Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-3 30

சுதீக்கண முனிவர்

'ஆவுக்கு ஆயினும், அந்தணர்க்கு ஆயினும்,
யாவர்க்கு ஆயினும், எளியவர்க்கு ஆயினும்,
சாவப்பெற்றவரே, தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார். 21

  • இராமன் சொல்கிறான்
  • \பசுவையோ
  • அந்தணரையோ
  • எவரையோ
  • எளியவரையோ - காப்பாற்ற உயிரை விட்டவர் தேவரே தொழும் தேவர் ஆவார் 

'சூர் அறுத்தவனும், சுடர் நேமியும்,
ஊர் அறுத்த ஒருவனும், ஓம்பினும்,
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென்; வெருவன்மின் நீர்'என்றான். 22

  • அறம் தவறியவரை வேர் அறுப்பேன் - என்றான்

உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட,
இரைத்த காதலர், ஏகிய இன்னலர்,
திரித்த கோலினர், தே மறை பாடினர்;
நிருத்தம் ஆடினர்; நின்று விளம்புவார்; 23

  • இராமன் சொல்லைக் கேட்டு முனிவர்கள் மகிழ்ந்து ஆடினர் 
'தோன்றல்! நீ முனியின், புவனத் தொகை

மூன்று போல்வன முப்பது கோடி வந்து
ஏன்ற போதும், எதிர் அல; என்றலின்
சான்றலோ, எம் தவப் பெரு ஞானமே. 24

  • நீ சினந்தால் உன் முன் நிற்பவர் யார் - என்றனர் 

'அன்னது ஆகலின், ஏயின ஆண்டு எலாம்,
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய்' எனச்
சொன்ன மா தவர் பாதம் தொழுது, உயர்
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான். 25

  • முனிவர் கூறியது கேட்டு இராமன் அங்குத் தங்கியிருந்தான் 

ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு, அவண்,
மைந்தர், தீது இலர் வைகினர்; மா தவர்
சிந்தை எண்ணி, 'அகத்தியற் சேர்க' என,
இந்து - நன்னுதல் தன்னொடும் ஏகினார். 26

  • 10 ஆண்டுகள் கழிந்தன 
  • அகத்தியர் பால் செல்க - என்றனர் 
  • மூவரும் சென்றனர்

விடரகங்களும், வேய் செறி கானமும்,
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார்;
சுடரும் மேனிச் சுதீக்கணன் என்னும் அவ்
இடர் இலான் உறை சோலை சென்று, எய்தினார். 27

  • சுதீக்கணன் சோலைக்குச் சென்றனர் 

அருக்கன் அன்ன முனிவனை அவ் வழி,
செருக்கு இல் சிந்தையர், சேவடி தாழ்தலும்,
'இருக்க ஈண்டு' என்று, இனியன கூறினான்;
மருக் கொள் சோலையில் மைந்தரும் வைகினார். 28

  • சுதீக்கண முனிவன் வரவேற்றான் 
  • அவன் சாலையில் தங்கினர் 

வைகும் வைகலின், மாதவன், மைந்தன்பால்
செய்கை யாவையும் செய்து, 'இவண், செல்வ! நீ
எய்த யான் செய்தது எத் தவம்? 'என்றனன்;
ஐயனும், அவற்கு அன்பினன் கூறுவான்; 29

  • நீங்கள் தங்கியது என் தவப்பேறு - என்றான் முனிவன் 

'சொன்ன நான்முகன்தன் வழித் தோன்றினர்
முன்னையோருள், உயர் தவம் முற்றினார்
உன்னின் யார் உளர்? உன் அருள் எய்திய
என்னின் யார் உளர், இற் பிறந்தார்?' என்றான். 30

  • பிரமன் வழித்தோன்றலே
  • உம்மைக் காட்டிலும் பொருமை மிக்கவர் யார் - என்றான், இராமன் 

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
3. அகத்தியப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி