Thursday, 13 February 2020

ஒப்பீடு திருமுருகாற்றுப்படை நெடுநல்வாடை Comparison between two poems of Nakkeerar

முன்னுரை


பாட்டு நூல்கள் 10-ல்
திருமுருகாற்றுப்படை
நெடுநல்வாடை  
ஆகிய இரண்டு நூல்களும் நக்கீரர் என்னும் புலவரால் பாடப்பட்டவை.

அறிஞர்களில் சிலர் பரிபாடல் நூலில் காணப்படுவது போல் பழைய மரபுக் கதைகள் விரவி வருவதால் காலத்தால் பிற்பட்டது எனக் கருதுகின்றனர்.

தொகை நூல்கள் 8-ல் கடவுளைப் போற்றும் பாடல்கள் இல்லை என்பதாலும் அவ்வாறு கருதுவர்.

திருமுருகாற்றுப்படை கடவுளைப் போற்றும் நூல் அன்று. முருகனிடம் அற்றுப்படுத்தும் நூல்.

பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை, பொருநராற்றுப்படை முதலான ஆற்றுப்படைப் பாடல்கள் எட்டுத்தொகை. இவற்றைப் போன்று முதுவாய் இரவலனை முருகனிடம் ஆற்றுப்படுத்தும் நூல் திருமுருகாற்றுப்படை.

மற்று இதனைப் புலவராற்றுபடை என்னாமல் முருகாற்றுப்படை என்றது ஏன்? முருகன் தெய்வம் என்பதால் போலும்.

அருஞ்சொல் ஆட்சி


[செய்பு] என்னும் வினையெச்சம், உயர்தினைப் பன்மை ஈறு [மார்] ஆகிய சொல் வழக்குகள் தொன்மையானவை. நக்கீரர் இவற்றை இந்த இரண்டு பாட்டுகளிலும் போற்றிப் பயன்படுத்தியுள்ளார்.

செய்பு வாய்பாடு


நெடுநல்வாடை

 • வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ, பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென,  (1) 
 • விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம், இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு, ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து,  (75) நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
 • ஆடவர் குறுகா அருங் கடி வரைப்பின், வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு வில் கிடந்தன்ன கொடிய, பல் வயின், வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ,    (110) மணி கண்டன்ன மாத் திரள் திண் காழ், செம்பு இயன்றன்ன செய்வு உறு நெடுஞ் சுவர், உருவப் பல் பூ ஒரு கொடி வளைஇ, கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்
 • புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை, திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, (160) விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து, முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய, உரோகிணி நினைவனள் நோக்கி,
 • வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கி, தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய, நன் பல் பாண்டில் விளக்கில், பரூஉச் சுடர் அழல,  (175) வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு

முருகு

 • உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு   பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு, (1)
 • தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே:    (90)
 • ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்   செம் பொறி வாங்கிய, மொய்ம்பின், சுடர் விடுபு, (105) வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு, நிமிர் தோள்:
 • முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து,  செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் (140) நல் யாழ்
 • பகலில் தோன்றும் இகல் இல் காட்சி நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு, ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெரீஇயர்  மீன் பூத்தன்ன தோன்றலர், மீன் சேர்பு வளி கிளர்ந்தன்ன செலவினர், வளியிடை (170)
 • குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன், முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,     (215)
 • செங்கால் மராஅத்த வாலிணர் இடை இடுபு தொடுத்த தழை (203)

மாரைக்கிளவி


[மார்] என்னும் இடைச்சொல் பலர்பால் வினைமுற்றாக வரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப. (வினையியல் 10)

தொல்காப்பிய நெறியில் இவை வினைமுற்றுகள்.
ஆயின் இங்குள்ள ஆட்சி முற்றெச்சம்.

முருகு
 • உரும் இடித்தன்ன குரலினர், விழுமிய உறு குறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார், அந்தரக் கொட்பினர் – (173)
நெடுநல்வாடை
 • பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,   (54)
 • ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,   தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை,    கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ,    கருங் கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப;   (70)

தொன்மக் கதை


இரு நூல்களிலும், இவர் பாடிய புறநாற்றுப் படலிலும் தொன்மக் கதைகளின் குறிப்பு உள்ளது. 
ஆக இந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் பாடியவர் ஒரே நக்கீரர் என்றுதான் கொள்ளவேண்டி உள்ளது. 

அறிஞர்கள் எண்ணவேண்டும். 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி