Friday, 19 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1430


திருப்பாதிரிப் புலியூர்
 • சிவன் கோயில்கள் பலவற்றை கண்டு தமிழ் பாடிக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்றார். \ 1421 \ 5.1.155
 • தில்லையை வணங்கிய பின்னர் திருப்பாதிரிப் புலியூர் வந்தார். \ 1422 \ 5.1.156
 • இங்கு வழிபட்ட பின்னர் மருத வயல்கள் வழியே சென்றார். \ 1423 \ 5.1.157
 • வயல்கள் நீர் நிறைந்து காணப்பட்டன. \ 1424 \ 5.1.158
 • பாசத்தை அணைத்துவிடுங்கள் – என்று குயில்கள் கூவின. \ 1425 \ 5.1.159
 • கிளிகளும் பூவையும் “அரகர” என்று ஒலித்தன. \ 1426 \ 5.1.160
 • தில்லைக் குடதிசை மணிவாயில் பக்கம் வந்தார். \ 1427 \ 5.1.161
 • செல்வக் குடிகள் வாழும் திருவீதி வழியே வந்தார். \ 1428 \ 5.1.162
 • தெருவினைப் பெருக்கிக் கொண்டும், நீர் தெளித்துக்கொண்டும் சென்றார். \ 1429 \ 5.1.163
 • மேலம்பரம் வழிபாட்டுக்குப் பின் ஏழு கோபுர வாயில்களைத் தொழுது, தில்லை கோயிலுக்குள் நுழைந்தார். \ 1430 \ 5.1.164

பாடல்

1421 
வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள
தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம்
கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல்
புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக்கரையே போதுவார்  5.1.155

1422 
ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து
தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார்     5.1.156

1423 
நாவுக்கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால்
மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும்
காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழி வந்தார்
5.1.157

1424 
முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும்
அருகில் செறிவனம் என மிக்குயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப்
பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிக் கண்டு
உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன என முன்புள வயல் எங்கும்
5.1.158

1425 
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர் பிணி உறு பாசம்
பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும்
செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார்
5.1.159

1426 
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலை நின்று உயர் தமிழ் இறையோராம்
இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென்கிளியொடு சிறு பூவை
5.1.160

1427 
அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளி கூரும்
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாறச்
செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால்
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குடதிசை மணி வாயில் புறம் வந்துற்றார்
5.1.161

1428 
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும்
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார்
கல்வித் துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும்
செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை வளர் சிவமே நிலவிய திருவீதி
5.1.162

1429 
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப்
புவனங்களின் முதல் இமையோர் தடமுடி பொருந்திய மணி போகட்டிப்
பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள்
5.1.163

1430 
மேலம்பர தலம் நிறையும் கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும்
கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது ள் புக்கார்
5.1.164
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி