Monday, 30 September 2019

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 75

பாடல் 75
கைக்கிளை
விருத்தம்

பட்ட வேந்தர்தம் பூணொடும் பாவைமார்
நாணெடுந் தெள்ளாற்றில்
வட்ட வெஞ்சிலை நாணிடக் கழித்தவன்
மல்லையின் மயிலன்னாள்
விட்ட கூந்தலும் விழியுநன் முறுவலு
நுதன்மிசை யிடுகோல
மிட்ட பொட்டினொ டிளமுலைப் போமு
மெழுதவு மாகாதே.

தெள்ளாற்றில் வேந்தர்களை வென்றான்
கணவன்மார் தோற்றதற்காக மனைவிமார் நணினர்
அப்போது கொன்ற தன் வில்லுக்காக நந்தியும் நாணினான்
 அவன் மல்லையில் மகளிர் அவனைக் கண்டு நாணுகின்றனர்
இவனோ அவர்கள் முலையில் தன் மார்பால் எழுத நாணுகிறான்
இது சரியா

ஒருத்தி வினா

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 74

பாடல் 74
கைக்கிளை
விருத்தம்

உண்டிரையிற் செங்கழுநீ ரிலஞ்சி மாடே
யொண் பொழிலிற் சண்பகத்தார் தடவி யோடித்
தண்டலையிற் பூங்கமுகம் பாளை தாவித்
தமிழ்த்தென்றல் புகுந்துலவுந் தண்சோ ணாடா
விண்டொடுதிண் கிரியளவும் வீரஞ் செல்லும்
விடேல்விடுகு நீகடவும் வீதி தோறுந்
திண்டறுகண் மாத்தொழுத பாவை மார்க்குச்
செங்கோல னல்லையோ நீசெப் பட்டே.

இலஞ்சியில் செங்கழுநீர்
பொழிலில் சண்பகம்
தண்டலையில் கமுகம் பாளை
மலையில் மூங்கில்
இப்படி எங்கும் தாவி தமிழ்த்தென்றல் உலவும் சோணாடா!
வேங்கடமலை அளவும் வீரம் காட்டும் விடேல் விடுகு!
நீ உன் தறுகண்மா யானையில் உலா வரும் தெருக்களில்
பாவைமார்க்கு மட்டும் செங்கோல் செலுத்த மாட்டாயா

தழுவ ஏங்கும் தலைவி நிலை கண்டு தோழி கூறுதல்

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 73

பாடல் 73
மடல் – பெண் மடலேறுதல் பற்றிக் கூறுதல்
விருத்தம்

கடற்கூதிர் மொய்த்த கழிப்பெண்ணை நாரை
மடற்கூறு தோறு மலிமல்லை கங்குல்
அடற்கூடு சாவே யமையா தவர்வை
திடற்கூறு வேனுக் கேதாவி யுண்டோ.

கூதிர் குளிரில் நடுங்கும் நாரை கூடு கட்டியிருக்கும்
பனை மரத்து மடலால் குதிரை செய்து
அதில் ஏறி ஊர்ந்துவந்து சாவே அமையாது
படும் துன்பத்தை வைதுகொண்டு கூறுவேனுக்கு
ஆவி (உயிர்) ஏது?

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் – என்னும் திருக்குறள் நெறி மாறிய பண்பாடு

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 72

பாடல் 72
கைக்கிளை
வெண்டுறை

வெண்சங் குறங்கும் வியன்மாதர் முற்றத்து விடியவேவான்
வண்சங் கொலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன்
தண்செங்கோ னந்தி தனிக்கு டைக்கீழ் வாழ்வாரின்
கண்சிம் புளியாரோ யாமோ கடவோமே.

சங்கு உறங்கும் முற்றத்தில்
சங்கு வளயல் ஒலிக்க மகளிர் விளையாடுமிடம் மல்லை
இதன் வேந்தன் நந்தி குடைக்கீழ் வாழ்வாரின் கண் சிம்பு
உளி போன்று பாய்கிறது

தலைவன் கலக்கம்

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

உளி

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 71

பாடல் 71
செவிலி கூற்று
கலிநிலைத்துறை

வேண்டார் ண்ணும் வேந்தர் பிராற்கே மெய்யன்பு
பூண்டுஆள் ங்காய் ன்றுஇள் ன்றால் பொல்லாதோ
மூண்டார் தெள்ளாற் றுள்ளே மூழ்க முனிவாரொடு
மீண்டான் ந்திக்கு ன்மகள் தோற்கும் வெண்சங்கே.

வேண்டாம் என்றிருக்கும் நந்தி வேந்தனுக்கே
என்மகள்
மெய்யன்பு பூண்டாள் என்று
அவனிடம் சொன்னால்
பொல்லாதது ஆகிவிடுமா
தெள்ளாற்று வென்று மீண்டவனுக்கு
என் மகள் தன் சங்கு வளையல்களைத் தோற்கும்

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

சங்கு வளையல்

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 70

பாடல் 70
மதங்கி
தரவு கொச்சகக் கலிப்பா

பகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலி
னகையும்வாண் மையும்பாடி நன்றாடு மதங்கிக்குத்
தகையுநுண் ணிடையதிரத் தனபார மவற்றோடு
மிகையொடுங்கா முன்னிக்கூத் தினைவிலக்க வேண்டாவோ.

பகை இல்லாமல் பாரைக் காப்பவன் பல்லவர்கோன் நந்தி
இவன் புன்னகையையும் ஆண்மையையும் பாடி ஆடிக்கொண்டு
மதங்கி (பாண்மகள்) வருகிறாள்
இவள் ஆடும்போது
இவளது முலைகளின் பாரத்தை
இவளது நுண்ணிடை தாங்குமா
இவள் கூத்தாடுவதை விலக்க வேண்டாமா

அழகில் மயங்கும் ஆண்மகன் கூற்று

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

மதங்கி
பாண்மகள்
கூத்தாட்டக்காரி

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 69

பாடல் 69
தலைவன் கூற்று 
விருத்தம்

அரிபயி னெடுநாட்டத் தஞ்சன முழுதூட்டிப்
புரிகுழன் மடமானைப் போதர விட்டாரார்
நரபதி யெனுநந்தி நன்மயி லாபுரியில்
உருவுடை யிவடாயார்க் குலகொடு பகையுண்டோ.

கண்ணில் மை எழுதி
புரிகுழல் மடமான் இவளை
நந்தி மயிலையில்
இவளது தாயர் உலவ விட்டிருக்கின்றர்
அவர்களுக்கு உலகோடு என்ன பகை

இவளைக் கண்டு காளையர் ஏங்கிச் சாகவேண்டும்
என்று நினைக்கிறார்களே

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 68

பாடல் 68
வெற்றிச்சிறப்பு
எழுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திறையிடுமி னன்றி மதில்விடுமி னுங்கள்
செருவொழிய வெங்கண் முரச
மறைவிடுமி னித்த வவனிதனி லெங்கு
மவனுடைய தொண்டை யரசே
நிறைவிடுமி னந்தி கழல்புகுமி னுங்க
ணெடுமுடிகள் வந்து நிகழத்
துறைவிடுமி னந்தி யுறைபதிய கன்று
தொழுமினல துய்ந்த லரிதே.

திறை கொடுங்கள்
அல்லது
மதிலை விட்டு விலகிச் சென்றுவிடுங்கள்
உங்கள் போர் ஒழிய வேண்டும்
நித்தலும் எங்கள் முரசை அறைய விடுங்கள்
உலகெங்கிலும் தொண்டையர் அரசே நிறைந்திருக்கும்
அங்கள் நெடுமுடிகளோடு வந்து நந்தி கழல் புகுமின்
அல்லது ஊரை விட்டு ஓடிவிடுங்கள்
இல்லாவிட்டால் உய்தல் அரிது

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 67

பாடல் 67
தோழியும் தலைவியும் பேசிக்கொள்கின்றனர்
விருத்தம்

ஈகின்றது புனமுந்தினை யாமும்பதி புகுநாள்
கின்றது பருவம்மினி யாகும்வகை யறியேன்
வாழ்கின்றதோர் புகழ்நந்திதன் வடவேங்கடமலைவாய்த்
தேய்கின்றதோ ருவத்தோடு திரிவாரது திறமே.

புனத்தில் தினை அறுவடை தருகிறது
யாம் ஊருக்குள் புகும் நாள் வந்துவிட்டது
பருவம் இனி என்ன ஆகுமோ தெரியவில்லை
நந்தியின் வேங்கடமலையில் திரிவார் திறம்
ஆகும் வகை தெரியவில்லை

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 66

பாடல் 66
சிவனடியான் - தலைவி தலைவன் அளி பெற்றது 
விருத்தம்

பிறைதவழ் செஞ்சடைப் பிறங்கல் நாரணன்
அறைகழன் முடித்தவ னவனி நாரணன்
நறைகெழு தொண்டையோன் றொண்டை கண்டபின்
இறைகெழு சங்குயி ரிவளுக் கீந்ததே.

அவனிநாரணன் நந்தி தொண்டையோன்
பிறையைச் செஞ்சடையில் அணிந்துகொண்டு
வெள்ளிமலையில் இருக்கும் நாரணனாகிய சிவனின்
திருவடிகளைத் தன் முடியில் அணிந்துகொண்டிருப்பவன்
அவன் தொண்டை மாலையைக் கண்ட பின்னர்
இவள் கையிலிருக்கும் சங்கு வளையல்கள்
இவளுக்கு உயிரைத் தந்தன

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 65

பாடல் 65
சம்பிரதம் (கண்கட்டு வித்தை)
கட்டளைக்கலித்துறை

குடக்குடை வேந்தன்றென் னாடுடைமன்னன் குணக்கினொடு
வடக்குடை யானந்தி மானோ தயனிந்த வையமெல்லாம்
படக்குடை யேந்தி பல்லவன் றன்னொடும் பாரறியத்
துடக்குடை யாரையல் லாற்சுடு மோவிச் சுடர்ப்பிறையே.

குடை வேந்தன்
தென்னாடு, குணநாடு, வடநாடு கொண்டவன் நந்தி
வையமல்லாம் குடைநிழலில் ஆளும் பல்லவன்
இவனோடு தொடர்பு உடையவர்க்கு அல்லாமல்
பிறைநிலா சுடுமா

தலைவி தோழியிடம் கூறல்

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 64

பாடல் 64
சம்பிரதம் (கண்கட்டு வித்தை)
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வட்டன்றே நீரிதனை மிகவுங் காண்மின்
மற்றைக்கை கொட்டினேன் மாவின்வித்தொன்
றிட்டன்றே பழம்பழுப்பித் துண்ணக் காண்மின்
இவையல்ல சம்பிரத மிகலிற் றெள்ளாற்
றட்டன்றே பொன்றும்வகை முனிந்த நந்தி
யவனிநா ராயணன்பா ராளுங் கோமான்
குட்டன்றே மழைநீரைக் குடங்கை கொண்டு
குரைகடலைக் குடிக்கிறேன் குடிக்கின்றேனே.

இது மயக்கநிலை என்பதைக் கண்டுகொள்ளுங்கள்
கைக்கொட்டிச் சிரிக்கிறேன்
மாவின் விதையை நட்டு அன்றோ பழத்தைப் பறித்து உண்ணவேண்டும்
அவ்வாறு இல்லாமல் மோடிவித்தை செய்கிறான்
தெள்ளாற்றை முனிந்து அழித்தான்
அவன் நந்தி. அவனிநாராயணன், ஆளும் கோமான்
கடல்நீர் முழுவதையும் கையைக் குவித்து அள்ளிக் குடிக்கின்றானே

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 63

பாடல் 63
கைக்கிளை
கட்டளைக் கலித்துறை

துயக்குவித் தான்றுயில் வாங்குவித் தான்றுயில் வித்திவளை
வயக்குவித் தானுள்ளம் வஞ்சனை யான்மலர்க் காகவகத்து
முயக்குவித் தான்றுகில் வாங்குவித் தான்முன நின்றிவளை
மயக்குவித் தானந்தி மானோ தயனென்று வட்டிப்பனே.

மயக்கமுறச் செய்தான்,
தூக்கத்தை வாங்கிக்கொண்டான்
தூங்கச் செய்தவளை வயப்படுத்திக்கொண்டான்
உள்ள வஞ்சனையால்
தன் தொண்டை மலர்க்காக முயங்கும்படிச் செய்தான்
அவன் நந்தி மானோதயன் (மன்னவன்)
என்று திரும்பத் திரும்பச் சொல்வேன்

தலைவி பிதற்றல்

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

நந்திக்கலம்பகம் Nanthikkalambagam 62

பாடல் 62
வெற்றிச் சிறப்பு - கைக்கிளை
நேரிசை வெண்பா

ஓராதே ன்மகளைச் சொன்னீரே தொண்டைமேல்
பேராசை வைக்கும் பிராயமோ - நேராதார்
ள்வலியாற் கொண்ட ல்ஞாலம் த்தனையும்
தோள்வலியாற் கொண்ட துயக்கு.

எண்ணிப் பார்க்காமல் என் மகளைப்பற்றி ஏதோ சொல்கிறீர்கள்
நந்தியின் தொண்டை மாலையைத் தழுவ விரும்பும் பருவத்தினளா
என் மகள்
மிகவும் சிறியவள் ஆயிற்றே
பகைவர் தம் ஆட்படை வலிமையால் கொண்ட நாடு அத்தனையும்
தொண்டையன் தன் தோள் வலிமையால் கொண்டான் 
என்ற மயக்கத்தில் இப்படிப் பேசலாமா

செவிலி கூற்று

நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட வரலாற்றுச் சிற்றிலக்கியம். பாடியவர் பெயர் தெரியவில்லை. கலம்பகம் என்பது 18 உறுப்புகளைக் கொண்டது. பல்வகை யாப்புப் பாடலகள் அந்தாதியாய் அமைந்துவர நடப்பது.  

Blog Archive

எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி