Friday, 24 January 2020

திருவாசகம் – பிரார்த்தனைப் பத்து – Tiruvasagam – appealing - chapter 32

பிரார்த்தனைப் பத்து

அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
தொடை - அந்தாதி

வேண்டுகோள்


கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான்
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே. 485

  • உன் அடியாரொடு சேராமல் களித்திருந்தேன் 

அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூழ்கின்றேன்
கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. 486

  • அடியார் சிலர் நின் அருள் பெற்றார் 

அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 487

  • கண்டவர் என்னைப் பித்தன் என்று வெருளாமல் பார்த்துக்கொள் 

வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே. 488

  • நான் வேண்டாமல் தா 

மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா உன்றன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்
தாவி யாக்கை யானெனதென் றியாது மின்றி அறுதலே. 489


அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒளியாய் பிரிவில்லா
மறவா நினையா அளவில்லா மாளா இன்ப மாகடலே. 490

  • புலை நாயேன் 

கடலே அனைய ஆனந்தம் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளித்தியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே. 491

  • நீயே அளிப்பாய் என்று கேளாமல் இருந்துவிட்டேன் 

துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்து
திணியார் மூங்கிற் சிந்தையேன் நின்று தேய்நின்றேன்
அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத்
தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே. 492

  • தொண்டரிடையே புகுந்துகொண்டு வேறு சிந்தனையில் தேய்கிறேன் 

தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா
பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே. 493

  • பேரானந்தம் பேராமை வேண்டும் 

மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா
நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணர்ந்த உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடிவதே. 494

  • சுரைக்குடுக்கை போல என் உள்ளம் வெறுமையாகிக் கிடக்கலாமா 

கூடிக்கூடி உன்னடியார் குளிப்பார் சிரிப்பார் களிப்பாரா
வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உனதடியார் கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
ஆடி ஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே. 495

  • உன் அடியாரொடு கலக்க வேண்டும் 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 

32. பிரார்த்தனைப் பத்து

(திருப்பெருந்துறையில் அருளியது)

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி