Thursday, 30 January 2020

கம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3-6 50

படைச்செலவு


இந்திரன் முதலினோர் எறிந்த மாப் படை
சிந்தின தெறித்து உக, செறிந்த தோளினார்;
அந்தகன், அடி தொழுது அடங்கும் ஆணையார்;
வெந் தழல் உருவு கொண்டனைய மேனியார். 41

  • தீ உருவில் சென்றனர்

குலமும், பாசமும், தொடர்ந்த செம் மயிர்ச்
சாலமும், தறுகணும், எயிறும், தாங்கினார்,
'ஆலமும் வெளிது' எனும் நிறத்தர்; ஆற்றலால்,
காலனும், 'காலன்' என்று, அயிர்க்கு காட்சியார். 42

  • ஆற்றலால் காலனுக்குக் காலன் போன்றவர் 

கழலினர்; தாரினர்; கவச மார்பினர்;
நிழலுறு பூணினர்; நெறித்த நெற்றியர்;
அழலுறு குஞ்சியர்; அமரை வேட்டு, உவந்து,
எழலுறு மனத்தினர்; ஒருமை எய்தினார். 43

  • போரை விரும்பும் மனத்தர்

மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும்,
விருப்புறா, முகத்து எதிர் விழிக்கின், வெந்திடும்;
உருப் பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும்,
செருப் பெறாத் தினவுறு சிகரத் தோளினார். 44

  • எதிர்ப்பார் இல்லாமல் திணவு கொண்டிருக்கும் தோளினர் 

'குஞ்சரம், குதிரை, பேய், குரங்கு, கோள் அரி,
வெஞ் சினக் கரடி, நாய், வேங்கை, யாளி என்று,
அஞ்சுற, கனல் புரை மிகத்தர்; ஆர்கலி
நஞ்சு தொக்கெனப் புரை நயனத்தார்களும்- 45

  • விலங்குகள் அஞ்சின 
  • நச்சுக் கடல் போல் சென்றனர்

எண் கையர்; எழு கையர்; ஏழும் எட்டும் ஆய்க்
கண் கனல் சொரிதரு முகத்தர்; காலினர்;
வண் கையின் வளைத்து, உயிர் வாரி, வாயின் இட்டு
உண்கையில் உவகையர்; உலப்பு இலார்களும். 46

  • உயிரை வாரி உண்ணும்போது உவப்பு கொள்பவர் 

இயக்கரின் பறித்தன, அவுணர் இட்டன,
மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின,
துய்க்கு இல் கந்தர்ப்பரைத் துரந்து வாரின,
நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின. 47

  • இயக்கர், அவணர், அமரர், கந்தர்ப்பர், சித்தர் - ஆகியோரை வென்றவர்கள்

கொடி, தழை, கவிகை, வான், தொங்கல், குஞ்சரம்
படியுறு பதாகை, மீ விதானம், பல் மணி
இடையிலாது எங்கணும் இசைய மீமிசை
மிடைதலின், உலகு எலாம் வெயில் இழக்கவே. 48

  • படை அணிகலன்கள்

எழுவரோடு எழுவர் ஆம், உலகம் ஏழொடு ஏழ்
தழுவிய வென்றியர், தலைவர்; தானையர்-
மழுவினர்; வாளினர்; வயங்கு சூலத்தர்;
உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார். 49

  • 14 படை
  • 14 உலகும் வென்றவை

வில்லினர்; வாளினர்; இதழின்மீது இடும்
பல்லினர்; மேருவைப் பறிக்கும் ஆற்றலர்;
புல்லினர் திசைதொறும்; புரவித் தேரினர்;
சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார். 50

  • படைத்திறன்

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
6. கரன் வதைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி