Wednesday, 24 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1660


பல்லக்கு தூக்கியது
  • தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை – பாடி, திருவையாற்றில் நாவுக்கரசர் இருந்தார். \ 1651 \ 5.1.385
  • நெய்த்தானம், மழபாடி – பாடி, திருப்பூந்துருத்தி வந்தார். \ 1652 \ 5.1.386
  • நடனக் கோலம் கண்டார். \ 1653 \ 5.1.387
  • திருப்பூந்துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப் பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று தாண்டகம், குறுந்தொகை பாடினார். \ 1654     \ 5.1.388
  • உயர்ந்த மடம் ஒன்றைப் பூந்துருத்தியில் கட்டினார். \ 1655 \ 5.1.389
  • பல தாண்டகங்கள், திரு அங்கமாலை – பாடினார். \ 1656 \ 5.1.390
  • அமணரை வாதில் வென்று, அழித்து, தென்னவன் கூன் நிமிர்த்தி, திருநீற்றின் பெருமையை நிலைநாட்டிய ஞானஞம்பந்தர் அங்கு வந்தார். \ 1657 \  5.1.391
  • நாவுக்கரசு இருப்பது அறிந்து ஞானசம்பந்தர் பூந்துருத்தி வந்தார். \ 1658 5.1.392
  • சம்பந்தரை வணங்க நாவுக்கரசு சென்றார். \ 1659    \ 5.1.393
  • கூட்ட நெருக்கத்தில் நாவுக்கரசரைத் தேடி, ஞானசம்பந்தர் கூப்பிட்டார். “அடியேன் பல்லாக்கைத் தூக்கிக்கொண்டு இங்கு இருக்கிறேன்” – என்றார், நாவுக்கரசர். \ 1660 \ 5.1.394

பாடல்

1651 
கண்டு தொழுது வணங்கிக் கண்நுதலார் தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர் 5.1.385

1652 
நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக
மாடு யர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித்
தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந்துருத்தியைச் சேர்ந்தார்     5.1.386

1653 
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வு உறும் தன்மையர் ஆனார்     5.1.387

1654 
திருப்பூந்துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன்ஏற்றுப்
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப
இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி    5.1.388

1655 
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று
பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார்    5.1.389

1656 
பல் வகைத் தாண்டகத்தோடும் பரவும் தனித் தாண்டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும்
செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு
எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் 5.1.390

1657 
பொன்னி வலம் கொண்ட திருப்பூந்துருத்தி அவர் இருப்பக்
கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத்
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார்    5.1.391

1658 
தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப்
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார்    5.1.392

1659 
சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாம் கேட்டு
மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து
கண் பெருகுங் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால்
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார்    5.1.393

1660 
காழியர்கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார்
சூழும் இடைந்திடும் நெருக்கில் காணாமே தொழுது அருளி
வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார்  5.1.394
  • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி