Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3-4 42

சடாயு பாதுகாப்பு


'வேந்தன் விண் அடைந்தான் எனின், வீரர் நீர்
ஏந்து ஞாலம் இனிது அளியாது, இவண்
போந்தது என்னை? புகுந்த என்? புந்தி போய்க்
காந்துகின்றது, கட்டுரையீர்' என்றான். 31

  • தந்தை வேந்தன் இறந்தான் என்றால் நாட்டைக் காப்பாற்றாமல் காட்டுக்கு வந்ததை எண்ணி என் உள்ளம் கலங்குகிறது - என்றான் சடாயு 

'தேவர், தானவர், திண் திறல் நாகர், வேறு
ஏவர் ஆக, இடர் இழைத்தார் எனின்,-
பூ அராவு பொலங் கதிர் வேலினீர்!-
சாவர் ஆக்கி, தருவென் அரசு' என்றான். 32

  • தேவரோ, மன்னரோ, நாகரோ, யாராது தீங்கிழைத்தார் என்றால் அவரைக் கொன்று உன்னை அரசனாக்குவேன் - என்றான் 

தாதை கூறலும், தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன்; அவனும், தன் சிற்றவை-
மாதரால் வந்த செய்கை, வரம்பு இலா
ஓத வேலை, ஒழிவு இன்று உணர்த்தினான். 33

  • என் தம்பியை எண்ணி, தந்தை கூறினார் 
  • சிற்றன்னை செய்க்கை - என்றான் இராமன்

'உந்தை உண்மையன் ஆக்கி, உன் சிற்றவை
தந்த சொல்லைத் தலைக்கொண்டு, தாரணி,
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே!
எந்தை வல்லது யாவர் வல்லார்?' எனா, 34

  • உன் தந்தையை உண்மை பேசுபவன் ஆக்கினாய் 
  • சிற்றன்னை சொல்லைத் தலைமேற் கொண்டாய் 
  • உன் நாட்டை உன் தம்பிக்கு உதவினாய் 
  • இப்படிச் செய்ய வல்லவர் வேறு யார் - என்றான் சடாயு 

அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப்
புல்லி, மோந்து, பொழிந்த கண்ணீரினன்,
'வல்லை மைந்த!' அம் மன்னையும் என்னையும்
எல்லை இல் புகழ் எய்துவித்தாய்' என்றான். 35

  • தந்தையையும், என்னையும் புகழ் பெறுமாறு செய்தாய் - என்றான்

பின்னரும், அப் பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்;
'மன்னர் மன்னவன் மைந்த! இவ் வாணுதல்
இன்னள் என்ன இயம்புதியால்' என்றான். 36

  • சீதையை நோக்கி, இவளுக்கு இந்த நிலை ஏன் - என்றான்

அல் இறுத்தன தாடகை ஆதியா,
வில் இறுத்தது இடை என, மேலைநாள்
புல் இறுத்தது யாவும் புகன்று, தன்
சொல் இறுத்தனன் - தோன்றல்பின் தோன்றினான். 37

  • தடாதகை வதை 
  • வில் எடுத்த திருமணம் - எல்லாவற்றையும் இராமன் சொன்னான்

கேட்டு உவந்தனன், கேழ் கிளர் மௌலியான்;
'தோட்டு அலங்கலினீர்! துறந்தீர், வள
நாட்டின்; நீவிரும் நல்நுதல்தானும் இக்
காட்டில் வைகுதிர்; காக்குவென் யான்' என்றான். 38

  • நீங்கள் காட்டில் இருக்கும்போது உங்களைக் காப்பேன் என்றான்

'இறைவ! எண்ணி, அகத்தியன் ஈந்துளது,
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்
துறையுள் உண்டு ஒரு குழல்; அச் சூழல் புக்கு
உறைதும்' என்றனன் -உள்ளத்து உறைகுவான். 39

  • அகத்தியன் கூறியபடி பஞ்சவடியில் தங்குவேன் - என்றான் இராமன்

'பெரிதும் நன்று; அப் பெருந் துறை வைகி, நீர்
புரிதிர் மா தவம்; போதுமின்; யான் அது
தெரிவுறுத்துவென்' என்று, அவர், திண் சிறை
விரியும் நீழலில் செல்ல, விண் சென்றனன். 40

  • மூவரும் பஞ்சவடி சோலைக்குச் சென்றனர் 
  • சடாயு தன் சிறகுகளை விரித்து அவர்களுக்கு நிழல் தந்துகொண்டே சென்றான் 

ஆய சூழல் அறிய உணர்த்திய
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்
போய பின்னை, பொரு சிலை வீரரும்
ஏய சோலை இனிது சென்று எய்தினார். 41

  • சோலைக்குச் சென்றனர் 

வார்ப் பொற் கொங்கை மருகியை, மக்களை,
ஏற்பச் சிந்தனையிட்டு,-அவ் அரக்கர்தம்
சீர்ப்பைச் சிக்கறத் தேறினன் -சேக்கையில்
பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான். 42

  • கழுகு தன் குஞ்சுகைக் கூட்டில் வளர்ப்பது போல் மூவரேயும் சடாயு பாதுகாத்தான் 

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
4. சடாயு காண் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி