Monday, 27 January 2020

கம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - KambaRamayanam 3-2 36

மூவரும் முனிவர் இருப்பிடம் வரல்

'வல்லை வரம்பு இல்லாத மாய வினைதன்னால்
    மயங்கினரோடு எய்தி, மதி மயங்கி, மேல்நாள்,
"அல்லை இறையவன் நீ ஆதி" என, பேதுற்று
    அலமருவேம்; முன்னை அறப் பயன் உண்டாக,
"எல்லை வலயங்கள் நின்னுழை" என்று, அந் நாள்
    எரியோனைத் தீண்டி, எழுவர் என நின்ற
தொல்லை முதல் முனிவர், சூளுற்ற போதே,
    தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ? -எந்தாய்!' 31

  • இந்திரன் இராமனைப் புகழ்தல் தொடர்கிறது
  • நீ ஆதி 
  • சூரியனை எரித்தவன் 
  • முனிவர்களின் ஐயம் போக்கியவன் 

இன்னன பல நினைந்து, ஏத்தினன் இயம்பா,
துன்னுதல் இடை உளது என நனி துணிவான்,
தன் நிகர் முனிவனை, 'தர விடை' என்னா,
பொன் ஒளிர் நெடு முடிப் புரந்தரன் போனான். 32

  • இவ்வாறெல்லாம் இராமனைப் புகழ்ந்த இந்திரன் முனிவரிடம் விடை பெற்றுக்கொண்டு தன் உலகுக்குச் சென்றான் 

போனவன் அக நிலை புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான்;
ஆனவன் அடி தொழ, அருள் வர, அழுதான்
தானுடை இட வகை தழுவினன், நுழைவான். 33

  • மீளும் இந்திரனை இராமன் எதிர்கொண்டான் 
  • இந்திரனைத் தொழுதான் 
  • இந்திரனை இராமன் தன் இடப்பக்கத்தில் தழுவினான் 

'ஏழையும் இளவலும் வருக' என, இனிதா
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால்,
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக,
ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான். 34

  • சீதையையும் தம்பியையும் அழைத்துக்கொண்டு இராமன் முனிவர் இருப்பிடம் சென்றான் 

அவ் வயின், அழகனும் வைகினன் -அறிஞன்
செவ்விய அற உரை செவிவயின் உதவ,
நவ்வியின் விழியவளொடு, நனி இருளைக்
கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின். 35

  • முனிவன் அவர்களுக்கு அறவுரை வழங்கினான் 

விலகிடு நிழலினன், வெயில் விரி அயில் வாள்
இலகிடு சுடரவன், இசையன திசை தோய்,
அலகிடல் அரிய, தன் அவிர் கர நிரையால்,
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான். 36

  • பகல் மாறி இரவு வந்தது 

கம்ப இராமாயணம்  3 ஆரணிய காண்டம் -  
2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி