Wednesday, 29 January 2020

கம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam 3-5 90

மேலும் காம நோயில்


வாம மா மதியும் பனி வாடையும்,
காமனும், தனைக் கண்டு உணராவகை,
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ்
சேம மால் வரையின் முழை சேருமால். 81

  • நிலா, வாடை, காமன் தன்னைக் காணாதிருக்க நாகர் குகைக்குள் சென்றாள்

அன்ன காலை, அழல் மிகு தென்றலும்
முன்னின் மும்மடி ஆய், முலை வெந்து உக,
இன்னவா செய்வது என்று அறியாது, இளம்
பொன்னின் வார் தளிரில் புரண்டாள் அரோ. 82

  • அங்கும் அவள் முலை தென்றலில் வெந்தது

வீரன் மேனி வெளிப்பட, வெய்யவள்,
கார் கொள் மேனியைக் கண்டனளாம் என,
சோரும்; வெள்கும்; துணுக்கெனும்; அவ் உருப்
பேருங்கால், வெம் பிணியிடைப் பேருமால். 83

  • இராமன் உருவமே அவள் நெஞ்சில் நின்றது

ஆகக் கொங்கையின், ஐயன் என்று, அஞ்சன
மேகத்தைத் தழுவும்; அவை வெந்தன
போகக் கண்டு புலம்பும், அப் புன்மையாள்-
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம்கொலோ? 84

  • முலையால் மழை மெகத்தைத் தழுவினாள்
  • மேகம் வெந்து போயிற்று

'ஊழி வெங் கனல் உற்றனள் ஒத்தும், அவ்
ஏழை ஆவி இறந்திலள்; என்பரால்
'ஆழியானை அடைந்தனள், பின்னையும்
வாழலாம் எனும் ஆசை மருந்தினே.' 85

  • ஆசை மருந்தால் அவள் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தாள்

'வஞ்சனைக் கொடு மாயை வளர்க்கும் என்
நெஞ்சு புக்கு, எனது ஆவத்து நீக்கு' எனும்;
'அஞ்சனக் கிரியே! அருளாய்' எனும்;
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள். 86

  • நஞ்சினை நாவால் நக்கியவள் போல நடுவகினாள். 

'காவியோ, கயலோ, எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும்கொலோ?' எனும்-
ஆவி ஓயினும், ஆசையின் ஓய்வு இலாள். 87

  • தன்னைப் பார்க்க மாட்டானா என்னும் ஆசை ஓயவில்லை

'மாண்ட கற்புடையாள் மலர் மா மகள்,
ஈண்டு இருக்கும் நல்லாள் மகள்' என்னுமால்;
வேண்டகிற்பின் அனல் வர மெய்யிடைத்
தீண்டகிற்பது அன்றோ, தெறும் காமமே?' 88

  • காமம் சுடுமல்லவா

ஆன்ற காதல் அஃது உற எய்துழி,
மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம்
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன்
தோன்றினான் என, வெய்யவன் தோன்றினான். 89

  • பொழுது புலர்ந்தது

விடியல் காண்டலின், ஈண்டு, தன் உயிர் கண்ட வெய்யாள்,
'படி இலாள் மருங்கு உள்ள அளவு, எனை அவன் பாரான்;
கடிதின் ஓடினென் எடுத்து, ஒல்லைக் கரந்து, அவள் காதல்
வடிவினானுடன் வாழ்வதே மதி' என மதியா, 90

  • அவன் தம்பியுடன் வழ்வதே மதி - என்று நினைத்தாள்

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
5. சூர்ப்பணகைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி