Tuesday, 14 January 2020

திருவாசகம் – திருஉந்தியார் – Tiruvasagam – game balancing on others feet chapter 14

திருஉந்தியார் 


உந்திப்பறத்தல் என்பது சிறுவர்கள் விளையாட்டுகளில் ஒன்று
இருவர் விளையாடுவர் 
3, 4 பேர் விளையாடுவதும் உண்டு 
பாடல் இருவர் விளையாட்டைக் குறிப்பிடுகிது
சிவபெருமான் திறத்தைப் பாடிக்கொண்டே ஆடுகின்றனர் 

ஒருவரின் இரண்டு கைகளையும் மற்றொருவர் பிடித்துக்கொள்வர்
மணிக்கட்டில் பிடித்துக்கொள்வர். 
வலக்கையை வலக்கையால் பிடிப்பர் 
இவ்வாறு பிடிக்கும்போது கை பின்னலாக அமையும் 
ஒருவர் மற்றவரின் பாதங்களில் உதைந்துகொண்டு பின்னால் சாய்வர். 
இந்த நிலையில் சுற்றி வருவர் 
பிடிப்புகள் நழுவினால் விழ நேரும் 

கால்களால் உந்திக்கொண்டு சுழல்வதால் இது உந்திப் பற ஆட்டம்
"உந்தீ பற" என்பது முன்னிலை மொழி 

உந்திப் பறத்தல் விளையாட்டு
இவர்கள் கால்களால் உந்தவில்லை
கலித்தாழிசை

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295

 • வில் வளைந்தது
 • முப்புரம் வெந்தது

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296

 • கையில் ஓர் உம்பு 
 • அதுவும் இல்லாமல் கண்-அம்பால் எரித்தார் 

தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற. 297

 • ஓர் அம்பால் அச்சு முறிந்தது
 • முப்புரம் அழிந்தன 

உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற. 298

 • மூவரையும் தனக்குக் காவலாளியாக அமர்த்திக்கொண்டான் 
 • அவன் இளமுலை உமை பங்கன் 

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருந்திர நாதனுக் குந்தீபற. 299

 • தக்கன் வேள்வியை அழித்தான் 
 • கண் உருத்தி அழித்தான்

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் று தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300

 • திருமாலை உமையாக்கித் தன் பாகமாக வைத்துக்கொண்டான் 
 • அப்போது பிரமன் பிறந்தான் 

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301

 • தக்கன் தன் வேள்வித் தீயை விழுங்க முனைந்தான் 
 • சிவன் தக்கன் கையை வெட்டினான் 

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி யந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற. 302

 • மகள் பார்ப்பதியைப் பகை என்றவனை ஏன் நினைக்க வேண்டும் 
 • அவளைப் பாகமாக்கிக் கொண்டவனை நினைப்போம் 

புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற. 303

 • குயிலாகி மரத்தில் ஏறிக்கொண்டான் 
 • அவன் இந்திரன் 

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சிய வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304

 • வேள்வியில் தக்கன் தலை போய்விட்டது 
 • அதனால் அவன் பிறவி இல்லாப் பேறு பெற்றான் 

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305

 • பிரமன் தலையை வெட்டிவிட்டு ஆட்டுத் தலையை அவனுக்கு வைத்தான் 
 • கொங்கை குலுங்க உந்தீ பற 

உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306

 • தன்னை உண்ண வந்த சூரியன் கண்ணைப் பறித்தான் 
 • நம் பிறவி நீங்க அவனுக்காக உந்தீ பற 

நாமகள் நாசி சிரம்மி மன்படச்
சோமன் முகன் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற. 307

 • நாமகள் மூச்சாகிய சோமன் முகத்தை நெறித்தான் 
 • நம் தொல்லை வினை நீங்கு அவனுக்காக உந்தீ பற  

நான்மறை யோனும் அகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 308

 • பிரமன் அகத்தியன் போகுக் வழி தேடிக்கொண்டனர் 
 • வேள்வி செய்ததால்

சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309

 • சூரியன் தொண்டையை நெரித்து, பற்களைப் பிடுங்குனான் 
 • வேள்வி மயங்கிற்று 

தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310

 • தன் மக்கள் காணும்படி, தக்கன் தலையை இழந்தான் 
 • அவன் வேள்வி மடிந்தது  

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311

 • பாற்கடலைத் தந்தான் 
 • குமரன் தந்தை 

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312

 • பிரமன் தலையைக் கிள்ளினான் 
 • நகத்தால் 

தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313

 • கயிலாய மலையைத் தூக்கியபோது 10  தலை 
 • 20 கை இராவணன் நெறிந்தான் 

ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங்காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314

 • முனிவர்களை ஆகாயத்துக்கு அப்பால் நினைக்க முடியாதவாறு செய்தான் 
 • தான் மட்டும் அதற்கப்பாலும் காவல் கொண்டுள்ளான் 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் - 14.திருஉந்தியார் - ஞான வெற்றி
14. திருஉந்தியார் - ஞான வெற்றி
(தில்லையில் அருளியது)

No comments:

Post a Comment

Blog Archive

எழுத்துப் பிழை திருத்திசந்திப் பிழை திருத்தி
தமிழ் வலைப்பதிவு திரட்டி