Tuesday, 23 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1600


காஞ்சி - கழுக்குன்றம் - திருவான்மியூர்
  • காஞ்சி மக்கள் நாவுகரசரை வரவேற்றனர். \ 1591 \ 5.1.321
  • ஏகம்ப நாதரை வணங்கினார். \ 1592 \ 5.1.322
  • பதிகம் பாடலானார். \ 1593 \ 5.1.323
  • கரவாடும் வன்நெஞ்சர்க்கு அரியானை – என்று தொடங்கிப் பாடலானார். \ 1594 \ 5.1.324
  • எல்லாச் செந்தமிழ் மாலைகளும் பாடினார். திருமயானத்தை (வெளிக்காடு) விருப்பத்தோடு தொழுது பலநாள் வாழ்ந்தார். \ 1595 \ 5.1.325
  • கச்சி மேல்தளி சென்று பாடினார். \ 1596 \ 5.1.326
  • திருமால்பேறு தொழுது பாடினார். \ 1597 \ 5.1.327
  • மீண்டும் ஏகம்பம் வந்து தொழுது இன்புற்றார். \ 1598 \ 5.1.328
  • திருக்கழுக் குன்றம் சென்று பாடினார். \ 1599 \ 5.1.329
  • திருவான்மியூர் வந்தார். 1600 \ 5.1.330

பாடல்

1591 
எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி
மதில் கொண்டு அணிந்தகாஞ்சி நகர் மறுகு உள் போந்துவானநதி
குதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம் பொன் கோயில் குறுகினார்
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார்ஆண்டதிருநாவுக்கரசர்    5.1.321

1592 
திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து
கருவார்கச்சிஏகம்பர்கனக மணி மாளிகை சூழ்ந்து
வருவார் செம் பொன் மலை வல்லிதழுவக்குழைந்த மணி மேனிப்
பெருவாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப்பேரா அன்பு பெருக்கினார்  5.1.322

1593 
வார்ந்துசொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்பச்
சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத்திருவேகம்பர்தமை
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார்   5.1.323

1594 
கரவாடும்வன்நெஞ்சர்க்குஅரியானை என்று எடுத்துப்
பரவாய சொல் மாலைத்திருப் பதிகம் பாடிய பின்
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்
அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில்புறத்துஅணைந்தார்  5.1.324

1595 
கையார்ந்த திருத்தொண்டு கழியமிகும்காதலோடும்
செய்யாநின்றேஎல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி
மையார்ந்தமிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு
மெய்யார்வம்உறத் தொழுது விருப்பினோடு மேவு நாள்   5.1.325

1596 
சீர் வளரும் மதில் கச்சிநகர்த் திரு மேல் தளி முதலாம்
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள்
ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்ததமிழ்ச் சொல் மலரால்
சார்வுறுமாலைகள்சாத்தித் தகும் தொண்டு செய்திருந்தார் 5.1.326

1597 
அந்நகரில்அவ் வண்ணம் அமர்ந்து உறையும்நாளின் கண்
மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச்
சென்னிமிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித்
துன்னினார்காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால் 5.1.327

1598 
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான்எனப்போற்றிப்
பாகம் பெண் உருவானைப்பைங் கண் விடை உயர்த்தானை
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின்
ஆகந்தோய்அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார்  5.1.328

1599 
திருக்கச்சிஏகம்பம் பணிந்து ஏத்தித்திங்களார்
நெருக்கச்செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார்
வருக்கைச்செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடை போய்ப்
பருக்கைத்திண்களிற்றுஉரியார்கழுக்குன்றின் பாங்கு அணைந்தார்     5.1.329

1600 
நீடு திருக்கழுக்குன்றில்நிருத்தனார் கழல் வணங்கிப்
பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்
சூடும் இனம் பிறை முடியார்தமைத் தொழுது போற்றிப் போய்
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர்மருங்குஅணைந்தார்     5.1.330
  • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive

எழுத்துப் பிழை திருத்திசந்திப் பிழை திருத்தி
தமிழ் வலைப்பதிவு திரட்டி