Wednesday, 17 July 2019

பெரியபுராணம்திருநாவுக்கரசர்Tirunavukkarasar1360


பல்லவன் ஆணை
 • பல சமயங்களோடு போராடி வென்ற சமணம் இனி வீழுமே என்ற கவலையுடன் பாடலிபுரத்துச் சமணர்கள் ஒன்று திரண்டனர். 1351 \ 5.1.81
 • வேந்தனும் சைவனாக மாறிவிடுவானே என்று எண்ணினர் \ 1352 \ 5.1.82
 • தருமசேனர் பொய் நாடகம் ஆடினார் – என்று எண்ணினர் \ 1353    \ 5.1.83
 • ஒன்று திரண்டு பல்லவ மன்னனிடம் வந்தனர் \ 1354 \ 5.1.84
 • ஆடை இல்லாமல் அங்கு வந்து, அரசனுக்குத் தெரிவிக்குமாறு வாயில் காவலனை வேண்டினர். 1355 \ 5.1.85
 • சமண சமையம் சார்ந்த பல்லவன் சமணத் துறவிகளுக்கு என்ன நேர்ந்தது எனக் கவலை கொண்டான். 1356 \ 5.1.86
 • தருமசேனர் உன் சமயத்தை விட்டு விலகிவிட்டார் – என்றனர் \ 1357 \ 5.1.87
 • சூலை நோய் என்று பொய்யாக நடித்து மாறினான். இதற்கு என்ன செய்யலாம் - என்று மன்னன் கவலை கொண்டான் \ 1358 \ 5.1.88
 • கொலை செய்ய வேண்டும் – என்று அமணர் எண்ணியிருந்தனர். \ 1359 \ 5.1.89
 • இவர்கள் சொன்ன தீயோனைத் தண்டிக்க வேண்டும். என் முன் கொண்டுவருக – என்றான் மன்னன் \ 1360 \ 5.1.90
பாடல்

1351 
மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால்
நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக்
கொலையும்பொய்மையும்இலம் என்று கொடுமையேபுரிவோர்
தலையும்பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார்  5.1.81

1352 
இவ்வகைப் பல அமணர்கள்துயருன்ஈண்டி
மெய் வகைத் திறம் அறிந்திடில்வேந்தனும்வெகுண்டு
சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம்
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் 5.1.82

1353 
தவ்வை கைவத்துநிற்றலின் தரும சேனரும் தாம்
பொய் வகுத்தது ஓர் சூலைதீர்ந்திலதுஎனப் போய் இங்கு
எவ்வமாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர் எனச்சொலத்தெளிந்தார்     5.1.83

1354 
சொன்ன வண்ணமே செய்வது துணிந்ததுன்மதியோர்
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார்    5.1.84

1355 
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர்
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள்
அடைய வந்தமைஅரசனுக்குஅறிவியும் என்ன
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் 5.1.85

1356 
அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து
கொடி நுடங்குதிருவாயில்புறத்துஅணைந்தார்எனக் கூற
வடி நெடுவேல்மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால்
கடிதுஅணைவான்அவர்க்கு உற்றது என் கொல் எனக்கவன்று உரைத்தான்  5.1.86

1357 
கடை காவல் உடையார்கள்புகுதவிடக் காவலன் பால்
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு
உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச்
சடையானுக்குஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார்    5.1.87

1358 
விரை அலங்கல்பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து
புரை உடைய மனத்தினராய்போவதற்குப்பொய்ப் பிணி கொண்டு
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே
கரையில்தவத்தீர்இதனுக்கு என் செய்வது எனக்கனன்றான் 5.1.88

1359 
தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை
அலை புரிவாய்எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார்
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர்     5.1.89

1360 
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடிஅறிவென்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமைநோக்கித்
தெருள்கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச்செறுவதற்குப்
பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும்எனப்புகன்றான்    5.1.90
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி