Thursday, 23 January 2020

திருவாசகம் – அதிசயப் பத்து – Tiruvasagam – Wonder - chapter 26

அதிசயப் பத்துஅறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்

வைப்பு மாடென்றும் மாணிக்கத் தோளியென்றும் மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவரல் இதயங்கள் திரத்திடை நைவேனை
ஒப்பிலாதான் உவமையில் இறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து
அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே. 428

  • என்னை அடியாரொடு கூட்டிய அதிசயம் கண்டோமே 

நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவரொடும் கூடேன்
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் என்னடியான் என்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற
ஆதி ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே. 429

  • நிரந்தரம் அவன்

முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண் அதுடை எந்தை
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி அது வைத்த
அன்னை ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே. 430

  • அடியார்க்கு எளியவன் 

பித்தன் என்று எனை உலகவர் பகர்வதோர் காரணம் இது கேளீர்
ஒத்துச் சென்று தன் திருவருட் கூடிடும் உபாயமது அறியாமே
செத்துப் போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே. 431

  • என்னைப் பித்தன் என்பர் 

பரவுவாரவர் பாடு சென்று அணைகிலேன் பன்மலர் பறித்து ஏத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை
இரவு நின்று எரி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 432

  • குடி கெடுகின்றேன் 

எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 433

  • என் ஏழைமையால் 

பொத்தை ஊன் சுவர் புழுப் பொதிந்து உளுத் தசும்பு ஒழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதி நின்று இடர்க் கடற்சுழித் தலைப்படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 434

  • என் உடம்பு மொத்தை ஊன்சுவர் 

நீக்கி முன் என்னைத் தன்னொடு நிலாவகை குரம்பையில் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன் செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 435

  • தன்னொடு நிலா வகையில் என்னை என் உடம்புக் கூட்டில் பகுத்தி வைத்து விட்டான் 

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல்
பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அகப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்த்திடும் பித்தர் சொல் தெளியாமே
அந்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 436

  • அகப்பொருளைப் பார்க்க மாட்டாது செய்துவிட்டான் 

இருள் திணிந்து எழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் இது வித்தைப்
பொருளெனக் களித்து அருநரகத்திடை விழப் புகுகின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச் சினப் பதத்தொடு செந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே. 437

  • என் உடம்பு வல்வினைச் சிறுகுடில் 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 
26.அதிசயப் பத்து - முத்தி இலக்கணம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி