Friday, 24 January 2020

திருவாசகம் – அற்புதப்பத்து – Tiruvasagam – marvel - chapter 41

அற்புதப்பத்து

அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

அவன் அற்புதம் \ வியத்தகு செயல் 

மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 569

 • வாழ்க்கை கடல் 
 • தையலார் அதில் ஆழ்த்தும் சுழி  - இதில் ஆழாமல் கழல் புணை தந்து காப்பாற்றிய அற்புதம்

ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப்
போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி
வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 570

 • தையல் முலை தடத்தில் தடுமாறாமல் காத்த அற்புதம் 

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே. 571

 • நான், எனது என்னும் மாயம் கடிந்த அற்புதம் 

பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க்
கருங் குழலினனார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பனை சிலம்பிடத் திருவொடும் அகலாத
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியனே. 572

 • சிலம்பொலியால் ஆண்டுகொண்ட அற்புதம் 

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவிய திரிவேனை
வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே. 573

 • என் நெஞ்சில் தன் ஆட்டத்தை விதைத்த அற்புதம் 

வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பொருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக்
குணங்களுங் குறிகளு மிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 574

 • தன் உமையொடு வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் 

இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 575

 • ஐஞ்செழுத்து ஓதாமல் 
 • முலையார் மேல் ஏறுண்டு கிடப்பேனை - மலரடி காட்டி ஆண்டுகொண்ட அற்புதம் 

ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை
ஓசையா லுணர்வார்க்கு உணர் வரியவன் உணர்வுதந் தொளிவாக்கிப்
பாச மானவை பற்றறுத் துயர்ந்த தன் பரம்பொருங் கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே. 576

 • இருவினை அறுத்து அடியாரொடு கூட்டிய அற்புதம் 

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை
இச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 577

 • மகளிர் விரும்பிய எல்லாம் செய்து கிடந்தேனை, கழல் காட்டி ஆண்டுகொண்ட அச்சன் செயல் அற்புதம்  

செறியும் இப்பிறவிப் பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில்லாத தன் இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 578

 • கிறி = தொண்டு 
 • மகளிர் கண்ணைப் பார்த்துக் கிடப்பேனை மலர்க்கழல் காட்டி அறிவு தந்தது அற்புதம் 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 
41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை
(திருப்பெருந்துறையில் அருளியது)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி