் கையால் கடைந்து கொண்டனன். 96

'மனத்தினின் உலகு எலாம் வகுத்து, வாய்ப் பெயும்
நினைப்பினன் ஆயினும், நேமியோன் நெடும்
எனைப் பல படைக்கலம் ஏந்தி, யாரையும்,
வினைப் பெருஞ் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால். 97

'கண்ணுடை நுதலினன், கணிச்சி வானவன்,
விண்ணிடைப் புரம் சுட, வெகுண்ட மேலைநாள்,
எண்ணிய சூழ்ச்சியும், ஈட்டிக் கொண்டவும், -
அண்ணலே! - ஒருவரால் அறியற்பாலதோ? 98

'ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி, பின்
ஏகுறு நாளிடை எய்தி, எண்ணுவ
சேகு அறப் பல் முறை தெருட்டி, செய்த பின்,
வாகை என்று ஒரு பொருள் வழுவற்பாலதோ? 99

'அறத் துறை திறம்பினர், அரக்கர்; "ஆற்றலர்
மறத் துறை நமக்கு" என வலிக்கும் வன்மையோர் -
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டுஎனின்,
புறத்து, இனி யார் திறம் புகழும் வாகையும்? 100

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
10. கார்காலப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

1 comment:

  1. சுக்கிரீவனைத் துணையாக்கிக்கொண்டது நடந்து முடிந்த சூழ்ச்சி
    வீடணனைத் துணையாக்கல் நிகழப்போகும் சூழ்ச்சி

    ReplyDelete

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி