Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3-4 Added

மிகைப் பாடல்கள்

'தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள்,
தொக்க பதின்மூவரை அக் காசிபனும் புணர்ந்தனன்; அத் தோகைமாருள்,
மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து முக்கோடி விண்ணோர் ஈன்றாள்;
மைக்கருங்கண்திதி என்பாள் அதின் இரட்டி அசுரர்தமைவயிறு வாய்த்தாள். 24-1

  • தக்கனுக்கு 50 பெண்குழந்தை
  • அவர்களில் 13 பேருடன் காசிபன் உடலுறவு கொண்டான் 
  • அவர்களில் அதிதி என்பவள் 33 கோடி தேவர்களைப் பெற்றாள் 
  • திதி என்பவள் 66 கோடி அரக்கர்களைப் பெற்றாள் \ சுரர் - அசுரர்

தானவரே முதலோரைத் தனு பயந்தாள்; மதி என்பாள் மனிதர்தம்மோடு-
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால்; சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள்; தெரிக்குங்காலை,
மானமுடைக் குரோதவசை கழுதை, மரை,ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள் 24-2

  • தனு என்பவள் தானவர் முதலானோரைப் பெற்றாள் 
  • மதி என்பவள் மனிதர்களை வருண வேறுபாடுகளுடன் பெற்றாள் 
  • சுரபி என்பவள் காமதேனுவுடன் கந்திருவர்கைப் பெற்றாள் 
  • குரோதவசை என்பவள் கழுதை, மான், ஒட்டகம் முதலான விலங்கினங்களைப் பெற்றாள் 

மழை புரை பூங் குழல் விநதை, வான், இடி, மின், அருணனுடன் வயிரதேயன்,
தழை புரையும் சிறைக் கூகை, பாறுமுதல் பெரும் பறவை தம்மை ஈன்றாள்;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல், காடை, பல பிறவும் ஈன்றாள்;
கழை எனும் அக்கொடி பயந்தாள், கொடியுடனே செடி முதலாக் கண்ட எல்லாம். 24-3

  • விநதை என்பவள் வான், இடி, மின்னல், சூரியன் மற்றும் கூகை, பருந்து பெரும்பறவைகள் ஆகியவற்றைப் பெற்றாள் 
  • இழை என்பவள் ஊர்க்குருவி, சிவல் காடை முதலான சிறு பறவைகளைப் பெற்றாள் 
  • கழை என்பவள் செடி, கொடி முதலானவற்றைப் பெற்றாள் 

வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி, உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும்மாது இளைஈந்தாள்,செலசரம் ஆகியபலவும்,தெரிக்குங்காலை. 24-4

  • வெருட்டிஇ என்பவள் பணப்பை, வியாளம், கந்துரு, மின்னல் போன்றவற்றைப் பெற்றாள் 
  • சுதை என்பவள் மயக்கம் தருவனவற்றைப் பெற்றாள் 
  • அருட்டை என்பவள் ஓந்தி, உடும்பு, அணில் முதலானவற்றைப் பெற்றாள்
  • இளை என்பவள் சங்கு முதலானவற்றைப் பெற்றாள்

'அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை, கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற
மதி, இளை, கந்துருவுடனே, குரோதவசை, தாம்பிரை, ஆம் மட நலார்கள்,
விதி முறையே, இவை அனைத்தும் பயந்தனர்கள்; விநதை சுதன் அருணன் மென் தோள்,
புது மதி சேர் நுதல், அரம்பைதனைப் புணர, உதித்தனம் யாம், புவனிமீதே 24-5

  • அருணன் அரம்பை புணர்ச்சியில் தான் பிறந்ததாகச் சடாயு கூறுகிறான்

என்று உரைத்த எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித் தொழுது, கண்
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக-
நின்று, மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார். 27-1

  • என்று கூறிய கழுகரசனை இராமன் கண்ணீர் மல்கத் தொழுதான் 
கம்ப இராமாயணம் 3 
ஆரணிய காண்டம் 
4. சடாயு காண் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி