Sunday, 9 February 2020

கம்பராமாயணம் கவந்தன் படலம் - KambaRamayanam 3-12 10

அரக்கன் கவந்தன்


25 யோசனை தூரம் கடந்து இருவரும் கவந்தன் வனத்தை அடைந்தனர்
இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைகளை நீட்டி உயிர்களைப் பிடித்து உண்ணுபவன் கவந்தன் 1
எறும்போ யானையோ எல்லாமே வெறுக்கும் பான்மை கொண்டவன் 2
உயிரினம் அவன் கண்ணில் படாமல் ஓடிவிடும் 3
அந்த வனத்தில் மேகம் சுருண்டு விழும் 4
உலக்கை போன்ற கால்களை உடையவன் 5
இருவரும் அவன் கைக்குள் அகப்பட்டுக் கொண்டனர் 6
இராமன் தம்பியைப் பார்த்தான் 
இராவணன் ஊரும் இப்படிப்பட்டதுதான் என்றான் இளையவன் 7
அங்கு அரக்கர் முரசு முழங்கும் 
அந்தணர் சங்கொலி அங்குக் கேட்காது 8
அமிழ்தம் கடைந்த நாகம் வால் அறுந்து தலையால் சுருட்டி உண்பது போன்றவன் கவந்தன் 9
இருவரும் அவன் முன் மாட்டிக்கொண்டனர் 10 

பாடல்

ஐ-ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி, அடவி புடைபடுத்த
வையம் திரிந்தார்; கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான்;
எய்யும் சிலைக் கை இருவரும் சென்று, இருந்தே நீட்டி எவ் உயிரும்
கையின் வளைந்து வயிற்று அடங்கும் கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார். 1

எறுப்பு இனம், கடையுற, யானையே முதல்
உறுப்புடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன;
வெறிப்புறு நோக்கின, வெருவுகின்றன;
பறிப்பு அரு வலையிடைப் பட்ட பான்மைய; 2

மரபுளி நிறுத்திலன், புரக்கும் மாண்பிலன்;
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன;
வெருவுவ, சிந்துவ, குவிவ, விம்மலோடு
இரிவன, மயங்குவ, இயல்பு நோக்கினார். 3

மால் வரை உருண்டன வருவ; மா மரம்
கால் பறிந்திடுவன; கான யாறுகள்
மேல் உள திசையொடு வெளிகள் ஆவன;
சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன; 4

நால் திசைப் பரவையும் இறுதி நாள் உற,
காற்று இசைத்து எழ எழுந்து, உலகைக் கால் பரந்து
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன
போல், திசை சுற்றிய கரத்துப் புக்குளார். 5

தேமொழி திறத்தினால், அரக்கர் சேனை வந்து
ஏமுற வளைந்தது என்று, உவகை எய்தினார்;
நேமி மால் வரை வர நெருக்குகின்றதே
ஆம் எனல் ஆய, கைம் மதிட்குள் ஆயினார். 6

இளவலை நோக்கினன் இராமன், 'ஏழையை
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும், இவ்
அளவையது ஆகுதல் அறிதி; ஐய! நம்
கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம்' என, 7

'முற்றிய அரக்கர் தம் முழங்கு தானையேல்,
எற்றிய முரசு ஒலி, ஏங்கும் சங்கு இசை,
பெற்றிலது; ஆதலின், பிறிது ஒன்று ஆம்' எனச்
சொற்றனன் இளையவன், தொழுது முன் நின்றான். 8

'தெள்ளிய அமுது எழத் தேவர் வாங்கிய
வெள் எயிற்று அரவம்தான்? வேறு ஓர் நாகம்தான்?
தள்ள அரு வாலொடு தலையினால் வளைத்து,
உள் உறக் கவர்வதே ஒக்கும்; ஊழியாய்!' 9

என்று இவை விளம்பிய இளவல் வாசகம்
நன்று என நினைந்தனன், நடந்த நாயகன்;
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு, ஓங்கல்தான்
நின்றென இருந்த அக் கவந்தன் நேர் சென்றார். 10

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
12. கவந்தன் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி